Showing posts with label நவகிரகங்களுடன் பேட்டி. Show all posts
Showing posts with label நவகிரகங்களுடன் பேட்டி. Show all posts

Sunday, December 30, 2012

செவ்வாய் தோஷம்: ஆண் பெண் வித்யாசம்

நான்: வணக்கம் தலை !

செவ்:
வணக்கம் . தலைக்கு சூரியன் காரகம். நான் எல்லாம் ரத்தம் , எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜைக்கு காரகம்

நான்: ஐம் சாரி பாஸூ.. ஒரு ஃப்ளோல வந்துருச்சு..

செவ்:
நான் பாஸ் இல்லை. பாஸ் ஆகனும்னா சூரியபலம் தேவை. நான் ஜஸ்ட் கமாண்டர் தான்.

நான்:
அடடா.. என்னங்ணா இன்னைக்கு இப்படி கேட்டை போடறிங்க?

செவ்:
இது கரெக்டு .. ஏன்னா நான் சகோதர காரகன்

நான்:
சார்..  நீங்க ஒரு ஜாதகத்துல கெட்டிருந்தா தோஷ ஜாதகம்னு ஓரங்கட்டிர்ராய்ங்களே.. இந்த தோஷம் ஆண் பெண் விஷயத்துல ஒரே மாதிரியா வேலை செய்யுமா? இதுல வித்யாசம் எதுனா இருக்குமா?

செவ்: நிச்சயமா இருக்கும். அதுலயும் இந்திய பெண்ணுக்கும் -அமெரிக்க பெண்ணுக்கும் இடையில கூட வித்யாசம் இருக்கலாம்.

நான்: மொதல்ல ஆண் பெண் வித்யாசத்தை சொல்லுங்க

செவ்:
ரத்தம்ங்கறது ஆண் பெண் ரெண்டு பேருக்கும் பொதுன்னு நினைக்கிறிங்க. பெண் உடலில் ரத்தம் கொஞ்சம் "தின்" ஆ இருக்கும். கிரகண சமயத்துல ஆண் ரத்தமும் பெண் ரத்தம் போல மாறுதாம். ஜெனரலாவே பெண் ரத்தத்துல ஹீமீக்ளோபின் குறைவா இருக்கும். மேலும் பெண்ணின் உடலில் மென்ஸ்ட் ருவல் சைக்கிள்னு ஒன்னிருக்கில்லை.  அதனால பெண்ணோட பாடிக்கு எஃபெக்ட் சாஸ்தி.

நான்:
புரியுது புரியுது.. அப்போ ஆண் ஜாதகத்துல நீங்க கெட்டிருந்தாலும் எஃபெக்ட் குறைவுங்கறிங்க?

செவ்:
ஒடனே மேல் சேவனிசம் ! பெண்ணுக்கு அந்த மேட்டர்ல பிரச்சினை அதிகம்னா ஆணுக்கு கோபம் கோபம்னு ஒன்னிருக்கில்லை. அந்த ரூட்ல ஆப்படிச்சுருவன்ல

நான்:
கிளிஞ்சுது ..எந்த ஆண் கோபத்திய ரோட்ல காட்டறான். காட்டினா கிளிஞ்சுரும்ல..முக்காவாசி ஆம்பளை ஊட்டு பொம்பள மேலதானே கோவத்தை காட்டறான்.

செவ்:
அது கூட கரெக்டுதான்..அதுக்கு தானே கரண்டு, நெருப்பு,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகள்னு ஆப்ஷன்ஸ்  வச்சிருக்கன். அதை வச்சு பல்பு கொடுத்துருவனே..

நான்:
அண்ணா ! ஒரு மேட்டர் ஸ்பார்க் ஆகுது. தாய்குலம் எப்பயும் நெருப்போடயே விளையாடறாய்ங்கல்ல..இதனால தோஷம் குறையுமோ?

செவ்:
நிச்சயமா குறையும். அடுப்புல ஒவ்வொரு தாட்டி ஏத்தி இறக்கறப்பயும் சூடுபட்டுக்கிறது, கொதிக்கிறது தெறிச்சு விழுகுறதுன்னு தோஷம் இன்ஸ்டால்மென்ட்ல தீரும். அதே சமயம் அவிக சூப்பரா சமைச்சு பேர் வாங்கினா தோஷம் கூடும்.

நான்:
அப்போ ..இதே ரூட்ல இன்னொரு பாய்ண்டும் ஸ்பார்க் ஆகுது..ஆண்கள் உங்க காரகத்துல வேலை செய்துக்கிட்டிருந்தாலும் தோஷம் குறையும் அப்டித்தானே..

செவ்:
குறையலாம்.ஆனால் அந்த தொழில்,உத்யோகம்,வியாபாரத்துல லாபம் சம்பாதிச்சாலும், பேர் புகழ் பெற்றாலும் தோஷம் அதிகரிக்கும்.

நான்:
மொத்தத்துல கணக்கு கணக்கு தான்..
செவ்:
இல்லையா பின்னே..

நான்:
சார்.. உங்களை ஒரு கேள்வி கேட்கறேன்..வேற எதுனா கேளுன்னு நசிகேதனை டைல்யூட் பண்ண எமன் மாதிரி டைல்யூட் பண்ணப்படாது..

செவ்:
ச்சொம்மா கேளு கண்ணா..

நான்:
உங்களோட பலம் இல்லாத ஜாதகத்துல பிறந்து அவதிபடனும்னு ஆரு எளுதி வச்சாய்ங்க?

செவ்:
நீங்க தான் கண்ணா.. கடந்த பிறவியில என் (செவ்)  காரகமுள்ள சனத்தை டார்ச்சர் பண்ணி ,சட்டம் நியாயத்துக்கு புறம்பா என் (செவ்) காரகமுள்ள பொருட்களை லவட்டிக்கிட்டவுக அந்த கருமத்தை தொலைக்க நான் பலமிழந்த ஜாதகத்துல பிறந்து அவதி படறிங்க..

நான்:
அடடா.. இப்பத்தேன் கணக்கு டாலி ஆகுது. நம்ம ஜாதகத்துல நாலமிடத்துல நின்னுருக்கிங்க. போன ஜன்மத்துல அம்மாவோட அருமை தெரியாம அவமதிச்சிருக்கனும். அடுத்தவன் வீட்டை ,வாகனத்தை கொளுத்தியிருக்கனும்.இந்த காலத்து அரசியல் வாதிங்களை போல நில ஆக்கிரமிப்பெல்லாம் செய்திருக்கனும். அண்ணன் தம்பிகளுக்கு உரிய பங்கை கொடுக்காம ஆப்படிச்சிருக்கனும். அதனாலதேன் இந்த ஜன்மத்துல இப்படி ஒரு ஜாதகத்துல பிறந்து நாயடி பட்டேன்னு நினைக்கிறேன்.

செவ்:
கரெக்டு..

நான்:
இதுக்கு பரிகாரம்?

செவ்:
என்  காரகமுள்ள சனத்துக்கு  என் காரகமுள்ள பொருட்களை ஃப்ரீயா கொடுத்துட்டிரு .. ஒரு கட்டத்துல கணக்கு டாலி ஆனதும் மேட்டர் ஓகே ஆயிரும்.

நான்:
ரெம்ப நன்றிங்ணா.. இன்னம் நிறைய கேள்விகள்ளாம் இருக்கு. நாளைக்கு கேட்கிறேன்.
செவ்:
அப்படியே ஆகட்டும்.

Thursday, December 27, 2012

செவ்வாயுடன் பேட்டி: 2

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி வரிசையில செவ்வாயுடனான பேட்டி இந்த பதிவிலும் தொடர்கிறது.

நான்: வணக்கம் செவ்வாய் சார் ! பேட்டியை தொடரலாமா?

செவ்: கேள்விகளை கேள் !

நான்:
பாஸ் ! ஒரு ஜாதகத்துல மத்த கிரகங்கள் கெட்டிருந்தா அந்த கிரகம் கெட்டுப்போச்சு –இந்த கிரகம் கெட்டுப்போச்சுன்னு தான் சொல்றாய்ங்க. நீங்க கெட்டிருந்தா மட்டும் தோஷ ஜாதகம்னு தனியா எடுத்து வச்சுர்ராய்ங்க - அதே மாதிரி தோ.ஜாதகத்துக்குத்தான் இதை கண்ணாலம் பண்ணனும்னு சொல்றாய்ங்களே ஏன்?

செவ்:
நைனா! என்னோட காரகங்கள்ள முக்கியமானது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜை. அங்கன தான் வெள்ளையணுக்கள் உருவாகுது. இந்த வெள்ளை அணுக்கள் தான் நோய் கிருமிகளை எதிர்த்து போராடி மன்சனை நோய்லருந்து காப்பாத்துது. ஒரு ஜாதகத்துல  நானே  பல்பு வாங்கியிருந்தேன்னு வை. அப்பம் அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியிலயே தகராறு இருக்கும்.  சின்ன நோய் கூட சீக்கிரத்துல குணமாகாது. மறுபடி மறுபடி வரும். உசுருக்கே கூட உலை வச்சுரலாம். அதனாலதேன் தோஷ ஜாதகம்னு சொல்லி பக்கத்துல எடுத்து வச்சுர்ராய்ங்க.

நான்:
இது ஓகே பாஸூ.. தோஷ ஜாதகத்தை தோஷ ஜாதகத்துக்கு கட்டி வச்சுட்டா தோஷத்தை காக்கா தூக்கிட்டு போயிருமா?

செவ்:
9 விதமான விஷங்களை போகர் கலந்து நவபாஷாணம் தயாரித்து அதுல பழனி முருகன் சிலையை செய்து வச்சிருக்காரு.அது எல்லா நோயையும் குணமாக்குதுன்னு சொல்றாய்ங்களே அதே ஃபார்முலா தான் இங்கனயும் ஒர்க் அவுட் ஆகும். ரெண்டு தோஷம் சேரும்போது தோஷம் யோகமா மாறிருதுன்னு சொன்னா துள்ளி குதிக்க இங்கன சனம் காத்திருக்காய்ங்க.ஆனா அஸ்கு புஸ்கு .. அந்த பப்பெல்லாம் வேகாது.

நான்:
பின்னே என்ன ம னாவுக்கு தோஷத்தை தோஷத்தோட சேர்க்கிறாய்ங்க.

செவ்:
ரெண்டும் அல்ப்பாயுசு .முன்னே பின்னே போய் சேரட்டும்னுதேன். மேலும் சுத்த ஜாதகம் தோஷ ஜாதகத்தோட சேர்ந்தா ஒருத்தர் டிக்கெட் போட்டுர இன்னொருத்தரு விதவனாவோ/விதவையாவோ இருக்க வேண்டி வரும். இதனால கள்ளத்தொடர்பு அது இதுன்னு ரூட்டு மாறிரும் இல்லியா.. அதனாலதேன் இந்த ஏற்பாடு. மேலும் பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னுங்கறாப்ல தோஷ ஜாதகத்தை கட்டிக்கிட்ட பார்ட்டியும் தோஷத்தை அனுபவிக்க வேண்டி வந்துருமில்லியா அதை அவாய்ட் பண்ணத்தேன் இந்த ஏற்பாடு

நான்:
அது சரி பாஸூ..இப்பத்தேன் சகட்டுமேனிக்கு ஆன்டிபயாடிக்ஸ் தயாரிச்சு வச்சுருக்கமில்லை ..அதெப்படி சாக விட்டுருவம்?
   
செவ்:
உங்காளுங்க தயாரிச்சு ஏத்தற ஆன்டிபயாடிக்ஸுதேன் ஹ்யூமன் பாடியில இயற்கையா உள்ள இம்யூன் சிஸ்டத்தையே ஒழிச்சுட்டு இருக்குன்னு தெரியாதா உனக்கு . மேலும்  நான் கெட்டா ஜஸ்ட் இம்யூன் பவர் தான் குறையும்னு நினைச்சா எப்படி?

நான்:
இன்னம் என்னெல்லாம் பல்பு வாங்கும் பாஸூ..

செவ்:
நான் ரத்தத்துக்கு காரகன். ஒரு ஜாதகத்துல நான் கெட்டா ரத்தம் கெடும். ரத்தம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையும் வரலாம். ரத்தததோட வேலை என்ன? செல்களுக்கு ஆக்சிஜன் சப்ளை பண்றது.  நான் கெட்டா ரத்தம் சரியா பம்ப் ஆகாம போகலாம். அடைப்புகள் ஏற்படலாம். இதனால செல்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்கலின்னா என்னாகும்? முக்கியமா மூளைக்கு கிடைக்கலின்னா என்னாகும்?

நான்:
இதுவும் மெடிக்கல் ப்ராப்ளம் தான். நாங்க தான் என்னெனமோ தகிடுதத்தம்லாம் செய்து மேனேஜ் பண்றோமே.

செவ்:
இங்கதான் பரிகாரம்ங்கற பாய்ண்டு வருது. நான் 3,6,10,11 தவிர எங்கருந்தாலும் தோஷம்னு சொல்றாய்ங்க.அதே நேரம் இன்னின்ன அமைப்பு இருந்தா தோஷம் பரிகாரம் ஆகும்னு சொல்றாய்ங்கல்ல .. உ.ம் நான் குருவோட சேர்ந்தா தோஷம் பரிகாரம்னு சொல்றாய்ங்க. குரு = தனகாரகன். பைசா இருக்கிறவனுக்கு மெடிக்கல் ரெமிடி கிடைக்கும்.

நான்:
அப்போ ஒரு ஜாதகத்துல நீங்க கெட்டா ஆவிசுக்கு கியாரண்டி இல்லேங்கறிங்க.

செவ்:
ஆமா நைனா.. நானு கோபத்துக்கு காரகன். நெருப்பு,மின்சாரம் , ஃப்யூயல்ஸுக்கு நான் தான் காரகன்.

ரத்தம் கெட்டவனுக்கு இயலாமை இருக்கும்.இயலாமைதான் கோபத்துக்கு காரணம்.கோபம் வந்தா மன்சன் என்னா பண்றான்னு அவனுக்கே தெரியாது. அவன் கொலை பண்ணுவானோ -தற்கொலை பண்ணிக்குவானோ இதர கிரகங்களோட பலத்தை பொருத்து டிசைட் ஆயிருது.

நெருப்புங்கறியா? என்னதான் தீயணைப்பு படை இருந்தாலும் தீப்பிடிச்ச வீட்டுக்காரனோட ஜாதகத்துல சந்திரன் நெல்ல இடத்துல இருந்து என்னை பார்த்தாலோ அ என்னோட சேர்ந்தாலோதான் தீ-அ.படை வந்து சேரும். இல்லாட்டி சாம்பல்தான்.

இதையே மின்சாரம் ,ஃப்யூயல்ஸுக்கும் பொருத்திப்பார்த்துக்க

நான்: பாஸூ.. ஷ்ரீராஜன்ங்கறவரு சில கேள்விகள் கேட்டிருக்காரு .உங்க பதிலை எதிர்ப்பார்க்கிறாரு .

செவ்: ச்சொம்மா கேளு கண்ணா ..காசா பணமா..? இல்லை சனந்தான் இதை எல்லாம் படிச்சுட்டு தெளிஞ்சுரப்போறாய்ங்களா.. கேளு

நான்: logic உள்ள இடங்கள் -உங்களுக்கு சொந்தம் என்றால் தர்க்க சாத்திரம் புதனுக்கு எப்படி சொந்தமாகும்?

செவ்: புதன் வித்யாகாரகன் .வியாபாரகாரகன்,கணிதத்துக்கு காரகன்.வித்தை,வியாபாரம்,கணிதத்துக்கு தேவையான அளவு லாஜிக்கல் நாலெட்ஜை அவரு கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கை ஒரு போர்களம். நான் யுத்தகாரகன். யுத்தத்துல தேவைப்படற லாஜிக்கல் நாலெட்ஜுக்கும் வித்தை,வியாபாரம்,கணிதத்துல தேவைப்படற லாஜிக்குக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.

நான்:
மலைக்கு அதிபதி சூரியன் குறிஞ்சி கடவுள் முருகன் எப்படி உங்கள் தெய்வம் ஆனாரு?

செவ்:
கண்ணா நான் நெருப்புக்கு காரகன் .முருகன் மொதல்ல 6 தீப்பொறிகளா வெளிப்பட்டவரு. நான் யுத்தகாரகன்.அவரு தேவ சேனாதிபதி. இப்படி பல காரணம் இருக்கு. அதனாலதேன் எனக்குரிய கடவுளா முருகனை வச்சுருக்காய்ங்க

நான்:
logic+mech செவ்+சனி எஞ்சினீயர் logic+computer செவ்+ராகு- ப்ரோகிராம் -எஞ்சினீயர் செவ்+ராகு+சுக்- சினிமா டைக்டரர் logic+தரகர்-செவ்+புதனுக்கு ஷேர் மார்கெட் புரோக்கர் செவ்+கேது-மருத்துவர்? செவ்+சூரி-? செவ்+சந்_

செவ்:
இது ஒன்னோட வேலை .செவ்வாயோடு கிரகங்கள் சேரும்பலன்னு தலைப்பு கொடுத்து தீர்பபட்டா எளுதிக்க.  நிறைய வேலை இருக்கு. நாளைக்கு பார்ப்போம்.

நான்:
ஓகே பாஸ்..

Tuesday, December 11, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: சந்திரன்

அண்ணே வணக்கம்ணே !

நீங்க நம்ம கிட்டே என்ன எதிர்ப்பார்க்கிறிங்க? நமக்கு புவ்வாவுக்கு வழி பண்றது எது ? எல்லாமே நெல்லா தெரியும்.

ஆனாலும் இன்னைக்கு நாம ரசினி காந்தை கேட்டாப்ல  நாளைக்கு நம்மை ஒரு பார்ட்டி கேள்வி கேட்டுரக்கூடாதேங்கற பயத்துல - அட கேட்டாலும் சால்ஜாப்பு சொல்லிக்கலாம்னு வைங்க. இந்த மனசாட்சி மனசாட்சின்னு ஒன்னு இருக்கே . இது பொஞ்சாதியை விட மோசம்.

ஒரு டிடிஹெச் ஐ வச்சு பொஞ்சாதி வாயை அடைச்சுரலாம்.ஆனால் இந்த மனசாட்சி? ஊஹூம்.. நாம தூங்கப்போறதே விடியல்லதேன்.அப்பமும் தூங்க விடமாட்டேங்குதுண்ணே.

அதனாலதேன்  அப்பப்போ ட்ராக் மாறி ரஜினி,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றியெல்லாம் எழுத வேண்டியதா இருக்கு.

அதே சமயம் நாம ஏதோ சனங்க மேல அக்கறையோட இதெல்லாம் பண்றோம்னு நினைச்சா அதுவும் தப்பு. ஆத்தாளுக்கும் நமக்கும் ஒரு அக்ரிமென்ட் "ஆத்தா .. நீ என்னை பார்த்துக்க - நான் இவிக மேட்டரை பைசல் பண்றேன்"

அடுத்து இம்மாம் அறிவையும் சுய நலத்துக்கு பயன்படுத்தினம்னு வைங்க கருமம் தேன் வந்து சேரும் . போன சன்மத்துல என்னா கருமம் பண்ணமோ இந்த சன்மத்துல 14 வருச வனவாசம் மாட்டிக்கிச்சு. ஊர் வேலை செய்தம்னு வைங்களேன் கருமம் தொலையும்.

அவ்ளதானே தவிர சனங்க மேல நமுக்கு அக்கறைல்லாம் கிடையவே கிடையாது. அதுவும் தன்னை தனக்கு மேல உள்ளவன் சுரண்ட சுரண்ட -  தனக்கு கீழே உள்ளவனை தான் சுரண்டற சனம்னா நமுக்கு எந்தவித சாஃப்ட் கார்னரும் கிடையாது.

மொக்கை ஓவராயிருச்சுல்ல . இதோ  மெயின் ட்ராக்குக்கு வந்துட்டன். நவகிரகங்களுடன் பேட்டி இந்த பதிவில்  தொடருது. சூரியன் ஓவர். இன்னைக்கு சந்திரன். சந்திரன்னு அடிச்சதுமே கவிதை பொங்குது.

சந்திரனோ நீ மந்திரனோ
மந்திரமே போல்
எம் மனம் மாற்றும் மாயாவி

எண்ணம் போல் மனம் என்றார் சான்றோர்
மனம் ஒரு குரங்கென்றார் ஆன்றோர்

எண்ணம் ஒரு விதையானால்
மனம் அதை ஏற்கும் நிலமாமே

நின் பலம் பொருத்தே மனம்
மனதின் வலு பொருத்தே கிளை விடும்  எண்ணம்

எண்ணங்கள் விரிந்திடில் மனம் அது  மாறும்
அதற்கும் தேவை நின் பலம்.

மனம் ஒரு குரங்கென்றார்.
எம் மனமாளும் மன்னவன் நீ ..

ஒரு  நாளில் சாரம் மாறி -அதற்குள்
இரு சோடி பாதம் மாறி

எம் மனதை மாற்றி மாற்றி
அதற்கே குரங்கெனும் பெயர் தந்தாய்.

இதே ரேஞ்சுல நாற்பது பக்கம் அடிச்சுரலாம் போல ஊற்று பொங்குது. கவிதை பிறப்பது மனதில் . சந்திரன் தான் மனோகாரனாச்சே.

இருந்தாலும்  இந்த சேதி அல்லாரையும் ரீச் ஆவுறதுக்காவ நம்ம நடைக்கே திரும்பிர்ரன்.

சந்திரன் பெண் கிரகம் என்பதை மனதில் வைக்கவும். ஆனால் நாம பாட்டுக்கு கலாய்க்க மாதர் சங்கம் காரவுக எதுனா புகார் பண்ணிட்டா வம்பு.அதனால சந்திரனை ஆணாகவே ட்ரீட் பண்ணி இன்டர்வ்யூவை முடிச்சுர உத்தேசம்.

நான்:
குட் மார்னிங் தாத்தா !
 சந்திரன்:
மானுடனே.. நாங்க அமுதம் சீப்பி குடிக்கிறவுக. சீப்பா தாத்தாங்கறே..

நான்:
கொஞ்சம் பொறுமையா இருந்தா உறவு முறையை விளக்கமா சொல்றேன்.

சந்திரன்:
சொல்லித்தொலை

நான்:
தாத்தா.. லெச்சுமிக்கு பிரம்ம தேவர் மகன் முறை. விஷ்ணுவோட ஹிப்லருந்து தான் பிரம்மா வந்தாராம்ல.  நான் கலைமகளோட மவன். கலைமகளுக்கு மாமி லெச்சுமி.  மம்மிக்கு மாமியார் எனக்கு பாட்டி முறை. . லெச்சுமிக்கு நீ எல்டர் ப்ரதர். அப்ப நீங்க  தாத்தா  இல்லாம வேற என்னவாம்?

சந்திரன்:
அடங்கொய்யால .. 45 வருச குப்பைய மண்டையில சேர்த்து வச்சிருக்கிற நீ யூத்து .  ரெண்டே கால் நாளைக்கு ஒரு தடவை ஓ.எஸ் ஐ அப்கிரேட் பண்ணி - 14 நாளைக்கு ஒரு தடவை  ஹார்ட் டிஸ்கை ஃபார்மட் அடிச்சுக்கிற  நான் கிழவாடி .ஒனக்கு தாத்தாவா?

நான்:
ஹார்ட் டிஸ்கு ஒன்னுதானே தாத்தா ..

சந்திரன்:
த பாரு . உன் வழிக்கே வந்துர்ரன் .அப்பன் மவனுக்கு இடையில வேணம்னா ஈகோ ப்ராப்ளம் இருக்கலாம். தாத்தா பேரனுக்கு இடையில ஃப்ரெண்ட்ஷிப் தான் இருக்கும். என்னை ஃப்ரெண்டா ட்ரீட் பண்ணி பேசறாப்ல இருந்தா பேட்டி இல்லின்னா சர்தான் போடீ..

நான்:
தாத்.. சாரி.. ஃப்ரெண்ட் !  .. இதுக்கே கோவிச்சுக்கிட்டா எப்டி.. பேட்டி நிச்சயம் தேவை. கேள்விகளளை கேட்கட்டுமா?

சந்திரன்:
கேள்.ஆனால் ஒரு நிபந்தனை பதில்  நாளைக்குத்தேன்.

நான்:
என்னைக்கோ எப்படியோ  பதில் தருவிங்கல்ல.. கேட்டுர்ரன்

1.கடலுக்கும் உங்களுக்கும் என்ன லிங்க்?

2.ஹ்யூமன் பாடியில உள்ள நுரையீரலுக்கும் உங்களுக்கும் இருக்கிற கனெக்சனுக்கு அடிப்படை என்ன?

3.உங்களுக்கு மனோகாரகன்னு ஏன் பேர் வந்தது?

4.பப்ளிக் சப்போர்ட்டுக்கு உங்க பலம் தேவைங்கறாய்ங்களே  அது ஏன்?

5.சந்தையிலருந்து - மேரேஜ் ஹால் வரை ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடங்களுக்கு நீங்கதேன் இன்சார்ஜாம்? இதுல உள்ள லாஜிக் என்ன?

6.உங்களுக்கு எந்த கிரகமும் பகையில்லைங்கறாய்ங்களே அது இன்னா கணக்கு?

7.பிரமுகர்களின் மனைவிகளுக்கு நீங்க தான் அதிபதியாம் இதுக்கு என்ன காரணம்?
8. தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுக்கெல்லாம் உங்க பலம் அத்யாவசியம்ங்கறாய்ங்க. இதன் பின்னான தர்க்கம் என்ன?
9.மனம் , நுரையீரல், சிறு நீரகம் இந்த மூன்றுக்கும்  உங்களூக்கும் இடையிலான தொடர்பு என்ன?
10.காதல்ல உங்க ரோல் என்ன?
11. சஞ்சலத்துக்கு நீங்கதேன் காரகமாம். சஞ்சலத்தால நன்மையா தீமையா?
12. படகு, கப்பல்,கடல்  பயணம் இதுக்கும் உங்களுக்கும் என்ன லிங்கு?
13.அழுகும் பொருட்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
14.சந்திர பலம் உள்ளவன் எப்படி இருப்பான்?
15.இல்லாதவன் எப்படி இருப்பான்?
16.சந்திர காரகம் கொண்ட பெண் எப்படி இருப்பாள்?

குறிப்பு:
கேள்வி நான் மட்டும் கேட்கனம்னு  இல்லை. நீங்களும் கேட்கலாம். அடிச்சு விடுங்க.

எச்சரிக்கை:
அண்ணே ..நம்ம லோக்கல் ஆட் மேகசின் சார்பில் டெய்லி காலண்டர் போடப்போறோம். அதுவும் 1+1 .கமர்ஷியல் ஒன்னு ,பொலிட்டிக்கல் ஒன்னு. இது இல்லாம காண்ட் ராக்ட்  அடிப்படையில யாவாரிங்களுக்கு தனியே போட்டு தரப்போறோம். முன்னது இரண்டும்  நேரடி இலவச வினியோகம்.பின்னதை பார்ட்டிக்கு கொடுத்துர அவிக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துருவாய்ங்க./
இந்த டீட்டெய்ல் எல்லாம் தந்தது  டிசம்பர் 15 வரை இப்படி அரைகுறை பதிவா தான் வரும்னு சொல்லத்தேன். உடுங்க ஜூட்டு.கடமை அழைக்குது..

Tuesday, December 4, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: சூரியன் 3

அண்ணே வணக்கம்ணே !
மூல நூல்கள் ஒரு பக்கம் , அவா ஒரு பக்கம் , நம்மாளுங்க ஒரு பக்கம் இது போதாதுன்னு நாம வேற  கிரகங்களுக்கு ஏஜெண்டு போல -கிரகங்களுக்கு மீடியம் போல ஆன அலப்பறைல்லாம் செய்துக்கிட்டிருக்கம். அதுல ஒரு புது ட்ரென்டு தான் இந்த பேட்டி சமாசாரம். சூரியனுடனான பேட்டி இந்த பதிவிலும் தொடர்கிறது .

யத்பாவம் தத்பவதி - நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்ங்கறாய்ங்க. அதை போல சூரியனை நினைச்சு அவருடனான பேட்டிய எழுத ஆரம்பிச்சதுமே சுத்தலும் -அறிவித்தலும் நடந்துருச்சு. ( ஸ்ரீ அம்மன் சத நாமாவளியை வேலூர் சனத்துக்கு வினியோகிச்சதை சொல்றேன்)

அறிவிப்பு -விளம்பரம் - மோட்டிவேஷன் -சூப்பர் விஷன் -இதுக்கெல்லாமும் சூரியன் தான் காரகர்.

சூரியனுடனான பேட்டி இந்த பதிவிலும் தொடர்கிறது

நான்:
வணக்கம் சூரியன் சார் !

சூரியன்:
அடடே நீயா வாய்யா .. இன்னுமா உன் கேள்விகள் முடியலை.

நான்:
போங்க பாஸ்..சின்னதா ஒரு கேல்க்குலேட்டரை விழுங்கியிருந்தா உங்களால  ஜாதகங்களை எத்தனை விதத்துல பாதிக்க முடியும்னு ஒரு ஃபிகரையே கொடுத்திருப்பன்.  நானா  கணக்குல வீக்கு. கேல்க்குலேட்டரும் கைவசமில்லை.  அதனாலதேன் முக்கி முக்கி உங்களை கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டிருக்கன்.

சூரியன்:
சரி சரி கேள் ..

நான்:
பாஸ் .. ஒரு தொழிலை எடுத்துக்கிட்டா இது சனி காரகம், புத காரகம்னு ஐடென்டிஃபை பண்றோம். அந்த மாதிரி உங்களோட காரகம் கொண்ட பெண் எப்படி இருப்பான்னு சொல்லுங்களேன்

சூரியன்:
எடுத்த உடனே பொம்பள சமாசாரத்துக்கு போயிட்டியா.. உருப்பட்ட மாதிரிதான். சொல்லி தொலைக்கிறேன். என்னோட  காரகம் கொண்ட பெண்களை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம். பாசிட்டிவ் -நெகட்டிவ்.

நான்:
என்னா தலை .. உங்க காரகத்துல நெகட்டிவ் கூட இருக்கா என்ன?

சூரியன்:
போடா பொங்கி !  ஜாஜ்வல்யமா பிரகாசிக்கிற என் பாடியிலயே கரும்புள்ளிகள்ளாம் இருக்கு தெரியுமா? நான் பெட்டர் பொசிஷன்ல இருந்து லக்னத்துலயோ ,ஏழுலயோ நின்னா , லக்னத்தை பார்த்தா என்னோட காரகம் பாசிட்டிவா அமையும்.

இதுவே பிட்டர் பொசிஷன்ல இருந்து லக்னத்துலயோ ,ஏழுலயோ நின்னா , லக்னத்தை பார்த்தா என்னோட இம்பாக்ட் நெகட்டிவா அமையும்.

நான்:
அது சரி அது சரி.. மொதல்ல பாசிட்டிவ் ஃப்யூச்சர்ஸை சொல்லுங்க.

சூரியன்:
முகத்தில் ஒரு வித  சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, , கருணை. கண்டிப்பு , தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.

பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.

தேன் நிற விழிகள் , செம்பட்டை கூந்தல் ,ஒல்லியான தேகம் , அவிக குடும்பத்துக்கு கிராமாதிபத்யம் இருக்கலாம்.

ஹார்ட் ஆஃப் தி டவுன் /புதிய காலனியில் முதல் வீடு/ குக்கிராமத்துல இவிக சாதியை சேர்ந்த குடும்பம் வேறு எதுவும் இருக்காது.

இவிக மேட்டர்ல 1 என்ற எண் விளையாடும். ஒரே பெண்ணா இருக்கலாம். பவர் க்ளாஸ் அணியலாம்.

நான்:

நெகட்டிவ் ஃப்யூச்சர்ஸை சொல்லுங்க..

சூரியன்:
பாசிட்டிவ் ஃப்யூச்சர்ஸே டூ மச் ஆனா அதான் நெகட்டிவ். உதாரணத்துக்கு  பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல்ங்கற பாய்ண்டை எடுத்துக்க . பாதிக்கப்பட்டவன்   நேர் வழியில போய் பாதிக்கப்பட்டிருந்தா ஓகே. குறுக்குவழியில போய் பாதிக்கப்பட்டிருந்தா?  காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்தா பரவால்லை. கள்ள காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்தா?

நான்:
பாஸ் ! எங்கயோ போயிட்டிங்க. பாசிட்டிவுக்கும் நெகட்டிவுக்கும் இருக்கிற வித்யாசம் இவ்ளதானா?

சூரியன்:
ஆமாம் கண்ணா ..

நான்:
பாஸ் ! ஒரு ஜாதகத்துக்கு நீங்க பாவினு வைங்க. அப்ப என்னா மாதிரி பலனை தருவிங்க?

சூரியன்:

இந்த பாய்ண்டை ஏற்கெனவே டச் பண்ணியாச்சு. இருந்தாலும் உன் மரமண்டைக்கு உறைக்கிறாப்ல சொல்றேன். நான் ஒரு ஜாதகத்துக்கு பாவின்னு வை. அந்த ஜாதகம் 3 + 3  வோல்ட்  ரீசார்ஜபிள் பேட்டரி மாதிரி.

நானா அளவில்லாம கொடுக்கிறவன். 6 வோல்ட் பேட்டரிக்கு 220 வோல்ட் சார்ஜ் கொடுத்தா என்னாகும். அதுல கனெக்ட் பண்ண பல்பு ஜகஜ்ஜோதியா ஒரு செகண்ட் எரிஞ்சுட்டு பஸ்மமாயிரும்.

அதாவது நான் பாவியாக உள்ள ஜாதகனுக்கு எங்கிட்டே இருந்து வெளிப்படற சக்தியை க்ராஸ்ப் பண்ணிக்கிற கப்பாசிட்டி இருக்குமே தவிர அதை ஸ்டோர் பண்ணிக்கிற சிஸ்டமோ - சானலைஸ் பண்ணிக்கிற சக்தியோ இருக்காது.

இதனால தன்னம்பிக்கை ஆணவமா , சுறு சுறுப்பு படபடப்பா, மேற்பார்வை கார்வார் பண்றதா, கண்டிப்பு -சாடிஸமா  வெளிப்படும்.  அவன் நேரம் நல்லாருக்கிறவரை சனம் இதையெல்லாம் சகிச்சுக்கும். அவன் நேரம் கெட்டதும் போடாங்கொய்யாலன்னு மண்டையில போட்டுட்டு  விலகிரும்.

நான்:

செமை லாஜிக்கு. அப்போ நீங்க சுபனா உள்ள ஜாதகத்துக்கு எப்படியா கொத்த பலனை தருவிங்க?

சூரியன்:

தோசைய திருப்பி போடு மேன் ! நான்  சுபனாக  உள்ள ஜாதகனுக்கு எங்கிட்டே இருந்து வெளிப்படற சக்தியை க்ராஸ்ப் பண்ணிக்கிற கப்பாசிட்டியோட பவரை  ஸ்டோர் பண்ணிக்கிற சிஸ்டம் + பவரை   சானலைஸ் பண்ணிக்கிற சக்தியும் இருக்கும்.

நான்:

தலை.. இதுல இவ்ளோ மேட்டர் கீதா.. ஒரு வேளை பாபனா இருந்து ஜாதகத்துல நீங்க கெட்டிருந்தா ?

சூரியன்:

சகட்டு மேனிக்கு மானாவாரியா  பவர் க்ராஸ்பிங்குக்காக நீட்டிக்கிட்டிருக்கிற எலக்ட் ரிக் வயரை இன்ஸுலேட் பண்ண மாதிரி ..

நான்:

ஒரு வேளை நீங்க சுபனா இருந்து ஜாதகத்துல கெட்டிருந்தா ?

சூரியன்:

ஸ்டோரிங் சிஸ்டம்  - சானலைசிங் கப்பாசிட்டி எல்லாம் இருந்தும் பவர் கேபிளோட முனைய இன்ஸுலேட் பண்ணித்தொலைச்ச மாதிரிதேன்.

நான்:

பாஸ் ! பாஸ் !  நீங்க ஒரு ஜாதகத்துல பெட்டர் பொசிஷன்ல இருந்தா அவனோட பிஹேவியர் எப்படி இருக்கும்? பிட்டர் பொசிஷன்ல இருந்தா நிலைமை என்ன?  இதான் கடேசி கேள்வி..


சூரியன்:

மொதல்ல  நீ கொஞ்சம் ரோசிச்சு வை.  நீ கெடுத்து வச்சிருக்கிற சனமும் ரோசிக்கட்டும். எதையாவது சொல்லி வைங்க. நாளைக்கு நான் பார்த்துட்டு அசலான மேட்டரை சொல்றேன்.

(தொடரும்)

Saturday, November 17, 2012

நவகிரகங்களுடன் ஒரு பேட்டி: சூரியன் 2

நான்:
வணக்கம் பாஸ் !

சூரி:
மறுபடி நீயேவா? நான் லக்னத்துல நின்னா சொந்தத்துக்கு செய்ற வேலை உருப்படாது..பிரதிபலன் கிடைக்காதுன்னு சொல்றாய்ங்களே ..ஏன்னு முந்தா  நேத்து  ஒரு கேள்வி கேட்டிருந்தே அதுக்கான பதிலை இப்ப சொல்றேன்..

நான்:
சொல்லுங்க பாஸ்.

சூரி:
கிழக்குல உதிச்சு மேற்குல மறையறேன். சிக் லீவ், இயர்ன்ட் லீவ்,காஷுவல் லீவ் ,ஃபெஸ்டிவல் லீவ் எதுவும் கிடையாது. ஒரு நாள் கூட லீவு எடுக்கிறதில்லை. கிரகண சமயத்துல கூட  நான் உதிச்சுர்ரன். அதுக்கப்பாறம் தான் ராகு வந்து என்னை மறைக்கிறாரு. ஆனால் இதுக்கெல்லாம் ஒரு பைசான்னா ஒரு பைசா கூட ரெம்யூனரேஷன் கிடையாது.

மேலும் என்னால் உங்களுக்கெல்லாம் ஒளி கிடைக்குது. வெப்பம் கிடைக்குது. சந்திரனுக்கு ஒளி கிடைக்குது. எனக்கு என்ன கிடைக்குது? பல ஆயிரம் வருசங்களா எரிஞ்சுக்கிட்டிருக்கிறதால எனக்குள்ள இருக்கிற சப்ஸ்டன்ஸ் குறைஞ்சுக்கிட்டே வருது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் கற்பூரம் கணக்கா "குளிர" வேண்டியதுதான்.  மேலும் என்னை விட்டு விலகி இருக்கிறவுகளுக்கு தான் லாபமே தவிர என்னை நெருங்கி வந்தா பஸ்மம்.

நேத்தே சொன்னாப்ல எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்.லக்னத்துல  நான் உள்ள ஜாதகன் அவனும் ஒரு குட்டி சூரியன் தான்.

அவன் மன்சங்கறதால அவனுக்கு இந்த பூமியில்  வாழ பிரதிபலன் தேவைப்படுது -ஆனால் கிடைக்காது, அவனை மக்கள் நெருங்கி வந்தாதான் சமூக வாழ்வு சோபிக்கும். நெருங்கி வரலின்னா தனிமையில தவிக்கனும்.

நான்:
பாஸ் ! நீங்க பேச பேச எனக்குள்ள இன்னொரு பாய்ண்டும் ஸ்பார்க் ஆகுது .சொல்லவா?

சூரியன்;
சொல்லுப்பா..

நான்:
நீங்களா உலகத்தையே தட்டி எழுப்பறவரு. மன்ச ஜன்மம்னா - கொஞ்சமாச்சும் ரிலாக்ஸேஷன் இருக்கனும். நீங்க லக்னத்துல நின்னா அவனுக்கு செரியான தூக்கம் கூட இருக்காது.  மறு நாள் ஒத்தை தலைவலி மலச்சிக்கல்,முதுகுவலின்னு அவதிப்படுவான் . இந்த கடுப்புல எல்லாரையும் கடுப்படிச்சு அல்லாத்துக்கும் விரோதமாயிருவான் ..அப்டித்தானே.

சூரியன்:
ஓரளவுக்கு லைனை பிடிச்சிருக்கே .. இன்னம் கொஞ்சம் தம் கட்டு .

நான்:
ராத்திரி நேரத்துல எல்லாமே மச மசன்னு இருக்கும். சுமாரான குட்டி கூட சூப்பர் குட்டியா தெரிவா.தூக்கத்துல அறிவாளியும் ஒன்னுதான் . முட்டாளும் ஒன்னுதான்.ஆனால் நீங்க உதிச்ச பிறவு ? எல்லாமே பளிச் ஆயிருது. லக்னத்துல நீங்க நின்னா.. அந்த ஜாதகனும் ஒரு குட்டி சூரியனா மாறி முட்டாளை முட்டாள்னும் -குரூபியை குரூபின்னும் டிக்ளேர் பண்ணுவான். எந்த முட்டாள் தன்னை முட்டாள்னு சொன்னா ஏத்துக்குவான்?   இதனால எல்லாருமா சேர்ந்து ஆப்படிச்சுருவாய்ங்க. கரீட்டா தலை?

சூரியன்:
ம்...ம்.. அடுத்த கேள்விக்கு போ..

நான்:
வந்துட்டன் துரை ! உங்களை ஆத்மகாரகன்னு சொல்றாய்ங்களே ..அது எப்டி?

சூரியன்:
என்னோட இடம் எது?

நான் :
உச்சி

சூரியன்:
மனித உடலின் உச்சி எது?

நான்:
உச்சந்தலை

சூரியன்:
ராஜயோகம் உச்சியில எந்த சக்கரம் இருக்கிறதா சொல்லுது?

நான்:
சஹஸ்ராரம்

சூரியன்:
குண்டலி சஹஸ்ராரத்தை தொட்டாத்தானே மனிதன் தான் ஆத்ம சொரூபங்கறதை அனுபவபூர்வமா தெரிஞ்சுக்கறான். அதனாலதேன் என்னை ஆத்மகாரகன்னு சொல்லியிருக்காய்ங்க.  நான் எப்படி எல்லாத்து மேலயும்  சமமா என் கிரணங்களை வீசுறனோ அப்படி  ஆத்ம சொரூபனா உள்ளவன் அபேத பாவத்தோட எல்லாரையும் சமமா பார்ப்பான்.  

மனிதன் தன்னை ஆத்ம ரூபமா உணரும் வரைக்கும் அவன் வாழ்க்கைக்கு வேறு எதுவோ மையபுள்ளியா இருக்கும். அவன் தன்னை ஆத்ம ரூபமா உணர்ந்துட்டான்னா பால் வீதிக்கு நான் எப்படி   கேந்திரமா  இருக்கேனோ அப்படி அவன் தன் வாழ்க்கைக்கு தானே கேந்திரமா மாறிர்ரான்.

மத்த கிரகங்கள் தான் என்னை நெருங்குவதும் விலகுவதுமா இருக்குமே தவிர நான் மட்டும் என் நிலையில நிலையா இருப்பேன்.

நான்:
பாஸ்.. ஆத்ம ரூபமா உணர்ந்த பிறகு மனிதன் அடையக்கூடிய நிலையை ஜஸ்ட் தன் ஈகோ காரணமா கூட அடையறானே..

சூரியன்:
ஈகோங்கறது பிரமை. பிரமை எப்பயாச்சும் உடைஞ்சுரும்.

நான்:
ஆக ஈகோவுக்கும் நீங்கதேன்.ஆத்மாவுக்கும் நீங்கதேன். அதெப்படி பாஸு? ரெண்டு நிலையையும் நீங்களே தர்ரதா சொல்றிங்க. எப்போ எந்த நிலையை தர்ரிங்க?

சூரியன்:
நான் ஜாதகத்துல முழு பலம் பெற்றிருந்தா ஆத்ம காரகனா வேலை செய்றேன். அரைகுறையா பலம் பெற்றிருந்தா தன்னம்பிக்கைய தரேன். பலம் இழந்திருந்தா ஈகோவை தரேன்.

நான்:
சூப்பர் தலைவா..இந்த வித்யாசத்தை மண்டைக்கு ஏத்தவே 24 மணி நேரம் பிடிக்கும் போல. இன்று போய் நாளை வரேன்..

சூரியன்:

அப்படியே ஆகட்டும் வா.