Tuesday, November 13, 2012

சார்மினார்: மற்றொரு பாப்ரி மஸ்ஜித் ஆகிறதா?

சார்மினார் ? இன்றைக்கு ஒரு சரித்திரம் மட்டுமே. ஹைதராபாதில் உள்ள ஒரு புராதன கட்டிடம் மட்டுமே. ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட் வசம் உள்ள கட்டிடம் மட்டுமே.ஆனால்  ஹைதராபாத் ப்ளேக் அபாயத்தில் இருந்து தப்பியதை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்ட மசூதி என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

இரண்டாவது மாடியில்  நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில்  தொழுவதற்கான வசதி கொண்ட  மசூதி .. கிரவுண்ட் ஃப்ளோரில் வஜூ செய்வதற்கான வசதியுடன் கட்டப்பட்டது. மசூதியின் தரை அச்சு அசலான கார்ப்பெட் போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்த கட்டிடம் ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட் வசம் சென்றபின் தொழுகை நடப்பதில்லை.

ஊர் இரண்டு பட்டால் தானே கொண்டாட்டம்.முதலில் பாக்யலட்சுமி கோவில் ஒன்று முளைத்தது. ( பார்க்க படம்) சமீபத்தில் கோவில் நிர்வாகத்தினர் இதனை விரிவாக்கம் செய்ய முனைந்தனர். கோர்ட்டு கூட இதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.ஐ.எம் கட்சி எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்துத்தான் எம்.ஐ.எம் கட்சி மானிலத்தை ஆளும்  காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இப்போது  சரித்திர சின்னங்களாக அறிவிக்கப்பட்ட மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும் என்ற சச்சார் கமிட்டி சிபாரிசை அமலாக்க சொல்லி எம்.ஐ.எம் கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது.

பாக்யலட்சுமி கோவில் விரிவாக்கம்  நடப்பதால் அந்த பகுதியில் வாழும்  ஏழை இந்துக்களுக்கு புதிதாக  என்ன கிடைத்துவிடப்போகிறது?  மிஞ்சிப்போனால் இன்னொரு அய்யருக்கு பிழைப்பு கிடைக்கலாம்.

அல்லது மசூதியில் தொழுகை நடத்த அனுமதிப்பதால் அந்த பகுதியில் வசிக்கும் ஏழை முஸ்லீம்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது?

நிலத்தில் கால் பாவாத சமாசாரங்களை விட்டு எப்போதுதான் நம்ம தலைவர்கள் ப்ராக்டிக்கலாய் யோசிப்பார்களோ?

சாதி சங்க தலைவர்களுக்கு நான் ஏற்கெனவே ஒரு பதிவில் சொன்னதையே இப்போது மதவாத கட்சிகளுக்கும் சொல்கிறேன்.

மதவாதிகட்சிகள்  முதலில் தங்கள் மதத்தை சேர்ந்த எந்த பெண்ணும் ஏழ்மை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்று என்று  நெஞ்சு நிமித்தி சொல்லும்  நிலையை கொண்டு வர பாடுபடவேண்டும். அதுக்கப்புறம் மசூதி -கோவில் என்று இறங்கலாம்.