Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Tuesday, November 6, 2012

அண்ணாவின் மரணத்துக்கு வழி வகுத்த கருணாநிதி

இந்த பதிவுக்கு  " அரசியல்: ஹிப்பாக்ரட்டுகளின் உலகம்"னு தலைப்பு வச்சாலே போதும்.ஆனால் என்ன பண்றது ? காந்தியை பத்தி படம் எடுத்தாலும் கஸ்தூரிபாவின் இரவுகள்னு தான் பேர் வச்சாகனும்.அப்பத்தேன் உலகம் அதை சீந்தும்.அதனாலதேன் இந்த வில்லங்க தலைப்பு.

பெரியார் Vs அண்ணா:
பெரியார் அண்ணா இடையிலான உறவு எப்படிப்பட்டதுன்னு இன்றைய கீச்சர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? அண்ணா "அண்ணன் (பெரியார்)  எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்"னு காத்திருந்தார்.திடீர்னு பெரியார் மணியம்மைய கண்ணாலம் கட்டிக்கறதா சொன்னதும் இர்ரிட்டேட் ஆயிட்டாரு. தனிக்கட்சி துவக்கம் -ஆட்சி பிடிப்பு எல்லாம் நடந்தாச்சு.

அண்ணா -பெரியார் மைண்ட் செட் ரெம்ப டிஃப்ரன்ட். அண்ணாவுக்கு ஆங்கில இலக்கணம் முக்கிய.பெரியாருக்கு அது இரண்டாம் பட்சம் சிக்கனம் தான் முக்கியம். ஏற்கெனவே பேசியிருக்கம்னு தந்தி கொடுக்கனும். அண்ணா தந்தி மேட்டரை விஸ்தாரமா எழுதி கொண்டு வர பெரியார் "டோல்டட்"னு எழுதிருங்கறாரு. பெரியாருக்கு சினிமான்னாலே கடுப்பு.அண்ணாவுக்கு சினிமா மேல ஈர்ப்பு . இப்படி ஆயிரம் வித்யாசங்கள். ரெண்டு பேரும் ரெண்டு துருவம்.

பெரியார் அண்ணா எதிர்காலத்துக்கே ஆப்படிச்ச பார்ட்டி.அண்ணா பெரியாரோட நிகழ்காலத்துக்கே ஆப்படிச்ச பார்ட்டி.ஆனா அண்ணாவின் பேச்சு ,பெரியார் கொள்கைகளை  சட்டமாக்கினது ,அனுதினம் பெரியார் பேரை மந்திரமா ஜெபிச்சது எல்லாத்தையும் பார்த்தா நமக்கு புரியும் .அரசியல்: ஹிப்பாக்ரட்டுகளின் உலகம்


அண்ணா Vs கலைஞர்:




அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் மேல ஈர்ப்பு .கலைஞருக்கு எம்.ஜி.ஆர் தான் போட்டி. சினிமா மேல கவர்ச்சி,எழுத்து,பேச்சுன்னு அண்ணாவுக்கும் கலைஞருக்கும் ஆயிரம் ஒற்றுமை இருந்தாலும் குடும்பம்ங்கற மேட்டர்ல ரெண்டு பேரும் ரெண்டு துருவம். அதுலயும் ஊழல் விஷயத்துல இந்த கருணா நிதி நெருப்பு மாதிரின்னு தாத்தா ஊத்திவிடறாரே அதுக்கு தகுதியான நபர்  அண்ணா . அவருக்கு தொண்டையில  கான்சர்னு தெரிஞ்சு  அவர்  ரெஸ்ட்ல இருந்தாகனும்னு தெரிஞ்சும் அவரை வச்சு கூட்டம் போட்டு அவர் மரணத்துக்கே கலைஞர் வழிவகுத்ததா கூட பேச்சு உண்டு. ஆனாலும் பாருங்க கலைஞருக்கு அண்ணா தான் கடவுள் .அவர் பேர் தான் மந்திரம்.


நல்ல வேளை எம்.ஜி.ஆர் ப்ரூக்ளின் மருத்துவமனையில இருந்தப்போ தாத்தா விட்ட 40 ஆண்டுகால நண்பர் அஸ்திரம் எடுபடலை.இல்லின்னா கலைஞருக்கு எம்.ஜி.ஆர் கடவுளாவும் அவர் பேர் மந்திரமாவும் மாறியிருக்கும்.

எம்.ஜி.ஆர் Vs ஜெயலலிதா:

"ஜெ" வுக்கும் எம்.ஜி ஆருக்கும் இருந்த உறவை  பத்தி  சொல்ல தி.மு க பேச்சாளர்களின் மேடை பேச்சை ஆதாரமா காட்டினா அது கயவாளித்தனம்.ஆனால் ஜெ வே குமுதத்துல ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சு பாதியில டீல்ல விட்டுட்டாய்ங்க.அது ஜெ வின் சொந்தக்கதைனு பிரச்சாரம் கூட நடந்தது. அவிக ரெண்டுபேருக்கும் எப்பம் சண்டை வரும் -எப்பம் கூடிக்குவாய்ங்கன்னு ஆருக்கும் தெரியாது. வாத்யாரு கடேசியா "ஜெவுக்கு கட்டம் கட்டி அவிகளோட யாரும் பேசப்படாது .அன்னந்தண்ணி புழங்கப்படாது"ன்னுல்லாம் சொன்னதா செய்திகள்.

ஆனால் ஜெவுக்கு எம்.ஜி.ஆர் கடவுள் -அவர் பெயர் தான் மந்திரம் .( நல்ல வேளையா எலீக்சன் வரும்போது மட்டும்)

சந்திரபாபு Vs என்.டி.ஆர்:


என்.டி.ஆருக்கு ஆப்படிச்சு - கட்சியை  பதவியை பறிச்சுக்கிட்டு -அவரோட மரணத்துக்கே காரணமான சந்திரபாபுவுக்கு இப்பவும் என்.டி.ஆர் தான் கடவுள் - அவர் பேர் தான் மந்திரம்.

ஒய்.எஸ்.ஆர் Vs ஜகன்:


ஒய்.எஸ்.ஆர் உயிரோட இருந்தவரை ஜகன் பெங்களூர்லயே இருக்கனும். ஹைதராபாத் பக்கம் வரப்படாது.இதுதான் ஒய்.எஸ்.ஆர் வச்ச ரூல். ஊழல்  நடக்கக்கூடாதுங்கறது எவ்ள முக்கியமோ ஊழல் நடக்கலைங்கற - நடக்க வாய்ப்பில்லைங்கற "சீன்" கூட ரெம்ப முக்கியம்.இதான் ஒய்.எஸ்.ஆர் கான்செப்ட்.

அப்பா சி.எம்மா இருக்கிற ஸ்டேட்டுக்குள்ள வரப்படாதுங்கறது ஒரு மகனை எந்தளவுக்கு கடுப்பாக்கியிருக்கும்னு நீங்களே ரோசிங்க. ஆனா இன்னைக்கு?  ஜகனுக்கு ஒய்.எஸ்.ஆர் தான் கடவுள். ஒய்.எஸ்.ஆர் பெயர்தான் மந்திரம்..

மொதத்ததுல அரசியலே ஹிப்பாக்கிரட்டுகளின் உலகமப்பா..

Sunday, February 20, 2011

கத்தோலிக்க பெரியார்



தமிழ் கத்தோலிக்கன் என்ற வ்லைப்பூவுக்கு சொந்தக்காரர் தாமென்னவோ ஈ.வெ.ரா என்ற நினைப்பில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.ஏதோ ஹிட்ஸை கூட்டிக்க இப்படி ஒரு பதிவை போட்டிருந்தா ஓகே. ( நாமளும் இந்த கேஸ்தானே சுஜாதாவையே கிழிச்சிருக்கன் -ஆனால் அவரோட எழுத்தை படிச்சுத்தேன் எழுத்து மேலயே ஒரு கவுரதை வந்துது -இதையும் மறைச்சதில்லை)

ஆனால் பாவம் ..தான் எழுதினதையெல்லாம் அவர் முழுக்க நம்பி பதிவு போட்டிருந்தா மட்டும் கஷ்டம். தவளை எங்கனா கத்திக்கிடலாம். பாம்பு கண்டுக்கிடாது. பாம்புக்கு மஸ்தா வேலை கீறப்ப, அது ஏதோ தன் வேலைய தான் பார்த்துக்கிட்டிருக்கிறப்ப "மணலுள் புதைந்து வாழ் நுணலெல்லாம்" கத்த ஆரம்பிச்சா அதுவும் ஊர் பேர் எல்லாம் மென்ஷன் பண்ணி சவால் கேட்டா விடாது பாம்பு.

இப்படித்தேன் ஒரு பார்ட்டி திருஷ்டி சுத்தி போட்ட லெமன்ல தான் ஜூஸ் போட்டு குடிப்பேன்னு அடம் பிடிச்சது .நம்ம கிட்டே மோதறச்ச ட்ராயிங் டீச்சர். நமக்கு வெட்டிப்பேச்செல்லாம் பிடிக்காதுங்கோ. உடனே ஒரு கால் காயிதம் எடுத்து 5 பாய்ண்ட் எழுதிக்கொடுத்தேன். 6 மாசம் கழிச்சு பேசிக்கலாம்னேன்.கால் காயிதத்துல நாம எழுதிக்கொடுத்தமாதிரி சாக்கடை ஓரமாவே டப்பாவ பிடிச்சுக்கிட்டு பொழப்ப ஓட்டவேண்டியதாயிருச்சு.

ஆரோ ஒரு ஜோசியரை(?) -ஊர் பேர் போட்டு புள்ளிவிவரம் கொடுத்திருக்காரு. இந்த மாதிரி உபகதையெல்லாம் ஞானும் நிறைய எழுதியிருக்கன். ஆனால் ஊர் பேர் எல்லாம் போடக்கூடாது. தமிழ் கத்தோலிக்கருக்கு என் அறிவுரை இதான். பை தி பை பெரியாரோட வாழ்க்கையில ஒரு சம்பவம். யாரோ வந்து விபூதி நீட்டறாய்ங்க. ( வச்சு விடறாய்ங்களா என்ன ஞா இல்லை) ஸ்பாட்ல எதிர்பார்ட்டி இருக்கிற வரை அதை துடைக்கலை. ஏன்னா விபூதி கொடுத்தவரோட மனசை காயப்படுத்தக்கூடாதுங்கற பெரியமனுஷத்தனம்.

பெரியாருக்கு வமிசா வழியா வந்த கோவில் தர்ம கர்த்தா பொறுப்பை கடைசிவரை நிறைவேத்திக்கிட்டிருந்த கதை தெரியுமா? சாமி பேரை சொல்ல ஊரை ஏமாத்தற சங்கராச்சாரி, நித்யானந்தா மாதிரி சாமிகளை விட ஈ.வெ.ராம சாமி தேன் உண்மையான துறவிங்கறது என் முடிபு.

ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா - இது உண்மையான ஆன்மீகம். " மானவ சேவே மாதவ சேவா -இது உண்மையான ஆத்தீகம். இது ரெண்டுத்துக்கும் நடுவுல பூந்தா அது அமாவாசை இருட்டு பெருச்சாளினு அர்த்தம்.

பார்ட்டியோட தர்ம சந்தேகம்(?) என்னடான்னா "ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?"
ஏன்யா டாக்டருக்கு பன்றிக்காய்ச்சல் வருவது தெரீமானு கூட கேப்பிக போல. பேசிக்கலா ஜோசியரும் ஒரு மனுஷ ஜன்மம் தேன். அவருக்கும் கக்கா,மூச்சா, நல்ல நேரம்,கெட்ட நேரம் எல்லாம் வரும். அவரு தன்னைப்பத்தியே 24 மணி நேரம் ,365 நாள் நினைச்சிட்டிருந்தா மக்களுக்கு என்னத்த சொல்லமுடியும்.
அப்படியே அவரு தன் ஜாதகத்தை வச்சுக்கிட்டு பார்த்தாலும் அது அவரோட ஜாதகம்னாலும் சனி -செவ் சேர்க்கைக்கு கூட எங்கனா ரிலாக்சேஷன் இருக்கான்னுதான் பார்ப்பாரு. (இதுவே ஊரான் ஜாதகம்னா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு)

ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியணும் தான். அவிக ஈகோ ,தன்னோடதுங்கற எண்ணம் முழுக்க தெரிய விடறதில்லை. அதுக்காவ அது பெரிய டிஸ்குவாலிஃபிகேஷன் ஆயிருமா என்ன?

லாயருக்கு தண்டனை கிடைக்காதா? தாளி தீர்ப்பு சொல்ற நீதிபதிக்கு , சட்டத்தை வடிவமைக்கிற எம்.எல்.ஏ,எம்.பிக்கே தண்டனை கிடைக்குது. ஆனானப்பட்ட இந்திராகாந்திக்கே கைவிலங்கு போட்டாய்ங்க. அவிகளையும் நம்ம கத்தோலிக்க பெரியார் கூண்ட்ல் ஏத்திருவாரு போல.


"கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" கர்த்தர் வேற கர்த்தரோட படைப்பு வேற இல்லை. கோள்களும் படைப்பின் ஒரு பாகமே. நான் கர்த்தாவுக்கு மட்டும் பயப்படுவேன் அவரோட படைப்புக்கு பயப்படமாட்டேன்னா அது அவிக ஞானத்துக்கு சம்பந்தப்பட்ட மேட்டர். நாம அம்பேல்.

//நாம் எல்லோருமே எப்போதாவது ஜோசியர்களை சந்தித்திருப்போம். நம் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகுது என தெரிந்து கொள்ள. இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என புட்டு புட்டு வைக்கும் இவர்களின் எதிர்காலத்தில், என்ன நடக்கும் என, இவர்களுக்கு தெரியுமா? என்னும் சந்தேகம் நீண்ட நாட்களாகவே எனக்கு இருக்கிறது//

பாஸ்! உங்களுக்கு அந்த சந்தேகமே வேணா.. உங்களை மாதிரி பார்ட்டிகளோட சந்தேகத்தை நிவர்த்திக்கத்தான் கடவுள் சூப்பர் டூப்பர் யோக ஜாதகத்துல என்ன மாதிரி ஒரு அராத்தை படைச்சு - உங்களை மாதிரியெல்லாம் பேச வச்சு -ஸ்டெப் பை ஸ்டெப்பா தேத்தி வச்சிருக்காரு.

உங்களுக்கொரு ரகசியத்தை சொல்லவா? என்னோட ஜாதகம் யோகஜாதகம்னு ஜோதிடம் கன்ஃபார்ம் பண்ணாம இருந்திருந்தா தாளி ..நானும் உங்க பக்கம் இருந்துக்கிட்டு உங்களை மாதிரியே வெட்டிப்பதிவு போட்டுக்கிட்டிருந்திருப்பேன்.

//என் ஊரிலுள்ள ஒரு ஜோசியருக்கு நடந்த சம்பவம்தான்.//

ஒரு ஜோசியருக்கே இல்லை. ஜோதிடத்தை ஜஸ்ட் ஒரு சோர்ஸ் ஆஃப் இன்கம்மா பார்த்து "தொழில்" நடத்தற எல்லா பிக்காலிகளுக்கும் இப்படித்தேன் நடக்கும். மேட்டர் ரெம்ப பர்சனலா போறதால நான் ஜகா வாங்கிக்கறேன் பாஸ்!

//இப்போ நம்ம ஜோஷிய திலகங்கள் சதீஷ் குமார், சித்தூர் முருகேசன் இன்னும் சிலர் பிரபல பதிவர்களாக இருப்பதால் இதை கேட்டு விட்டால் போச்சு என தோன்றியது. அதுதான் இந்த பதிவு.//

பதில் கொடுத்தாச்சு . வவுறு ரெம்பி போச்சா.(தொண்டை வரை வந்திருக்கனுமே ) உங்க நல்ல நேரம் சதீஷ் பார்வைக்கு உங்க பதிவு போகலை போல.அவரும் பரிமாறினாருன்னு வைங்க .. அஜீரணம்தான்

//இந்த ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?//
100% தெரியும் வாத்யாரே.. இப்ப நமக்கு செவ் தசையில குரு புக்தி நடக்கு. குரு 6/9 க்கு அதிபதி. மொதல்ல ஒரு வழக்கோ, கைதோ நடக்கும். அப்பாறம் லைம் லைட்டுதேன்.( நம்முது கடக லக்னம் -லக்னத்துல குரு உச்சம்)

தனி மனிதர்களை வைத்து முடிவெடுக்காதிங்க..அப்பாறம் எந்தெந்த பாதிரியெல்லாம் அஜால் குஜால் பண்ணினாய்ங்கனு லிஸ்ட் போடவேண்டிவந்துரும். கிறிஸ்தவம் புனிதமானது - யாரோ ஒரு பாதிரியார் வேணம்னா அராத்தா இருக்கலாம். அதே மாதிரி ஜோதிடம் புனிதமானது. யாரோ ஒரு ஜோதிடர் வேணம்னா டுபுக்கா இருக்கலாம்

பி.கு: தங்கள் உத்தேசம் ஜஸ்ட் ஒரு பரபரப்பை கிளப்புவது மட்டுமேயானால் என் பதிவில் இத்தனை காட்டம் தேவையில்லை. ஆனா என்ன பண்றது நமக்கு வாக்குஸ்தானத்துல சனி. பதிவு உங்க மனசை புண்படுத்தியிருந்தா சாரி.

திருப்பதி -ஒரு ஜோதிட அலசல்


என்னங்கடா இது தமிழ் வாரப்பத்திரிக்கைகளை திட்டிதீர்க்கிற முருகேசனாரும் அவிக வழிக்கு போயிட்டாப்ல இருக்கு. சம்பந்தா சம்பந்தமில்லாத படத்தை வச்சிருக்காருனு நினைச்சுராதிங்க. பதிவின் கடைசியல காரணத்தை விளக்கியிருக்கேன்.

தமிழ் நாட்டு சனம் மொட்டையா(?) திருப்பதிங்கறாய்ங்க. ஆனால் இங்கன உள்ள வழக்கு ( பழக்கமுங்கோ) என்னடான்னா கீழே உள்ளதுதான் திருப்பதி. மலை ஏறிட்டா திருமலை. நான் இந்த பதிவுல பேசப்போறது திருமலையை பத்தித்தான்.

நமக்கு இந்த வேதம், இதிகாசம்,புராணம்லாம் ரெண்டாம் பட்சம் தான். நம்ம அளவுகோல் அனுபவம். அங்கன யாரேனும் ஒரு பார்ட்டி இருந்தா அந்தாளு என் கிட்டே பேசனும். என் பேச்சை கேட்கனும் (ஐ மீன் ஃபாலோ பண்றதில்லை -ஹியர் பண்ணனும்) ரெஸ்பாண்ட் ஆகனும். இல்லாட்டி ஆள விடுதேன்.

ஆன்மீகத்துல உள்ள இம்சை என்னடான்னா தன் ஆடையை தொட்டு சொஸ்தமடைந்த பெண்ணுகு ஏசு நாதர் சொன்னாரே "உன் விஸ்வாசம் உன்னை சொஸ்தமாக்கியது"ன்னு அப்படி ஆன்மீகத்துல 2+2ல்லாம் கிடையாது. தாளி ஆளுக்கொரு விடையை கொடுத்து மண்டை காய வச்சுரும்.

ஆனா ஜோதிடப்பார்வையில நவகிரகங்களுக்கும் நைன் இன் ஒன் பரிகாரம் ஏழுமலையான் தரிசனம். எப்படின்னு கேப்பிக.சொல்றேன்.

மலை மேல இருக்கிறதால சூரியனுக்கு. ( ஆனால் நோகாம பஸ்ஸுல போயி இறங்கிட்டா சூரியனுக்குரிய பரிகாரம் ஒர்க் அவுட் ஆகாது. மணிக்கு மணி பெருமாளுக்கு அலங்காரம் மாத்திர்ராய்ங்க.( இன்ஸ்டேபில் பொசிஷனுக்கு அதிபதி சந்திரனுங்கோ நினைச்சப்பல்லாம் கண்ணாலம் (முகூர்த்தகாலத்துக்கு அதிபதி சந்திரனுங்கோ). அப்பாறம் கச்சாமுச்சானு தீர்த்தங்கள் இருக்கு. ( சந்திரன் ஜலகாரகன்) அதுலயெல்லாம் தீர்த்தமாடினா சந்திரனுக்கு பரிகாரம். அங்கன இந்த நிமிசம் பார்த்த முகத்தை அடுத்த நிமிசம் பார்க்கமுடியாது.

நடை பாதையில அப்பப்போ புலி,சிறுத்தை எல்லாம் ஹலோ சொல்லுதாம்.. ( குரூர மிருகங்களுக்கு அதிபதி செவ்) . நீங்க போன தினம் புலி,சிறுத்தை வந்தாலோ வந்து போயிருந்தாலோ செவ்வாய்க்கு பரிகாரம். மேலும் பெருமாளொட கை போஸ்ச்சரை பார்த்து உள்ளாற வேல் இருந்தது.பிடுங்கிட்டானுவ அதனால அது முருகன் தானும் சொல்றாய்ங்க. செவ்வாய்க்குரிய கடவுள் முருகன்.

பிரகார சுவர்ல பார்த்தா சிங்கம்லாம் இருக்கும். அதனால உள்ளாற இருக்கிறது சக்தின்னும் சிலர் அடிச்சு சொல்றாய்ங்க. ராகுவுக்குரிய தேவதை துர்கை. அதனால ராகுவுக்கும் பரிகாரம்.எவனேனும் சினிமாக்காரன் வந்து ப்ரேக் தரிசனம்னுட்டு க்யூ காம்ப்ளெக்ஸ்லயோ,க்யூ லைன்லயோ கூடுதலா ஒரு மணி நேரம் மாட்டிக்கிட்டா இன்னம் கொஞ்சம் காட்டமான பரிகாரம்.

அப்பாறம் இன்னொரு மேட்டர் அழுக்கு போக குளிச்சவனில்லேங்கற மாதிரி திருப்பதி போய் ஏமாறாம வந்தவுக கிடையாது. எந்தளவுக்கு ஏமாந்தா அந்த அளவுக்கு பரிகாரம்.

அதே மாதிரி அய்யருங்க கிட்ட ஏமாந்தாலோ , அரசியல் வாதிகள்,மந்திரிகள் காரணமா காத்திருப்பு அதிகமானாலோ குருவுக்கு பரிகாரம். உள்ளாற உள்ளது சக்திங்கறாய்ங்க. சக்தி வேறே சிவம் வேறேன்னு இல்லை.அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணுன்னு கேள்விப்பட்டிருப்பிங்க. குருவுக்குரிய கடவுள் ஷிவா . ஆக திருப்பதி போறது குருவுக்கும் பரிகாரம்

சனின்னா அடிமைப்படல்,சிறைப்படல் ( க்யூகாம்ப்ளெக்ஸ்ல இதான் நடக்குது) மொட்டைபோடற இடத்துல , பொதுக்கழிவறையில டாக்சி ட்ரைவர்கிட்டேல்லாம் ஏமாந்தா சனிக்கு பரிகாரம். மேலும் பெருமாளே ஒரு க்டனாளி (குபேரன் கிட்டே கடன் வாங்கின கதை தெரியுமில்லே) ஒரு கடனாளி ( நாம) இன்னொரு கடனாளியை போய் வணங்கறது எவ்ள பெரிய அவமானம் அதனால இது சனிக்கு பரிகாரம்.(கடன் பட்டவன்னாலே சனிதேன் -அவனை பிழிஞ்சு எடுத்து வட்டி வாங்கறவன் அவனை பெரிய சனி)

புதன்னா கடைத்தெரு. திருப்பதி போய் ஷாப்பிங் பண்ணா மொட்டைதேன் (இது ரெண்டாவது) அப்படி ஏமாந்தா புதனுக்கு பரிகாரம். உணர்ச்சி வசப்பட்டு தேவஸ்தானம் பப்ளிகேஷன்ஸ்ல புக்ஸ் வாங்கினா இன்னம் டபுள் ஸ்ட்ராங் பரிகாரம்.

யதேஷ்டமா சில்லறை,க்ரெடிட் கார்டு, புதுசா வாங்கின காரு, சொந்த தொகுதி எம்.எல்.ஏவோட லெட்டர், தரிசனம் கம் தங்குமிடத்துக்கான ஆன்லைன் புக்கிங், 30 நாட்களில் தெலுங்கு புஸ்தவம்லாம் இல்லாம போனா தாளி பிளாட்ஃபாரம்தேன்.(சுமார் சுத்தமா இருக்கும்.பயந்துக்காதிங்க) அப்படி பிளாட்ஃபாரத்துல படுத்து இமிசை பட்டு தரிசனம் பண்ணா கேதுக்குரிய பரிகாரம்.

உணவு,உடை,இருப்பிடத்துக்கு சுக்கிரன் தான் காரகம்.மேற்சொன்ன சில்லறை முதல் 30 நாட்களில் தெலுங்கு புஸ்தவம்லாம் இல்லாம போனா எல்லாத்துக்கும் அல்லாடவேண்டியதுதான். இதெல்லாம் சுக்கிரனுக்கு பரிகாரம். சுக்கிரனுக்குரிய தேவதை லட்சுமி. இந்த பார்ட்டி பெருமாள் மார்லயே இருக்கிறதா ஐதீகம். ஆக பெருமாளை தரிசனம் பண்ணா லட்சுமியையும் கரெக்ட் பண்ணமாதிரிதேன்.

ஆக திருப்பதி போறது -ஏழுமலையானை தரிசனம் பண்றதுங்கறது 9கிரகத்துக்கும் நைன் இன் பரிகாரமுங்கோ. நகை நட்டுல்லாம் இல்லாம, ஏதோ காட்டன் புடவை, வேட்டி அரைக்கை சட்டைன்னு புறப்பட்டு பஸ்ஸுல போய் பஸ்ஸுல வாங்க. 9கிரகமும் 9 வாரத்துக்கு வேலை செய்யாதுன்னா பார்த்துக்கங்க.

இந்த பதிவை எழுத இன்ஸ்பிரேஷன் தமிழ் ஓவியாவோட பதிவுதான். எதையும் எதோடவும் தொடர்பு படுத்தமுடியும்.(கேயாஸ் தியரி) ஆனால் நாம அந்த வேலைக்கெல்லாம் போறதில்லை.

உள்ளதை இன்டர்பிரிட்டேட் பண்றோம். தட்ஸால். தமிழ் ஓவியாவோட பதிவைஅவசியம் படிங்க. .உண்மையில இந்த பதிவு அவிக போடவேண்டிய பதிவே இல்லை.ஒரு "இறையன்பர்" அதிலும் "பெருமாள் பக்தர்" போடவேண்டிய பதிவு. ஆனால் தமிழ் ஓவியா போட்டிருக்காய்ங்க.இங்கனதான் பெருமாள் நிக்கறாரு.

தமிழ் ஓவியா அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அவரது வலைப்பூவுக்கு ஒரு ஹெடரை டிசைன் பண்ணவச்சேன் அதைத்தான் இந்த பதிவுக்கு படமா வச்சிருக்கேன். படத்தை மெயில் மூலம் அனுப்பறேன். அதுக்குள்ளாற் இங்கே க்ளிக் பண்ணி அவிக போட்ட பதிவை படிங்களேன்.