Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, October 27, 2016

குஷ்புவும் -ஸ்ரேயாவும் (சிறுகதை)


மாலை டிஃபனுக்கு பின் அந்த நடுத்தர ஓட்டலில் இருந்து வெளியே வந்து நின்ற போது தான் அவள் எதிர்ப்பட்டாள்.

அவளை இந்த நிலையில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. இரண்டே வருடங்களில் இத்தனை மாற்றமா?

அவள் அப்பா பெரிய தொழிலதிபர். கல்லூரி காலத்தில் புசுபுசுவென்று இருப்பாள்.அவளை காலையில் ட்ராப் செய்ய ஒரு காரும்.. மாலையில் பிக் அப் செய்ய ஒரு காரும் வரும்.

என்னதான் மனதில் காதல் பொங்கி வழிந்தாலும் தூக்கத்தில் கூட அதை உளறிவிடமுடியாத நடுத்தர குடும்பத்து அக்மார்க் ஹிப்பாக்ரட் நான். படித்து முடித்து அதே கல்லூரியில் லெக்சரனாக குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன்.

கல்யாணம் கட்டி ஒன்னுக்கு இரண்டாய் குழந்தைகள். என் வரை திருப்தியான வாழ்க்கை தான். வருவது அவள் தானா? என்ற சந்தேகத்தில் பவர் க்ளாஸை கழட்டி துடைத்து போட்டு கொண்டேன். போன வருசம் தான்  ஷுகர்  ஆஜர் சார் சொல்லியிருக்க - வாயை கட்டா விட்டால்  மாத்திரைகளில் இருந்து சீக்கிரமே இன்சுலினுக்கு மாற வேண்டி வரும் என்று டாக்டர் பயமுறுத்தி இருக்கிறார்.

அவளே தான். ஒல்லியோ ஒல்லியாக பழைய குஷ்பு தனம் எல்லாம் ஆவியாகி ரொம்பவே இளைத்திருக்கிறாள். வசதியான இடத்தில் தானே திருமணம் கூட தகைந்தது?

குழம்பிப்போய் சிந்தித்து கொண்டிருந்த வேளை அருகில் வந்து என் தோளை தட்டி "ஏய்.. நீ டபுள்யு.ஆர் .ராஜேஷ் தானே? என்ன இது ரெண்டு வருசத்துல பவர் க்ளாஸு ,தொந்தி எல்லாம் வச்சு அங்கிள் மாதிரி ஆயிட்டிருக்கே " என்றாள்.

 கிட்டே இருந்து பார்க்கையில் லேசாக  ஸ்ரேயா போலத்தான் தெரிகிறாள்.

நான் அதிர்ந்து போய் -சமாளித்து கொண்டு "அது சரி ..நீ என்ன இப்படி இளைச்சிருக்கே? எனி ப்ராப்ளம்" என்றேன்.

அவள் "பேலியோ மேன்" என்றாள்.




Sunday, November 18, 2012

எதை இழந்தால் எதை பெறலாம்?

அண்ணே வணக்கம்ணே !
எதை இழந்தால் எதை பெறலாம்னு ஒரு மேன்யுவலே தந்துரலாம்.இந்த மென்யுவலுக்கு அடிப்படை என்னனு கேப்பிக. கடைசி பாரா வரை படிச்சிங்கனா தெரிஞ்சுக்கலாம்.

அதை படிச்சும் புரிஞ்சுக்காத பார்ட்டிங்களுக்கு ஒரு சிறுகதைக்கான சுருக்கத்தையும் தந்திருக்கேன். ஆக்சுவலா இன்னைக்கு சூரியனுடனான பேட்டி தொடர்ந்திருக்கனும். நாம முக நூல் நண்பர்களோட பொருளுதவியோட அச்சிட்ட ஸ்ரீ அம்மன் சத நாமாவளி ( கையடக்க பதிப்பு) பிரதிகளை வேலூர் வாழ் தமிழ்மக்களுக்கு இலவசமா வினியோகிக்க களத்தில் இறங்கினமா பழைய ஞா எல்லாம் கூகுள் சர்ச் ரிசல்ட் கணக்கா கொட்டோ கொட்டுன்னு கொட்டிருச்சு.

இந்த ஞாபகங்களை பினாத்தி தொலைக்கலின்னா ராத்தூக்கம் ஃபணால் ஆயிரும். அதனாலதேன் டைவர்ட் ஆயிட்டம்.

சின்ன வயசுல பல் விளக்காம டிஃபன் தின்னதுக்கு அண்ணன் வைய ரிட்டர்ன் டிக்கெட் இல்லாம போனது. நடந்தே திரும்பினது. அப்பம் டிக்கெட்டு ரூ.1.90

அதுக்கும் சின்ன வயசுல அம்மா வழி பணக்கார சொந்தங்களோட வீட்டுக்கு போனது . நினைவு தெரிஞ்ச பிறவு சாதி சங்க பிரமுகனோட 3 நாள் கண்ணாலத்துக்கு போனது. ஏதோ ஒரு கண்ணாலத்துக்கு போயி பாக்யராஜின் மொத படத்தை பார்த்தது ( தந்தன தந்தன தாளம் வரும் .. புதிய வார்ப்புகள்? 1979 ? )

ரஜினி படம் பார்க்க சைக்கிள்ள போயி டிக்கெட் கிடைக்காம டி.ராஜேந்தர் படம் பார்த்தது. இன்னொரு பயணத்துல ஒரு ஷோ கமல் படம் , ஒரு ஷோ ரஜினி படம் பார்த்தது.. மிஸ்டர் பாரத் படத்துல மிஸ்டர்.பாரத் சினிமால காமராஜர் மாதிரி ஒரு கெட்டப்,ராஜீவ் மாதிரி ஒரு கெட்டப்,இவரோட அம்மாவுக்கு இந்திராகாந்தி மாதிரி பில்டப் எல்லாத்தயும் பார்த்ததுல ங்கொய்யால அவனா நீயின்னுட்டு கழண்டுக்கிட்டதும் வேலூர்லதேன்.

அந்த காலத்துல காங்கிரசுன்னா அப்படி ஒரு அலர்ஜி. இடையில ஒய்.எஸ்.ஆர் ங்கர பிம்பம்  காங்கிரசோட அழுகலை மறைத்திருந்ததே தவிர காங்கிரசுன்னா அன்னைக்கும் இன்னைக்கு என்னைக்கும் உவ்வே தான்.

ஒரு தாட்டி நம்ம நண்பரும் -அவரோட பெரியப்பா பையனும் தங்கள் டூ வீலரை மாத்திக்கிட்டாய்ங்க. வீட்ல உள்ளவுக கடும் எதிர்ப்பு தெரிவிக்க மறுபடி மாத்த ஒரு தாட்டி டூ வீலர்ல போயிருக்கம்.( வாணியம்பாடி வரை)

1984 ல் அம்மாவுக்கு கான்சர் வந்து - சி.எம்.சிக்கு  ஷட்டில் பயணங்கள் தனிக்கதை .1992 ல் அதே ரூட்டில் தினசரி 20 சிங்கிள் அடிச்சதும் உண்டு. ப்ரைவேட் பஸ்ல செக்கிங். ஆஃப்டர் ஆல் கண்டக்டரா இருந்த ரஜினியே சூப்பர் ஸ்டாராயிட்டாருன்னா செக்கிங்கா இருக்கிற நாம சூஊஊஊஊஊஊப்பர்  ஸ்டார் ஆகாம போயிருவமான்னு ஒரு நப்பாசை.

2004 ல் ஒரு விக்டிமுக்காக பஞ்சாயத்து பண்ண ரெகுலர் ட்ரிப் அடிச்சது அது ஒரு கால கட்டம். 2007 ல தினத்தந்தியில நிருபரா குப்பை கொட்டின காலத்துல மாசத்துக்கு ரெண்டு தாட்டியாச்சும் வேலூர் கட்டாயம்.

எப்பயாச்சும் இன்டிரியர் தமிழ் நாடு போயிட்டு வேலூர் திரும்பி வந்தா போதும். சொந்த ஊருக்கு வந்துட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். 

இடையில ஒரு தடவை மட்டும் நம்ம  பேப்பர் பிரிண்டிங்  (மல்ட்டிகலர்) விஷயமா  போய் வந்தது ஞா வருது. மத்தபடி கடந்த 3 வருடங்களா நோ வேலூர். நோ பயணம். 2011 புத்தக கண்காட்சி , 2012 பதிவர் சந்திப்பு தவிர வேற ஏதும் பயணம் பண்ணதா ஞாபகமில்லை.

ஆக்சுவலா பயணம்னாலே பயங்கர கடுப்பு. மொத காரணம் நாம செயின் ஸ்மோக்கர் .அதுவும் இங்கன புகை பிடிக்க கூடாதுன்னு போர்டை பார்த்தா உடனே பரபரக்கும். புகைக்க வாய்ப்பிருக்கும் இடத்துல நாள் கணக்கா கூட பிடிக்காம இருந்திரலாம் அதுவேற கதை. அல்லாரும் த்ரூ பஸ்ஸுக்கு தவமிருந்தா நாம பிட்டு பிட்டா பயணம் பண்றதும் உண்டு.

ஃப்ளாஷ் பேக் எல்லாம் இருக்கட்டும் போன வேலை என்னாச்சுன்னு கேப்பிக. சொல்றேன்.சிஷ்ய பிள்ளை ஒருத்தனோட பிக் ஷாப்பர்ல 2ஆயிரம் பிரதிகளோட காட்பாடியில லேண்ட் ஆனோம். சிஷ்யன் நம்ம பேப்பரை வினியோகிச்சு ட்ரெய்ன் ஆனவங்கறதால பிரச்சினை இல்லை. கோடு போட்டா ரோட்டே போட்டுருவான்.

காட்பாடி ரவுண்டானாவை பைசல் பண்ணிட்டு ஆட்டோ பிடிச்சு ........ ஷேர் ஆட்டோதேன் (ரூ.10 வாங்கிட்டான் -ஹூம் ..2009 வரை ரூ .5 தேன். எத்தீனி தபா போயிருப்பம்) புது பஸ் ஸ்டாண்டு.பஸ் ஸ்டாண்டுன்னாலே சுஜாதா சொல்ற மாதிரி வர்ஜியா வர்ஜியமில்லாம புஸ்தவங்க தொங்கனும். இங்க என்னடான்னா என்ட்ரன்ஸ்ல இருந்த கடைகளையெல்லாம் சாலை விரிவாக்கம் சாப்டாச்சு போல.விதவிதமான சனத்தை நாம அப்சர்வ் பண்ணிக்கிட்டிருக்க சிஷ்யன் புகுந்து விளையாடிக்கிட்டிருந்தான்.

ஒரு அரை லிட்டர் ஃபேன்டா அவனை சுறு சுறுப்பாக்கிருச்சு. நம்ம ஊர்ல எல்லாம் ரூ.6 க்கு ஃப்ரூட் மிக்சர் தீர்ந்தது கதை. அங்கன இருந்து பின் வழியே வந்து  மறுபடி ஆட்டோ பிடிச்சு  சி.எம்.சி. மார்க்கெட் போன பிற்காடு நடிகைங்க சீரியல்ல வர்ராப்ல பழைய பஸ் ஸ்டாண்டு டவுன் சர்வீஸுக்கு மட்டும்னு ஆயிட்டாப்ல இருக்கு. சொம்மா சொல்ல கூடாது .சனம் அம்முது.

இங்க மட்டும் பெரிய புஸ்தவ கடையே இருந்தது. சொந்த பணத்தோட வந்திருந்தா கடைய காலி பண்ணியிருக்கலாம்.வினியோகம் முடிஞ்ச பிறவு லாங்கு பஜார்,நேத்தாஜி மார்க்கெட் ,ஜுவெல்லரி லைன் எல்லாம் பார்த்துக்கிட்டு தேன் கிளம்பினோம்.மறுபடி புது பஸ் ஸ்டாண்டு . மறுபடி புதிய பயணிகளுக்கு வினியோகம். ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.

ஆத்தாவுக்கு கடன் சொல்ட்டு ஆத்தா காசுல ஆழம்னு ஒரு புஸ்தவம் வாங்கினேன். அட்டையில மோடி .பக்கமெல்லாம் மோடி மயம்.படிச்சுட்டு சொல்றேன்.

போன திங்கள் கிழமை ( நவம்பர் 12 ) சத்யாங்கற நண்பரும்  நானும்  கார்ல புறப்பட்டோம். . (அவரோட சொந்த கார்) கிரீம்பேட்டையிலயே டயர் பஸ்ட். ஸ்டெப்னி மாத்திக்கிட்டு போனதும் தெரியலை.வந்ததும் தெரியலை.ஹோட்டலுக்கு அலைஞ்சது மட்டும் தேன் ஞா இருக்குது.

வேலூர் டு காட்பாடி பார்த்துக்கிட்டே வந்து - மறுபடி வேலூர் போயி உப்பில்லாத எண்ணெய் இல்லாத ரொட்டியும் - மாசக்கடைசியில பொஞ்சாதி மூஞ்சி மாதிரி தம்தூண்டு. இதுல  படு காரமா சால்னாவும்,பட்டாணியும்  வேற  தின்னம்.   (  பஞ்சாபியாம்)

ஆனால் இன்னைக்கு   ரூ.45 க்கு பை டூ நூடுல்ஸ் (+சிக்கன்) ப்ளெசன்டா  அடிச்சுட்டு ஒரு தம் போட்டதுல ஆத்தா சவாரி பண்ற சிங்கத்தோட கர்ஜனை கேட்டது.

இன்னைக்கு போறச்சயும் வரச்சயும் ஆந்திர அரசு பேருந்து (லொட லொடன்னு சத்தம் கேட்குமே தவிர பாடி  செமை ஸ்ட்ராங்கு  விபத்தே நடந்தாலும் .சாமானியமா சாவு  நடக்காது. பொடி நடையா நடந்து போயி கவுர்மென்டு ஆஸ்பத்திரி பெட்ல படுத்துக்கலாம்.

அன்னைக்கு சல்லுன்னு ஏசி கார். தின்டிக்கு  டிக்கானா இல்லை. இன்னைக்கு ஜஸ்ட் ரூ.22.50 பைசால  ஹெவன்லி ஃபுட்.

என்ன காரணம்?  சுக்கிரன் தான் வாகன காரகன் .அதே சுக்ரன் தான் அறுசுவை உணவுக்கும் காரகன்.

சிறுகதைக்கான சுருக்கம்:

லட்சுமி காந்தன் பரம்பரை பணக்காரர். என்னென்னமோ தொழிற்சாலைகள் . தலை நகரின் வி.ஐ.பி ஏரியாக்கள் ஒவ்வொன்றிலும் கடல் மாதிரி வீடுகள்.  சொம்படித்து நூல் வெளியீட்டு விழாக்களுக்கு ஸ்பான்சர் பண்ணும்படி இன்டென்ட் போடும் எழுத்தாளர்கள் சகவாசத்தால் அவருக்கும் எழுத்தார்வம் வந்துவிட்டது.

மூடு வந்தா  எதையாவது எழுத மட்டும்  நகரின் நாலு மூலையில் கெஸ்ட் ஹவுஸ் வச்சிருக்காரு. அவரிடம் குவிந்திருந்த பைசா  பெரிய எழுத்தாளர்ங்கற சர்ட்டிஃபிகேட்டை பெரிய பெரிய எழுத்தாளர்களிடமிருந்தே கிடைக்க செய்து விட்டது.  எல்லா பரிசுகளும் பெற்று அலுத்து இன்னைக்கு பரிசு வழங்கும் கமிட்டிகளில் இருக்கிறார்.

தங்கப்பேனாவால் தான் எழுதுவார். எத்தனையோ "சேர்க்கைகள்" இருந்தாலும் ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும்  மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கான பள்ளியில் வேலை செய்யும் - திமிர் பிடித்த கவிதாயினி ரசிகா மீது மட்டும் ல.காந்தனுக்கு தீராத மையல்.

மேற்படி தொண்டு  நிறுவனம் அணு உலை எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட மானில அரசு கிடுக்கிப்பிடி  போட
மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் ரோட்டுக்கு வரும் நிலை.

ரசிகா ல.காந்தன் உதவியை நாட -அவர் ரசிகாவின் உதவியை (?) நாட குவிட் ப்ரோக்கோ அடிப்படையில் ரசிகா புதிய சேர்க்கையாக ஒரு கெஸ்ட் ஹவுசில் ஸ்திரவாசம்.

ல.காந்தன்  படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு அகில உலக புகழ் பெற  திட்டமிடுகிறார். யாரோ   நாமகனை அறிமுகப்படுத்த அவனை மொழிபெயர்ப்பு வேலைக்கு அமர்த்துகிறார்.  நாமகனின்  அசலான பெயரை சொன்னால் வம்பு வரும். எனவே அம்பேல். மொத்தத்துல கிராமத்துல இருந்து வந்தவன்.  நினைத்த போது வெளிவரும் சிற்றிதழ்களின் நாயகன்.  அவன் மனைவி  கார்த்திகாவின் குளோனிங் கணக்கா இருப்பாள்.

நாமகன்,கார்த்திகா அவுட் ஹவுசில் இருக்க, ரசிகா கெஸ்ட் ஹவுசில் இருக்க , லட்சுமி காந்தன் முதல் பார்வையிலேயே  உலகப்புகழ் லட்சியத்தை ஒத்தி வைத்துவிட்டு - கார்த்திகா குறித்த கட்டில் கனவுகளில் மிதக்கிறார்.

இதன் முடிவு என்ன ? அந்த முடிவுக்கு ஜோதிட ரீதியிலான காரணங்கள் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்




.

Sunday, January 2, 2011

கில்மா சிறுகதை: 3 (பாகம்:2)

அண்ணே வணக்கம்ணே,
இது கடந்த பதிவில் எழுதிய கில்மா சிறுகதையின் பார்ட் :2 பார்ட் ஒன்னை படிக்கலைன்னா /ஞாபகமில்லேன்னா இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க .அப்பத்தேன் புரியும்.

மறு நாள் டாக்டர் ஜெயதேவுக்கு ஃபோன் செய்தேன். "வாங்க..பேசுவோம்" என்றார்.சென்றேன்.எங்களிடையில் இடம் பெற்ற உரையாடலை ( ஒரு சில வெட்டுக்களுடன்- அதாவது குசல விசாரிப்பு -பழைய கேஸ்கள் குறித்த ஃபாலோ அப்ட்ஸ் ) அப்படியே தருகிறேன்.

"டாக்டர் ! பண்டரியோட ஹெரிடட்டரி எனக்கு  நல்லா தெரியும். அவங்க ஹெரிடட்டரியிலயே இதெல்லாம் கிடையாது. எனக்கென்னமோ இது சைக்கலாஜிக்கல் ப்ராப்ளமோனு தோணுது"

" மேபி.. மொதல்ல  நீங்க அவங்க குடும்பத்தை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது.பண்டரி உங்க கிட்டே ஷேர் பண்ணிக்கிட்டது எல்லாத்தயும் ஒன்னு விடாம சொல்லுங்க"

"சார்.. பண்டரி முழுமையான ஆண்மகன்.அவங்க வைஃப் ஹோம்லி லுக். இந்த  நடுத்தர வயசுலயும் சின்னதா  சிவக்கக்கூடிய கன்னம். சராசரி குடும்பத்தலைவி. மொதல்ல ஒரு பெண் குழந்தை. அதுக்கு சின்னவயசுல அம்மை போட்டு அந்த தழும்புகள் நிரந்தரமா  முகத்துல தங்கிருச்சு"

" ம்...ம் மேல சொல்லுங்க"

" அடுத்து ஒரு ஆண் குழந்தை. அவனுக்கு எந்த பிரச்சினையுமில்லேன்னாலும் பக்கத்து போர்ஷன் பெண் மேல ஒருதலைகாதல் . இதே யோசனையில பத்தாம் கிளாஸ்ல 3 தாட்டி குண்டு. பண்டரியோட கூட மாட இருப்பான். ஒரு வேலை  சொந்தமா செய்யமாட்டான். காடா தாடி வளர்த்துக்கிட்டு கலங்கலா பார்த்துக்கிட்டு இருப்பான். கஞ்சா கிஞ்சா அடிக்கிறானோன்னு ஒரு சம்சயம். அடுத்து ஒரு பையன் .அடிச்சு பிடிச்சு இண்டர் வரை வந்துட்டான். அண்ணன் பொசிஷனை பார்த்தோ என்னமோ பெண்களை ஏறெடுத்து பார்க்கமாட்டான். வாரத்துக்கொரு குப்பி ஃபேஸ் க்ரீம் வாங்குவான்.தினசரி ஷேவ் பண்ணுவான்.டீக்கா ட்ரஸ் பண்ணுவான்.சினிமாபார்ப்பான் .வேலை வெட்டி எதுவும் கிடையாது.ஐ திங்க் அவன் சுய இன்ப பிரியனா இருக்கலாம்."

"ஓகே முகேஷ் வீட்டு ஆண்களை பத்தி விலாவாரியா சொல்லிட்டே பெண்கள் பத்தி இன்னம் எதுனா அடிஷ்னல் இன்ஃபர்மேஷன் இருந்தா நல்லது"

"முதல் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாரு.வந்தவனெல்லாம் அந்த பெண்ணோட முகத்துல இருக்கிற அம்மையை மட்டும் பார்த்துட்டு வாய் கூசாம லட்சக்கணக்குல வரதட்சிணை கேட்டாய்ங்க. இதுல அந்த பெண் கொஞ்சம் போல அப்செட். நம்ம பண்டரியும் தான்"

"இந்த மேட்டர்ல அந்த மதரோட நிலை என்ன?"

"உள்ளுக்குள்ள வச்சு குமைவய்ங்க போல"

"பண்டரி, மற்றும்  அவரோட வைஃபோட அதர்  ஆக்டிவிட்டீஸ்  பத்தி எதுனா தெரிஞ்சா சொல்லுங்க"

"அதர் ஆக்டிவிட்டீஸ்னா.. பண்டரி தினசரி ஏதோ ஒரு  கோவிலுக்கு விசிட் அடிப்பாரு. ரெண்டு மூணு கோவில்களுக்கு மாலை கூட போடுவார். வள்ளலார் மேல ஆர்வம் அதிகம். ஏதோ சங்கம் மாதிரி வச்சு வாரம் ஒருதடவை கூட்டம்லாம் போடுவாரு.மதருக்கும் பக்தி சாஸ்தின்னுதான் சொல்லனும். தினசரி பூஜை ரூம்ல உட்கார்ந்து சின்ன சின்னதா புஸ்தவங்கள் வச்சிக்கிட்டு முணுமுணுன்னு படிச்சுக்கிட்டிருப்பாய்ங்க"

ஜெயதேவ் , மாடிக்கு போலாம் வாங்கன்னாரு. தொடர்ந்தேன். சிகரட் பாக்கெட்டை நீட்டினார். கவர்ந்து பற்றினேன். அவருக்கும்.

சுருள் சுருளாய் புகை விட்டபடி ஜெயதேவ் பேச ஆரம்பித்தார்.

"இன்னைக்கு இங்கே  பந்த் /கர்ஃப்யூ /144 இப்படி எதுனா இருந்திருந்தா நீ புறப்பட்டிருப்பயா?"

"நோ "

"அதே வேலையதான் அந்த பெண்ணோட உடலும் செய்திருக்கு. பண்டரிக்கும் அவரோட மனைவிக்கும் இடையில  இயல்பான செக்ஸ் லைஃப் இல்லாம இருக்கும்னு  நினைக்கிறேன். இல்லாட்டி நான் ஸ்டாப்பா  இத்தனை கோவில்,பக்தி எல்லாம் சாத்தியமே இல்லை.அதுவும் இந்த 40  அ 45 ரேஞ்சு வயசுல.  அவங்களோட செக்ஸ் லைஃப் பாதிக்கப்பட பெரிய பெண்ணோட திருமண பிரச்சினையும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். பண்டரி ஆண் பிள்ளை .வெளிய போயிர்ராரு. ஆனால் அவரோட வைஃப் வீட்டோட தான் இருக்கனும். மிஞ்சிப்போனா கிட்டத்துல இருக்கிற கோவிலுக்கு போகலாம். தன் தாயோட நிலைய அந்த பெண்குழந்தை சூட்சுமபுத்தியோட க்ராஸ்ப் பண்ணியிருக்கலாம்.இது  பாய்ண்ட் நெம்பர் ஒன். அம்மாவோட டெப்ரஷன்,தன்னிரக்கம், சில சமயம் எரிச்சல் .

ஆனா பண்டரி ஏஸ் எ மேல் செக்ஸ் இல்லாத  குறைய மறக்க அ அதை இன்னபிற ஆக்டிவிட்டீஸால நிரப்ப வாய்ப்பிருக்கு.ஆனால் அவரோட வைஃபுக்கு அது இல்லை. ஸோ பண்டரி மே பி கூல்.  காதல் தோல்வி அண்ணன் .அவனும் ஒரு எஸ்கேப்பிஸ்ட் தான் சுகஜீவனம். அடுத்த அண்ணன் ஃபேஸ் க்ரீம் பார்ட்டி .அவன் பாடும் அவிழ்த்து விட்ட மாடு மாதிரி.

வீட்ல உள்ள பெண்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்க ( அக்கா +அம்மா) ஆண்கள் எல்லாம் எஸ்கேப்பிஸ்டுகளாகி சொகமா இருக்க அந்த பெண்ணுக்கு தான் ஏன் பெண்ணா பிறந்தோம்ங்கற இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருந்திருக்கலாம். மைண்ட்  ஃபேண்டசிக்கு போயிருச்சு. வலுவான எண்ணங்கள் பாடி மேல வேலை செய்ய போதுமான வளர்ச்சி,அடையாளங்கள் இல்லாம போயிருக்கலாம்"

" ஓகே டாக்டர் பிரச்சினை இதுன்னு கெஸ் பண்ணிட்டிங்க.இதுக்கு என்ன சொல்யூஷன்?"

"மொதல்ல பெரிய மகளுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி எதுனா ட்ரை பண்ணி கண்ணாலம் கட்டி துரத்தச்சொல்லு"

"ஓகே"

"மொதல் அண்ணனை செருப்பாலடிச்சு கண்ணாலம் பண்ணி தனிக்குடித்தனம் வைக்க சொல்லு"

"ஓகே"

"ரெண்டாவது அண்ணனை  பண்டரி தன் வேலையில ரெய்ன் பண்ணட்டும். முடிஞ்சா அவனுக்கும் கண்ணாலம் தனிக்குடித்தனம்"

"ஹேண்ட் பை ஹேண்ட் பண்டரி கோவில் குளத்தையெல்லாம் விட்டுத்தொலைச்சுட்டு செக்ஸ் லைஃபோட செகண்ட் இன்னிங்சை துவக்கட்டும்.."

"ஓகே டாக்டர்.. இதுக்கும் அந்த பெண் மீசை வரைஞ்சுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?"

"முட்டாள் ! அவள் கண் முன்னாடி எல்லா பெண்ணும் (அக்கா,தாய்)  கண்ணீர் விட்டுக்கிட்டிருக்காங்க. எல்லா ஆண்களும் (அப்பா,இரண்டு ஆண்கள்) பிரச்சினைலருந்து,வாழ்க்கையிலருந்து தப்பிச்சுக்கிட்டு சொகம்மா காலம் கழிக்கிறாங்க. அவள் மனசு சுருங்கி போச்சு. ஆமை மாதிரி தன் இயல்பான கிளர்ச்சிகளை,ஆவலை ஓட்டுக்குள்ள சுருக்கிக்கிட்டா.. ஆணா மாறிட்டா தனக்கு எந்த பிரச்சினையுமில்லைங்கற ஃபேண்டசில இறங்கிட்டா.அவளோட எண்ணம் வலிமையா இருந்ததால பாடி அதை ஒபே பண்ணிருச்சு"

Friday, December 31, 2010

கில்மா சிறுகதை: 2

1-1-2011
டி.எஸ்.பி தொடர்ந்து கேள்விகளை ஃபாஸ்ட் பவுலர் கணக்காய் வீச  பதில் சொல்லமுடியாமல்  நெளிந்தார் எஸ்.ஐ.

"ஏன்யா நீ பயங்கர தண்ணி பார்ட்டி. விடிய விடிய கூத்தடிச்சுட்டு விடிஞ்ச பிறவு தூங்கப்போற கேசு. சூரியன் உச்சிக்கு வந்த பிற்பாடுதான் முந்தின நாள் நீ என்ன பண்ணேனு சனத்துக்கு ஃபோன் போட்டு கேட்கிற பார்ட்டி.விடியல் 4 மணிக்கு தீவிரவாதிகளை பிடிச்சேன்னா எப்படிய்யா நம்பறது?"

"இல்லிங்கய்யா ரோந்துப்பணிய முடிச்சுக்கிட்டு வர்ரச்ச ஹைதராபாத் உல்வா பஸ் புறப்பட இருந்தது. சரி  நியூ இயர் வேற வருது . எந்த பிக்காலின்னா தலை நகர்ல அலம்பல் பண்ண இங்கருந்து சாமான் செட்டோட  போனா என்ன பண்றதுனு தரோவா செக் பண்ணோம்.."

"யோவ் நீ உன் கதையையெல்லாம் பேப்பர்காரனுக்கு சொல்லு. போயா போய் வேலை பாரு. என்ன நடந்திருக்கும்னு சொல்லவா? நீ பாட்டுக்கு குப்புற படுத்து தூங்கிக்கிட்டிருந்திருப்பே.. உன் ஸ்டேஷன்ல மதுன்னு ஒரு துடியான கான்ஸ்டபிள் இருக்கான். மதுவோ அல்லது வேறு எவனோ ரோந்துல இருந்திருப்பான். அவன் அந்த டெர்ரரிஸ்டுங்களை பிடிச்சு வச்சிக்கிட்டு உனக்கு மெசேஜ் கொடுத்திருப்பான்..நீ ஹேங் ஓவருக்கு ஒரு ஸ்ட்ராங் காஃபி அடிச்சுட்டு ஸ்டேஷனுக்கு வந்து எனக்கு ஃபோன் போட்டிருப்பே கரெக்டா?"

"இல்... இல்லை சார்.. நான் தான்.."

"சரி சரி இப்ப எனக்கு  என்ன  போச்சு தீவிரவாதிகளை பிடிச்சாச்சு ..யார் பிடிச்சா என்ன.. ஆகவேண்டியதை பார்க்கிறேன். என்ன ஒரு இன்க்ரிமென்ட், கேஷ் ரிவார்ட், உத்தம காவலர் விருதுக்கு ரெக்கமண்ட் பண்ணனும் அவ்ளதானே"

"சார் மதியம் பிரஸ் மீட்டுன்னு ஆஃபீஸ்ல சொன்னாங்க.."

"ஆமாமாம்  நல்லா பவுடரை அப்பிக்கிட்டு வந்திரு.. ஆமய்யா உனக்கு குழந்தைகளே இல்லியாமே யாருனா நல்ல டாக்டரா பார்க்க வேண்டியதுதானே"

"பார்க்கனும் சார் ..வரேன் சார்"

*           *                 *

1-1-2012

எஸ்.ஐ தலைகுனிந்து உட்கார்ந்திருக்க டி.எஸ்.பி முகம் சிவந்திருந்தது.  தூத்தேரி.. போலீஸ் டிப்பார்ட்மென்ட் மானத்தையே வாங்கிட்டயேய்யா..பொம்பளைக்கு செக்ஸ் கூட செகண்டரிதான்யா. எப்பப்பாரு குடி , தீனி இதானா லைஃப்.

சரி நீதான் வகையத்தவனு உனக்கு தெரியும் இல்லியா .அந்த கான்ஸ்டபிள் மது துடியான பையன். அவனை போயி ஆர்டர்லி கணக்கா உன்  வீட்டு வேலைக்கு உபயோகிச்சிருக்கே.

பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சு. இப்ப பொஞ்சாதி கர்பம். மது மன்மத வேலை பண்ணிட்டான்னு பதைக்கிறே..

நடவடிக்கை எடுத்தா உன் மானமும் சேர்ந்துதான் போகும். பலான புஸ்தவத்துல கூட உன் கதைய தொடரா போட ஆரம்பிச்சுருவான். அந்த மதுவை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிர்ரன். அவன் தன் உழைப்புல பிடிச்ச தீவிரவாதிலருந்து, கஞ்சா,சந்தனக்கட்டை கும்பல் வரை நீ பிடிச்சதா கணக்கு காட்டி கேமரா ஃப்ளாஷுக்கு முன்னாடி இளிச்சே இல்லை.. இப்போ அவன் நல்லாவே உழைச்சு உன் பொஞ்சாதிய கர்பமாக்கியிருக்கான். எப்படியும் உனக்கு குழந்தைங்க இல்லை. பிறக்கவும் பிறக்காதுன்னு டாக்டர் கன்ஃபர்ம் பண்ணிட்டதா நீயே சொல்றே..பேசாம அவன் உழைப்புக்கான மெடலை  நீ வாங்கி நெஞ்சுல  குத்திக்கிட்ட மாதிரி அவனோட வாரிசையும் வாரி அணைச்சுக்க..எப்படியும் நீ நல்ல போலீஸ்காரன் கிடையாது. உன் மூலமா டிப்பார்ட்மென்டுக்கு ஒரு நல்ல போலீஸ்காரனாவது கிடைக்கட்டும்

Thursday, December 30, 2010

ஒரு கில்மா சிறுகதை

பாவம்!  முரளிக்கு இப்படி ஒரு லட்சியம் வரதுக்கு அப்படி ஒரு காரணம் இருக்கும்னு   நான்  நினைச்சுக்கூட பார்க்கலைங்கண்ணா.

முரளின்ன உடனே சமீபத்துல மேல் லோகத்துக்கு படிக்கப்போயிருக்கிற நிரந்தர மாணவர் நடிகர் முரளிதான் ஞா த்துக்கு வருவாருன்னு தெரியும். ஆனால் நான் சொல்லவந்தது வேற ஒரு முரளி.

போர்ட்டபிள் டிவி கணக்கா சுருக்கமான உருவம்.   நல்ல நிறம். நம்மாளுங்கள்ள ரேரா அமையக்கூடிய ப்ரவுன் ஐ. ஏதோ தனியார் கல்லூரியில  யோகா ,மாரல் சைன்ஸுனு கதை பண்ணிக்கிட்டிருக்கிற பார்ட்டி.வயசு என்னவோ முப்பதுக்குள்ளத்தான்.

என்னதான் நமக்கும் பொல்யூஷன் இயற்கை பேரழிபத்தி எல்லாம் கொஞ்சம் போல இன்டரஸ்ட் இருந்தாலும் காலங்கார்த்தால காய் கறி மார்க்கெட்டாண்டை நின்னுக்கிட்டு பிளாஸ்டிக் பைல கறி கா வாங்கிட்டு போறவனையெல்லாம் நிக்கவச்சு  பேப்பர் பேக் , க்ளாத் பேகோட சேஃப்டி பத்தியும்,பிளாஸ்டிக்கால ஏற்படக்கூடிய அழிவை பத்தியும்  கிறிஸ்தவ பாதிரியார் மாதிரி பன்னா பன்னானு சனங்கள் கிட்டே பேசி மாய நம்மால முடியாது.

எல்லா பிக்காலிக்கும் தான் என்ன பண்றான்னு தெரியும். தெரியாமயா செய்யறான். தெரிஞ்சுதான் செய்யறான். நாம சொன்ன மாத்திரத்துல விட்டுரவா போறான். இல்லே .தனக்கா தோனினா தான் விடுவான். நாம சொல்லி ஆகப்போறதென்ன? வேணம்னா நம்ம குற்ற உணர்வு குறையலாம் தட்ஸால்

ஆனா முரளிக்கு அதே வேலைதேன். இதுமட்டுமில்லிங்கண்ணா விடியல்ல (மார்கழில உட்பட) சின்ன சின்ன டப்பால பெய்ண்ட் இத்துனூண்டு ப்ரஷ் எடுத்துக்கிட்டு போய்
காலியா இருக்கிற சுவர்ல எல்லாம் சேவ் ஆயில் சேவ் பவர் சேவ் வாட்டர்னு எழுதிக்கிட்டிருக்கிற கேரக்டர்.

இன்னைய தேதிக்கு மீடியாவோட பகாசுரப்பசிக்கு சோனியா, அத்வானி,கலைஞர் ,ஜெயலலிதா மட்டும் போதலை. ஒரு தினசரில எவனோ வேலையத்த நிருபன் நம்ம முரளியை பத்தி சென்டர் ஸ்ப்ரெட்ல படங்களோட ஒரு ஐட்டத்தை போட்டுட்டான்.

முரளிக்கு மகாசனங்க மத்தில பேராதரவு. தாளி சனத்துல சில பேர் இருக்காய்ங்க. அவிக அப்பா பேரு பேப்பர்ல வந்தாதான் அவனை போயி அப்பான்னு கூப்பிடுவாய்ங்க,.அப்படியா கொத்த ஊர்ல சென்டர் ஸ்ப்ரெட்ல வந்த முரளிய விடுவாய்ங்களா என்ன?

பெயிண்ட் கடைகாரர் ஒருத்தர் ஃப்ரீயா பெயிண்ட் கொடுக்கறேன்னாரு.ஒரு ஆர்ட்டிஸ்ட்  நான் ஃப்ரீயா எழுதறேன்னாரு .. நான் மேட்டரை நீங்க சொல்லுங்க. நான் சுருக் நறுக்குனு ஃபார்ம் பண்ணிதரேண்ணேன். ஸ்லோகன்ஸ் எல்லாம் அழகான பெயிண்டிங்கோட நகர சுவர்களை அலங்கரிக்க ஒரு  நகைக்கடைகாரர் இதை பத்தி ஒரு புக்லெட்டே போடலாமேன்னாரு.அதையும் செய்தாச்சு.அட்டையில பெயிண்ட் டப்பாவோட கையில் ப்ரஷ்ஷோட முரளி .

ஊர்ல எங்கப்பாரு இதே பேச்சுத்தேன்.முரளிக்கு  ஒரு ஹீரோ ரேஞ்சில பப்ளிசிட்டி .ஒன்னு ரெண்டு குட்டிங்க ஆட்டோகிராஃப் கூட வாங்கிருச்சுன்னா பாருங்களேன்.
ஊரையடுத்து ஒரு பிரபலகோவில். அதனோட நிர்வாக குழுவுல நம்மாளை மெம்பராக்கிட்டாய்ங்க.

நம்ம ஹெட் ஆஃபீஸ் காரவுக இன்ஸ்பெக்சனுக்குன்னு  ஊருக்கு வர அவிகளை குஜிலி பண்றதுக்காக கோவிலுக்கு கூட்டி போக வேண்டியதாயிருச்சு. தரிசனம் முடிஞ்சு வர்ர பக்தாள் கையிலல்லாம் பிளாஸ்டிக் பிரசாத பை.

நம்ம முரளி இருக்கிற இடத்துல பிளாஸ்டிக்கா? நோ நெவர். உடனே நிர்வாக அலுவலகம் போய் முரளி எங்கேனு கேட்டேன். சூ காட்டினாய்ங்க.

முரளி இப்போ  நல்லாவே புஷ்டியாகியிருந்தான். முகத்துல ஒரு களை. கதர் சட்டை. சட்டைப்பையில ஆயிரம் ரூபா நோட்டுங்க பிதுங்கிக்கிட்டிருக்கு..

என்னப்பா இதெல்லாம்? நீ இருந்துமா இந்த பிளாஸ்டிக் பை?ன்னு கேட்டேன்.

"நீங்கதான் எல்லாத்தையும் செக்ஸோட முடிச்சு போட்டு அனலைஸ் பண்ணுவிகளே இதுக்கு காரணம் என்னனு நீங்களேதான் சொல்லுங்களேன் பார்ப்போம்"னான் முரளி.

" ................................."

"சரி நானே சொல்றேன். அப்போ எனக்கு நிரந்தர வேலையில்லை. டெம்ப்ரரி டீச்சருங்கறதால பைசாவும் பெருசா புரளலை.என் பொஞ்சாதி  நாம நல்ல நிலைக்கு வர்ர வரை கட்டாயம் பிள்ளை பெத்துக்கக்கூடாது" ன்னுட்டா

அதுக்காக ராத்திரியில பொஞ்சாதிய தடவறப்பல்லாம்  பிளாஸ்டிக் உபயோகிக்க வேண்டியதாயிருச்சு.  பயங்கர கடுப்பு.இயலாமை. இது இருக்கிறதாலதான் இந்த அவலம்னு கொதிப்பு. இதுக்கெல்லாம் அவுட்லெட்டாதான் பிளாஸ்டிக் எதிர்ப்பு

இப்ப பாருங்க நான் ஒரு  அறங்காவலர் குழு மெம்பர் . நீங்க  பார்த்து கொதிச்சிங்களே பிளாஸ்டிக் பிரசாத பை அதுக்கான காண்ட்ராக்டே என்னோடதுதான். பொஞ்சாதி பேர்ல எடுத்திருக்கன். இப்போ  ராத்திரிகள்ள நான்  பிளாஸ்டிக்  உபயோகிக்கிறதில்லை"

திருவிளையாடல் படத்துல " நான் அசைந்தால் அசையும் "பாட்டு போல ஸ்ருஷ்டியே ஒரு கணம் ஸ்தம்பிச்சு இயங்க ஆரம்பிச்சுது..