Showing posts with label சூரியன். Show all posts
Showing posts with label சூரியன். Show all posts

Friday, December 7, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: சூரியன் 4



சூரியன்:
என்னப்பா இடையில கொஞ்ச நாளா காணோம்.

நான்:
என்ன பாஸ் பண்றது ? நம்முது கடக லக்னமாச்சா நம்ம மைண்டு எப்பவும் மக்களை சுத்தி சுத்தி வருது. இந்த மக்களாட்சியில மக்களுக்கு ஆப்படிக்கிறதே ஆட்சியாளர்களுக்கு வேலையா போச்சு.சில்லறை வர்த்தகத்துல அன்னிய முதலீடுன்னு ஒரு மேட்டர், இடையில மக்கள் சந்தைக்காரவுக கேட்ட சுய அறிமுகம் பதிவு ஒன்னு போடவேண்டியதா போச்சு.அதான் உங்களை டீல்ல விட்டுட்டன்.

சூரியன்:

ஆக நீ சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸுல போயிட்டேன்னு சொல்றே.

நான்:

யெஸ் பாஸ் !

சூரியன்:

கண்ணா ! சில்லறை வர்த்தகத்துக்கு காரகனே நான் தான் தெரியுமா? சுயம்ங்கறதுக்கும் காரகம் நான் தான். அதனால நீ என்னை பேட்டி காண ஆரம்பிச்சதுலருந்து என்னோட இன்ஃப்ளுயன்ஸ்ல தான் இருக்கே

நான்:
அதெப்படி பாஸ் ! புதன் தானே வியாபார காரகன்?

சூரியன்:
இல்லப்பா .. எசன்ஷியல் கமாடிட்டீஸ்கெல்லாம் நான் தான் இன் சார்ஜூ.

நான்:
அடடா இந்த ஆங்கிள்ள நான் ரோசிக்கவே இல்லியே.. நாளைக்கு வால் மார்ட் திறந்துர்ராய்ங்கன்னு வைங்க.அது ஆரோட காரகம்? ஜெகஜ்ஜோதியா இருக்கும்ங்கறதால சுக்கிர காரகமா?

சூரியன்:
இல்லேப்பா அது ஃபாரின் கொலாபரேஷனுங்கறதால ராகு காரகம்

நான்:
ஓகே தலை !. சனம் தூங்கி வழிஞ்சா ஒரு கணக்கு. தலீவர்ங்க கூட .தூங்கி வழியறாய்ங்களே? ஏன் ? உலகத்தை தட்டி எழுப்பற நீங்க அவிகளையும் கொஞ்சம் எழுப்பலாம்ல? தூங்கி வழிஞ்சுக்கிட்டே எஃப்.டி.ஐக்கு ஆதரவா ஓட்டு போட்டு - வாக் அவுட் பண்ணியிருக்காய்ங்களே..  தொகுதி பக்கம் தலை வச்சு படுக்க முடியுமான்னு கூட ரோசிக்க மாட்டேங்கிறாய்ங்களே

சூரியன்:
தம்பீ ! நான் என்ன அந்தகாலத்து பால்காரனா ? விடியல்ல போயி கதவை தட்டி - காலிங் பெல் அடிச்சு எழுப்பி விடறதுக்கு. நான் பாட்டுக்கு உதிக்கிறேன். கண்ணுள்ளவர்கள் காணக்கடவர்.

நான்:
என்னா தலீவா! இப்டி கழட்டி உட்டுட்டிங்க. ஒரு ஆசாமி தலைவரானாருன்னா அவரு ஜாதகத்துல நீங்க ஓரளவுக்கு பெட்டர் பொசிஷன்ல இருக்கிங்கன்னு தானே அருத்தம். அப்பாறம் ஏன் இந்த மயக்கம்?

சூரியன்:
ஒனக்கு புரியறாப்ல - உன் மொழியிலயே சொல்றேன். உனக்கு பத்து பக்கம் டைப் பண்ற கப்பாசிட்டி - நேரம் தான்  இருக்கு.

தமிழ் ப்ளாக்ல 4 ,தெலுங்கு ப்ளாக்ல  4 பக்கம் அடிச்சு தள்ளிட்டேன்னு வை .மிச்சமிருக்கிறது 2 பக்கம்.இதை ஃபேஸ்புக்ல விரயமாக்கிட்டேன்னு வை. ஆன்லைன் ஜோதிட ஆலோசனை ஊத்திக்கும்.

அதனால நீ என்ன பண்றே.. தமிழ்ல ரெண்டு பக்கம் அடிச்சு போட்டு தெலுங்கை டீல்ல விட்டுட்டு , 7 பக்கம் அடிக்கிற நேரத்துல ஜாதக பலன் பதிவு பண்ணிட்டு ஒரு பக்கம் அடிக்கிற நேரத்தை ஃபேஸ்புக்குக்கு செலவழிக்கிறே.

கிரக பலம் கூட இப்படித்தான். மேற்படி தலைவன் எல்லாம் சொந்த ஊரை பிடியில வச்சுக்க (கிராமாதிபத்யம் =சூரிய காரகம்) , இருக்கிற மலைகளை குவாரி பேர்ல மொட்டையடிக்க  - சிட்டி அவுட்ஸ்கர்ட்ஸ்ல கஸ்ட் ஹவுஸ் மெயின்டெய்ன் பண்ண (இவையும் சூரிய காரகமே) என் பலத்தை விரயமாக்கிர்ரான்.

மேலும் இன்னொரு பாய்ண்டும் இருக்கு. நான் பெட்டர் பொசிஷன்ல இருந்தா கள்ள ஓட்டு,ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது, கட்சி தாவல் , தொண்டர்களுக்கும் -குண்டர்களுக்கும் செலவழிக்கிறதுக்கெல்லாம் தேவையே  இருக்காது.

நான் பெட்டர் பொசிஷன்ல இல்லாததாலதானே இந்த இழவெல்லாம் செய்யவேண்டியிருக்கு. மிச்ச சொச்ச பலத்தை விரயமாக்கிர்ராய்ங்க.

அப்பாறம் எப்படி தலைமைகுணம் ,விழிப்புல்லாம் வாழும்?


நான்:

அதெப்படி பாஸ்.. நீங்க சொல்றதை பார்த்தா நீங்க பெட்டர் பொசிஷன்ல இல்லின்னாலும் தலீவனாயிரலாம் போல இருக்கே


சூரியன்:
நைனா ஜாதகம் டூ இன் ஒன். அதுவே டெபிட் கார்டு .அதுவே கிரெடிட் கார்டு. கிரக பலங்களை அளவோட எக்ஸாஸ்ட் பண்ணா அதான் டெபிட் கார்டு. அன்லிமிட்டடா எக்ஸாஸ்ட் பண்ணா அதுவே கிரெடிட் கார்டு.
டெபிட் கார்டுல செலவழிச்சா பிரச்சினை இல்லை. கிரெடிட் கார்டுல செலவழிச்சா வரி,வட்டி,கிஸ்தில்லாம் குஸ்தி போடும்ல.

நான்:
தலீவருங்களுக்கு சாலை விபத்துல ஹெட் ஓப்பன் ஆயிர்ரது, பாத் ரூம்ல வழுக்கி விழுந்து கைகால் முறியறதுக்கெல்லாம் காரணம் உங்க  பலமில்லாமயே தலீவராயிட்டதுதானா?

சூரியன்:
அதுமட்டுமில்லை ஜாய்ன்ட் பெய்ன்,பேக் பெய்ன், கண் பார்வை டப்ஸாயிர்ரது, இன்சோம்னியா, சதா சர்வ காலம் படபடப்பா இருக்கிறது மாதிரி சைட் எஃபெக்ட்ஸுக்கும் இதான் காரணம்.  நான் ராஜ கிரகம். ராஜ உறுப்புகளுக்கெல்லாம் நான் தான் காரகம். அரசியல் வாதிகளுக்கு ராஜ உறுப்புகள் ஃபெய்ல் ஆறதுக்கும் இதான் காரணம்.

நான்:
இதெல்லாம் அவிகளுக்கு தெரியாதே பாஸூ..பாவம் !

சூரியன்:
சாம,பேத,தான,தண்ட உபயங்கள்ள நம்முது தண்ட உபாயம் கண்ணா..நோ வார்னிங் .டைரக்ட் வார் தான்.

நான்:
தலீவருங்க எக்கேடும் கெட்டுப்போகட்டும். சாமானியருங்களாகிய நாங்க எப்டி நடந்துக்கிட்டா பெட்டர் சொல்லுங்க தலைவா!

சூரியன்:
தன்னை தான் தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான்.

(தொடரும்)

எச்சரிக்கை:
சூரியனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கமெண்ட்டில் தெரிவிக்கவும். இல்லின்னா ஸ்டுடியோவுக்கு  சந்திரனை  வரவழைச்சுர்ரதா உத்தேசம்

Saturday, November 17, 2012

நவகிரகங்களுடன் ஒரு பேட்டி: சூரியன் 2

நான்:
வணக்கம் பாஸ் !

சூரி:
மறுபடி நீயேவா? நான் லக்னத்துல நின்னா சொந்தத்துக்கு செய்ற வேலை உருப்படாது..பிரதிபலன் கிடைக்காதுன்னு சொல்றாய்ங்களே ..ஏன்னு முந்தா  நேத்து  ஒரு கேள்வி கேட்டிருந்தே அதுக்கான பதிலை இப்ப சொல்றேன்..

நான்:
சொல்லுங்க பாஸ்.

சூரி:
கிழக்குல உதிச்சு மேற்குல மறையறேன். சிக் லீவ், இயர்ன்ட் லீவ்,காஷுவல் லீவ் ,ஃபெஸ்டிவல் லீவ் எதுவும் கிடையாது. ஒரு நாள் கூட லீவு எடுக்கிறதில்லை. கிரகண சமயத்துல கூட  நான் உதிச்சுர்ரன். அதுக்கப்பாறம் தான் ராகு வந்து என்னை மறைக்கிறாரு. ஆனால் இதுக்கெல்லாம் ஒரு பைசான்னா ஒரு பைசா கூட ரெம்யூனரேஷன் கிடையாது.

மேலும் என்னால் உங்களுக்கெல்லாம் ஒளி கிடைக்குது. வெப்பம் கிடைக்குது. சந்திரனுக்கு ஒளி கிடைக்குது. எனக்கு என்ன கிடைக்குது? பல ஆயிரம் வருசங்களா எரிஞ்சுக்கிட்டிருக்கிறதால எனக்குள்ள இருக்கிற சப்ஸ்டன்ஸ் குறைஞ்சுக்கிட்டே வருது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் கற்பூரம் கணக்கா "குளிர" வேண்டியதுதான்.  மேலும் என்னை விட்டு விலகி இருக்கிறவுகளுக்கு தான் லாபமே தவிர என்னை நெருங்கி வந்தா பஸ்மம்.

நேத்தே சொன்னாப்ல எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்.லக்னத்துல  நான் உள்ள ஜாதகன் அவனும் ஒரு குட்டி சூரியன் தான்.

அவன் மன்சங்கறதால அவனுக்கு இந்த பூமியில்  வாழ பிரதிபலன் தேவைப்படுது -ஆனால் கிடைக்காது, அவனை மக்கள் நெருங்கி வந்தாதான் சமூக வாழ்வு சோபிக்கும். நெருங்கி வரலின்னா தனிமையில தவிக்கனும்.

நான்:
பாஸ் ! நீங்க பேச பேச எனக்குள்ள இன்னொரு பாய்ண்டும் ஸ்பார்க் ஆகுது .சொல்லவா?

சூரியன்;
சொல்லுப்பா..

நான்:
நீங்களா உலகத்தையே தட்டி எழுப்பறவரு. மன்ச ஜன்மம்னா - கொஞ்சமாச்சும் ரிலாக்ஸேஷன் இருக்கனும். நீங்க லக்னத்துல நின்னா அவனுக்கு செரியான தூக்கம் கூட இருக்காது.  மறு நாள் ஒத்தை தலைவலி மலச்சிக்கல்,முதுகுவலின்னு அவதிப்படுவான் . இந்த கடுப்புல எல்லாரையும் கடுப்படிச்சு அல்லாத்துக்கும் விரோதமாயிருவான் ..அப்டித்தானே.

சூரியன்:
ஓரளவுக்கு லைனை பிடிச்சிருக்கே .. இன்னம் கொஞ்சம் தம் கட்டு .

நான்:
ராத்திரி நேரத்துல எல்லாமே மச மசன்னு இருக்கும். சுமாரான குட்டி கூட சூப்பர் குட்டியா தெரிவா.தூக்கத்துல அறிவாளியும் ஒன்னுதான் . முட்டாளும் ஒன்னுதான்.ஆனால் நீங்க உதிச்ச பிறவு ? எல்லாமே பளிச் ஆயிருது. லக்னத்துல நீங்க நின்னா.. அந்த ஜாதகனும் ஒரு குட்டி சூரியனா மாறி முட்டாளை முட்டாள்னும் -குரூபியை குரூபின்னும் டிக்ளேர் பண்ணுவான். எந்த முட்டாள் தன்னை முட்டாள்னு சொன்னா ஏத்துக்குவான்?   இதனால எல்லாருமா சேர்ந்து ஆப்படிச்சுருவாய்ங்க. கரீட்டா தலை?

சூரியன்:
ம்...ம்.. அடுத்த கேள்விக்கு போ..

நான்:
வந்துட்டன் துரை ! உங்களை ஆத்மகாரகன்னு சொல்றாய்ங்களே ..அது எப்டி?

சூரியன்:
என்னோட இடம் எது?

நான் :
உச்சி

சூரியன்:
மனித உடலின் உச்சி எது?

நான்:
உச்சந்தலை

சூரியன்:
ராஜயோகம் உச்சியில எந்த சக்கரம் இருக்கிறதா சொல்லுது?

நான்:
சஹஸ்ராரம்

சூரியன்:
குண்டலி சஹஸ்ராரத்தை தொட்டாத்தானே மனிதன் தான் ஆத்ம சொரூபங்கறதை அனுபவபூர்வமா தெரிஞ்சுக்கறான். அதனாலதேன் என்னை ஆத்மகாரகன்னு சொல்லியிருக்காய்ங்க.  நான் எப்படி எல்லாத்து மேலயும்  சமமா என் கிரணங்களை வீசுறனோ அப்படி  ஆத்ம சொரூபனா உள்ளவன் அபேத பாவத்தோட எல்லாரையும் சமமா பார்ப்பான்.  

மனிதன் தன்னை ஆத்ம ரூபமா உணரும் வரைக்கும் அவன் வாழ்க்கைக்கு வேறு எதுவோ மையபுள்ளியா இருக்கும். அவன் தன்னை ஆத்ம ரூபமா உணர்ந்துட்டான்னா பால் வீதிக்கு நான் எப்படி   கேந்திரமா  இருக்கேனோ அப்படி அவன் தன் வாழ்க்கைக்கு தானே கேந்திரமா மாறிர்ரான்.

மத்த கிரகங்கள் தான் என்னை நெருங்குவதும் விலகுவதுமா இருக்குமே தவிர நான் மட்டும் என் நிலையில நிலையா இருப்பேன்.

நான்:
பாஸ்.. ஆத்ம ரூபமா உணர்ந்த பிறகு மனிதன் அடையக்கூடிய நிலையை ஜஸ்ட் தன் ஈகோ காரணமா கூட அடையறானே..

சூரியன்:
ஈகோங்கறது பிரமை. பிரமை எப்பயாச்சும் உடைஞ்சுரும்.

நான்:
ஆக ஈகோவுக்கும் நீங்கதேன்.ஆத்மாவுக்கும் நீங்கதேன். அதெப்படி பாஸு? ரெண்டு நிலையையும் நீங்களே தர்ரதா சொல்றிங்க. எப்போ எந்த நிலையை தர்ரிங்க?

சூரியன்:
நான் ஜாதகத்துல முழு பலம் பெற்றிருந்தா ஆத்ம காரகனா வேலை செய்றேன். அரைகுறையா பலம் பெற்றிருந்தா தன்னம்பிக்கைய தரேன். பலம் இழந்திருந்தா ஈகோவை தரேன்.

நான்:
சூப்பர் தலைவா..இந்த வித்யாசத்தை மண்டைக்கு ஏத்தவே 24 மணி நேரம் பிடிக்கும் போல. இன்று போய் நாளை வரேன்..

சூரியன்:

அப்படியே ஆகட்டும் வா.