மொதல்ல ஜோதிடம் குறித்த புனைகதைகள்னு தலைப்பு வைக்கத்தான் நினைச்சம். ஆனா வக்ர குரு புத்தியை திருப்பி விட்டுட்டாரு. அதனால தேன் அச்சானியமா இப்படி ஒரு தலைப்பை வச்சிருக்கம்.
தலைப்பு தேன் அச்சானியம்னா மேட்டர் அதைவிட படு கில்மா. குருவோட மனைவியை சந்திரன் கிட்னாப் பண்ணி வச்சுக்கிட்டு அஜால் குஜால் வேலையில படு பிசி. பாவம் குரு வயசான காலத்துல ஏறாத படியெல்லாம் ஏறி மனைவியை மீட்கிறாரு. அதுக்குள்ள சந்திரன் செய்த கெட்ட காரியத்தால புதன் பிறந்து தொலைச்சுட்டாரு. இது நாம இட்டு கட்டின கதை கிடையாதுங்கோ.செலாவணியில இருக்கிற கதைதேன்.
இப்படி ஆயிரம் கதை இருக்கு. இன்னம் ஒரே ஒரு கதைய மட்டும் இங்கன பார்ப்போம்.
"நீங்களும் ஜோதிடராகலாம்"னுட்டு ஒரு இ புக் நெட்ல ஃப்ரீ ஆஃப் காஸ்ட் கிடைக்குது அதுல தேன் இந்த கதை வருது.
ராவணன் தன் மகன் இந்திரஜித் பிறக்கறதுக்கு மிந்தி நவகிரகங்களை கூப்டு "தபாருபா..அல்லாரும் என் மகன் ஜாதகத்துல 11 ஆமிடத்துல நிக்கனும்"னு ஆர்டர் போட்டுட்டாராம். ஒடனே பி.டி வாத்யாரு ஆர்டர் போட்டதும் பசங்க லைன் கட்டறாப்ல அல்லாரும் 11 ல வந்து நின்னுட்டாய்ங்களாம். இதுல சனி மட்டும் "வேலை" கொடுத்து 12 க்கு வந்துட்டாராம். அதனால ராவணன் சனியோட காலை வெட்டிட்டாராம். எல்லாம் சின்னபிள்ளைத்தனமா இருக்குல்ல.
எல்லா கிரகமும் 11 ல இருக்குமான்னு ரோசிங்க. ராகு -கேதுக்கள் நிழல் கிரகங்கள் ஒருத்தருத்தருக்கொருத்தரு 180 டிகிரிஸ்ல தான் இருக்க முடியும்.ராகு 11ல இருந்தா கேது அஞ்சுல இருந்தாவனும். அல்லது கேது 11 ல இருந்தா ராகு அஞ்சுல இருந்தாவனும்.
சரி மத்த 8 கிரகங்கள் ஒரே ராசியில அதுவும் 11 ல இருக்குன்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்குவம்.அந்த எட்டுல லக்னாதிபதியும் அடக்கம்.
லக்னாதிபதியோட 6,8,12 அதிபதிகள் சேர்ந்தா என்ன ஆகும்? இந்திரஜித் சத்ரு ரோக ருண உபாதைகளோட ,இலங்கை கஜானாவை காலி பண்ணிட்டு அல்பாயுசுல போயி சேர்ந்திருப்பான். பீலா விட்டாலும் அதுல ஒரு லாஜிக் இருக்கனுமோல்லியோ?
ராகு கேதுக்களை பற்றி இன்னம் மோசமான கதை இருக்கு. இவிக ராட்சஸாளாம். விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து மேருமலையை தாங்கி பாற்கடலை கடைய வச்சுட்டு மோகினியா வந்து தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் சர்வ் பண்ணும் போது ராமர் கோவில்ல ரெண்டாந்தடவை சுண்டல் வாங்கறாப்ல மேற்படி ராட்சஸாள் வாங்கிட்டாளாம்.ஒருத்தரு வாய் வழியா குடிக்க கழுத்தை வெட்டிட்டாய்ங்களாம். கழுத்துக்கு மேல அலைவ்.
இன்னொருத்தர் "புறக்கடை"வழியா உள்ளாற ஏத்திட்டாராம். அதனால இடுப்புக்கு கீழே அலைவ். கேட்கவே மு.கூ தனமா ..மன்னிக்கனும் கூ.மு தனமா இல்லை? ஆனால் இப்படிப்பட்ட கதைகள் இன்னம் செலாவணியில இருக்கத்தான் செய்யுது.
இதெல்லாம் ஒரு பக்கம்னா ஸ்ரீ ராமர் ஜாதகம்னு ஒன்னை போட்டு கடுப்பேத்தறாய்ங்க. விட்டா பர்த் சர்ட்டிஃபிக்கேட்டே கொடுத்துருவாய்ங்க போல. சரி ஒழியட்டும் அப்படி ஒரு ஆதர்ச புருசனோட ஜாதகம்னு ஒன்னை ரிலீஸ் பண்றதுக்கு மிந்தி அந்த ஜாதகத்துல உள்ள கிரகஸ்திதிகளை ஒரு க்ளான்ஸாச்சும் பார்க்கனுமில்லியா?
அதை பார்த்தா உருப்படாத ஜாதகம்னு தோனுதே தவிர ராமனோட வீட்டு வேலைக்காரன் ஜாதகமா இருக்குமோங்கற சந்தேகம் கூட வரமாட்டேங்குது.
ஆக ஜோதிடம் குறித்த புனைகதைகளை நம்பாதிங்க. ஜோதிடம் வேறு -ஜோதிடம் தொடர்பான கதைகள் வேறு. அலார்ட்டாயிக்கோங்க.