Showing posts with label சோ. Show all posts
Showing posts with label சோ. Show all posts

Saturday, November 3, 2012

சுய தர்மத்தை கை விட்ட "அவாள்"

"பர தர்மம் எவ்வளவு உயர்ந்ததானாலும் சுதர்மமே சிறந்தது"ன்னு கீதை சொல்லுது. இங்கன தர்மம் என்ற வார்த்தைக்கு மதம்னு ஒரு பொருள் கொடுத்து இந்துத்வா வாதிகள் அலப்பறை செய்வது தனி கதை. ஆனா  கீதை சொல்ற "தர்மம்"ங்கற வார்த்தைக்கு "இயல்பு"ன்னு பொருள் கொள்ளலாம்.

வேதங்கள்,புராணங்கள்,மற்றும் இவற்றின் சாரமாய் பிரசாரம் செய்யப்படும் கீதை இத்யாதிக்கு ஹோல்சேல் உரிமை கொண்டாடும் பிராமணர்களை சு தர்மத்தை விட்டு பர தர்மத்தை கை கொள்ளும்படி செய்தது நம்ம சூப்பற ஸ்டாரு ரஜினியின்  நண்பரான மோகன் பாபு தான்.

தெலுங்கு ஹீரோ மோகன்பாபுவை பற்றி உங்களுக்கு என்ன தெரியுமோ என்னமோ? ரஜினியின் சகவாச தோஷமோ என்ன இழவோ வருசத்துக்கொருதாட்டியாச்சும் எதையாவது அச்சானியமா  பேசி /யாரையாவது சந்தித்து எப்பவும் நியூஸ்லயே இருப்பாரு. லேட்டஸ்டா "தேனிகைனா ரெடி "னு ஒரு படம் எடுத்தாரு. (மகன் விஷ்ணு தான் ஹீரோ) .

இந்த படத்துல பிராமணர்களை இழிவு படுத்தறாப்ல காட்சிகள் இருப்பதாக பிராமண சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தின .( இந்த போர்க்கொடி என்னா கலரு பாஸு?)  மோகன்பாபு வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. விஷ்ணுவும்,பிராமண சங்க தரப்பும் பரஸ்பரம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மனித உரிமைகள் கமிஷனில் புகார் கொடுத்துக்கிட்டாய்ங்க. புகார் கொடுக்க வந்த விஷ்ணுவின் கார் மீது செருப்பு வீச்சு -கல் வீச்சு வைபவங்கள் கூட  நடந்தாச்சு.

முகமதியர் படையெடுப்பு காலத்துலருந்தே பிராமணர்கள் தங்கள் இயல்பை இழப்பது ஆரம்பித்துவிட்டது. சர்வைவல் காரணமாக  கொஞ்சம் கொஞ்சமா வேதம் - புராணம் -ஜோதிஷம் எல்லாத்தையும் மூட்டை கட்டி "ராஜ பாஷை"யை கற்பதும் - ஆட்சியாளர்கள் அன்னியர்/சுதேசி என்ற வித்யாசம் இல்லாது அவர்களுக்கு காட்டி கொடுத்து -கூட்டி கொடுத்து வருவதை சரித்திரம் பேசுகிறது.

இவிகளோட ப்ளஸ் பாய்ண்டே என்னடான்னா "புதுமையை" கேள்வி கேட்காது ஏற்பது. எல்லா குதிரை மேலயும் காலணா கட்டி வைக்கிறது. முதல்வர்கள்,மந்திரிகள்  மாறலாம்.ஆனால் செயலாளர்கள், ஐ.ஏ.எஸ்கள் மாற மாட்டார்கள்.ஆடிட்டர்,டாக்டர்,லாயர்கள் மாற மாட்டார்கள்.

அரசியல் அதிகாரம் ஆரு கையில இருந்தாலும் அதை அனுபவிக்கிறது மட்டும் இவா தான்.இந்த ஆட்டிட்யூடால  இழந்தவன் அதிலயும் விழிப்பு கண்டவன் கண்டதையும் எழுதி ,பேசி புலம்பினாலும் இவா எதையும் கண்டுக்கிடமாட்டாய்ங்க.

இழந்தவர்கள் கூட்டத்துலயே விழிப்பு பெறாத  வர்கம் "அட என்னப்பா சொம்மா அவாளை போட்டு கிளிச்சுக்கிட்டு"ன்னு வக்காலத்து வாங்கறாப்ல இருக்கும்.

நம்மாளுங்க எப்பமோ அண்டர் கிரவுண்ட்ல கண்ணிவெடி வச்சிட்டிருப்பாய்ங்க.  நேரம் வரும் போது அதுவா வெடிச்சு வைக்கும். அல்லது சூத்திர பயலுவ வர்ஜியா வர்ஜியமில்லாம எவள் கையையாவது இழுத்து வைக்கிறதோ .. கடிக்க கூடாத வஸ்துக்களை கடிச்சு வைக்கிறதோ  நடந்தா அப்பம் நம்மாளுங்களோட லாபி வேலை செய்ய ஆரம்பிக்கும்.அடி எங்கருந்து விழுதோ தெரியாத அளவுக்கு அடி விழூம்.

அட நம்ம நித்தி -ஜெயேந்திரர் மேட்டரை எடுத்துக்கங்களேன். லாபி இருந்தா ஜெயேந்திரர் கணக்கா பம்மலாம். லாபி இல்லின்னா நித்திக்கு அடிச்சாப்ல பம்படிச்சுருவாய்ங்க.

அவ்ளதானே தவிர ஆரு என்ன கிளிச்சாலும் ரோட்டுக்கு வர்ரது - கோசம் போடறது -கல் வீச்சு -செருப்பு வீச்செல்லாம் அவிக ஸ்கூல் கிடையாது,. ரெம்ப வலிச்சுருச்சு போலன்னு என்ஜாய் பண்ணிக்கிட்டு   திருடனுக்கு தேள் கொட்டின கணக்கா அமுக்கமா -கமுக்கமா இருந்திருவாய்ங்க.

ஒரு முருகேசன் வலிக்குது வலிக்குதுன்னு கத்தினா பத்து ரஜினி காந்தை வளைச்சு போடற வேலையில பிசியா இருப்பாய்ங்களே தவிர முருகேசன் மேல புகார் கொடுக்கிறது -புகாரி ஓட்டல் பிரியாணி அனுப்பறதெல்லாம் இருக்காது நடக்காது.

இன்னொரு முக்கிய மேட்டர் அவிகளுக்குள்ள சரியான புரிதல் இருக்கு அல்லது கம்யூனிகேஷன் இருக்கு.
எதுக்கு ரெஸ்பாண்ட் ஆகனும் எதுக்கு ரெஸ்பான்ட் ஆகக்கூடாதுன்னு ஒரு விதியே இருக்கு.அதை பரிமாறிக்கிறாய்ங்க.

கமிஷ்னருக்கு புகார் கொடுத்த அம்மணிக்காகட்டும் -ஆந்திரத்துல சாலைக்கு வந்து கல்லெறி -செருப்பு வீச்சு
சம்பவத்துல ஈடுபட்டவுகளுக்காகட்டும் இந்த புரிதல் இல்லைன்னு கன்ஃபார்ம் ஆகுது.ஆல்லது "அந்த வட்டத்தோட இவிகளுக்கு " கம்யூனிகேஷன் இல்லேன்னு தெரியுது .

ஒரு கட்டத்துல ஓம்கார் ஸ்வாமிகளை நான் கிளிச்சப்போ ஆருமே கிர்க்கா மர்க்காங்கலை. வெட்டிக்கு வக்காலத்து வாங்கற சோ ராமசாமி , டோன்டு ராகவன்லாம் கூட தொடர்பு எல்லைக்கு வெளிய இருக்கிறதாதான் கணக்கு.

இதை ஏன் கன்ஃபார்மா சொல்றேன்னா ..  நாளைக்கு சொல்றேனே ..

Friday, December 17, 2010

விஜய் தனிக்கட்சி பற்றி ரஜினி ரகசிய ஆலோசனை

டெலிகாம் ஊழலில் சிக்கி திணறும் திமுக,  விஜய் தனிக்கட்சி யோசனை இத்யாதி திருப்பங்கள் ரஜினியை குழப்ப தனக்கு பிடித்தமானவர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, சுப்பிரமணியம் ஸ்வாமி, எழுத்து சித்தர் பாலகுமாரன், கே பாலசந்தர் ஆகியோர் இறங்குகின்றனர்.

பாலகுமார‌ன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..

ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு (மேலுக்கு) வாங்க பாலகுமாரன்..

பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..

சோ: ஆமாம்..இங்கே ஆரம்பிச்சு எப்ப பாய்ண்டுக்கு வர்ரது.. நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .மேட்டர் தெரியுமில்லை ..டெலிகாம் ஊழல்ல திமுக சிக்கி தவிக்குது . விஜய் தனிக்கட்சி ஆரம்பிக்கபோறாரு இந்த நேரத்துல ரஜினி என்ன செய்தா நல்லாருக்கும்னு ஒரு டிஸ்கஷன்

பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார். அதனாலதான் ஜெயலலிதா கூட கூப்டு ஐடியா கேட்கிறாய்ங்க

ரஜினி:(எழுந்து நின்று ) முதல்ல எல்லாரும் உட்காருங்க. மேட்டர் தெரியுமில்லை.. இத்தனை நாள் நான் சால்ரா போட்ட கலைஞர் தலைமையிலான திமுக டெலிகாம் ஊழல்ல  சிக்கி தவிக்குது. சினிமா உலகமே கலைஞர் குடும்பத்தோட பிடில இருக்குன்னு பிரச்சாரம் நடக்குது. ஆட்டைகடிச்சு மாட்டை கடிச்சு  விஜய் சினிமாவுக்கே தியேட்டர் கிடைக்காத நிலை .. இதே பாய்ண்ட்ல அவரு  தனிக்கட்சி ஆரம்பிக்கப்போறாரு. அன்னைக்கு மணி ரத்தினம் எடுத்த வில்லங்க சினிமாக்களால இர்ரிடேட் ஆன எவனோ வீசின வெடிகுண்டுக்கே இர்ரிட்டேட் ஆகி இனி தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பத்தனும்னு வசனம் விட்டேன்.. இப்ப மவுனமா இருந்தா நல்லாருக்காது. இந்த நேரத்துல நான் செய்தா நல்லாருக்கும்னு உங்ககிட்டே  ஐடியா கேட்கத்தான் இந்த டிஸ்கஷன்

சுப்ரமணியம் ஸ்வாமி: இன்னும் என்ன தயக்கம். நம்ம ஜனதா கட்சிக்கு ஆதரவா வாய்ஸ் கொடுங்கோ  சந்திரலேகாதான் முதல்வர் கேண்டிடட்டு நான் டிக்ளேர் பண்ணிர்ரன்..

ரஜினி:  கொஞ்சம் சீரியசா பேசுங்க சார். நீங்க எப்ப சீரியஸ் எப்ப காமெடின்னே புரியறதில்லை.

சு.ஸ்வாமி: என்னை மதிச்சு ஒரு எம்.பி சீட் கொடுத்துட்டா நான் காமெடி.. என்னை மதிக்கலைன்னா சீரியஸ்.

பாலசந்தர்: நீ எதையோ முடிவு பண்ணிட்டே . அப்புறம் எதுக்கு டிஸ்கஷன் டிச்க்சன் எல்லாம். ஆமா விஸ்வ நாதன் டைரக்சன் நடிக்கனும்னு சொன்னியாமே.. நம்ம கவிதாலயாவுக்கு ஒரு படம் பண்ணக்கூடாது

ரஜினி: வேணா சாரி நீங்க அமீர்ஜானை டைரக்ட் பண்ணவைப்பிங்க. நான் டூ ஆர் டை பொசிஷன்ல இருக்கேன். இப்பயாச்சும் எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் டெடிக்கேட்டடா யோசனை பண்ணுங்க

பாலகுமாரன்: பேசாம உடையார்  கதையில நடிக்கப்போறதா அனவுன்ஸ் பண்ணிருங்க. மீடியா மொத்தம் டைவர்ட் ஆயிரும்.

ரஜினி: சுல்தன் தி வாரியரே பாதில  நிக்குது. யந்திரன் நின்னுப்போயிருதேனு சன் பிக்சர்ஸ் கிட்டே மாட்டினேன். நல்ல வேளை பிக்சர் ப்ரமோஷனுக்காக தியேட்டர் காண்டீன்ல சமோசா விக்க சொல்லலை. ப்ளீஸ் .. எல்லாரும் என்னை உபயோகிச்சுக்கத்தான் பார்க்கிறிங்களே தவிர எனக்கு உபயோகப்படற மாதிரி ஒரு வார்த்தைனா பேசுங்க சார்

சோ : விஜய் படத்துக்கு தியேட்டர் கொடுக்கனும்னு உண்ணாவிரதம் அனவுன்ஸ் பண்ணிருங்க

ரஜினி: வேண்டாங்க. அப்புறம் விஜயகுமார் வந்து என் பக்கத்துல உட்கார்ந்துக்குவாரு அவங்க அந்தப்புறமே புற நகர் டம்ப் ஸ்பாட் மாதிரி நாறிக்கிடக்கு

ரஜினி:(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்.. ஜெயசுதாவோட அப்பாவை அடிச்சப்பயும் அதைத்தான் செய்தேன். ஹிந்தி ப்ரொடியூசருக்கு காலை உடைச்சப்பயும் அதைத்தான் செய்தேன். இப்போ எங்க போறது? (மேலுக்கு)  எனக்கு ரொம்ப . ரொம்ப குழப்பமா இருக்கு. ஓப்பனா சொன்னா பயம்மா இருக்கு.  விஜயகாந்த் எனக்கு நகலா வந்தவர். விஜய்  என் ரசிகன்னு வேற சொல்லிக்கிறவரு.. இவங்கல்லாம் ஸ்க்ரீனுக்கு வந்த பிறகும் நான் சும்மா இருந்தா எப்படி? ரசிகர்கள் டைவர்ட் ஆயிருவாங்களோ.. மக்கள் ரொம்ப கேவலமா நினைச்சுருவாங்களோனு பயம்.

சோ : நீங்க தான் இதுக்கெல்லாம் காரணம். பொதுக்கூட்டத்துல சாயந்திரத்துலருந்து நள்ளிரவு வரை தலைவர் வருகிறார்.. வந்துகொண்டே இருக்கிறாருனு அனவுன்ஸ் பண்றமாதிரி பில்டப் பண்ணிங்க.. பொழுது விடிஞ்சி பல வருஷமாயிருச்சு.. இன்னமும் வருவேன்னு தான் சொல்லிட்டிருக்கிங்க

ரஜினி: ஓகே ஓகே எப்பவும் நியூஸ்ல இருக்கிறதுக்காக அப்படி பீலா விட்டது நிஜம்தான். ஆனால் இப்ப நிலைம வேற.

பாலகுமாரன்: சொந்த கட்சி ஆரம்பிச்சுருங்க.

ரஜினி: விஜய்காந்த் திராவிட கட்சிகளை கிழி கிழின்னு கிழிச்சுக்கிட்டே இருக்கார் .அப்படியும் அவருக்கொன்னும் ஆதரவு பெருகலை. நான் ஜெயலலிதாவை வீர லட்சுமினு பாராட்டியிருக்கேன். கலைஞரை அவரே வெட்கப்படும்படியா பயங்கரமா புகழ்ந்து தள்ளியிருக்கேன்..

சோ: திமுக இப்போ மூழ்கிக்கிட்டிருக்கிற கப்பல்..

பாலகுமாரன்: திராவிட கட்சிகள்ள சேர்ந்தா தானே கடந்த காலம் குறுக்க வருது .காங்கிரஸ்ல சேர்ந்துருங்க.

ரஜினி: யோவ் திமுகவாவது மூழ்கிக்கிட்டிருக்கிற கப்பல். காங்கிரஸ் மூழ்கி போச்சுய்யா. அதனோட பிணத்தை தூக்க நாலு எம்.எல்.ஏ ஜெயிச்சு வந்திருக்கான்

சோ: நீங்களும் ஒரு கட்சி ஆரம்பிங்கோ.. நான் அதிமுகவோட கூட்டுக்கு ஏற்பாடு பண்றேன். எனக்கென்ன ஒரு ராஜ்யசபா எம்பி போதும்

சுப்ரமணியம் சுவாமி: நீங்க பா.ஜ.கல சேர ஏற்பாடு பண்றேன் எனக்கென்ன ஜஸ்ட் ஒரு எம்.பி

பாலசந்தர்:அதுக்கு முன்னாலே எனக்கு ஒரு டெய்லி சீரியலாச்சும் பண்ணிக்கொடு.  நானே டைரக்ட் பண்றேன் .அப்பத்தான்  பெண்கள் ஆதரவு  உனக்கு கிடைக்கும்.

பாலகுமாரன்: எனக்கென்னவோ உடையார்தான் பெஸ்ட் சாய்ஸுனு தோனுது

ரஜினி: யோவ் ஓடிப்போங்கய்யா .. சாதிபுத்திய காட்டிட்டிங்க .. எங்கப்பா சித்தூர் முருகேசன் .. ஆன்லைன் சாட்லயாவது கனெக்ட் பண்ணுங்கப்பா..

(ஆன்லைன் சாட்)

ரஜினி: ஹலோ!

முருகேசன்: யாரு ரஜினி அய்யரா?

ரஜினி: யப்பா நான் ரொம்ப நொந்து போயிருக்கேன்.. நீயும் நோகடிச்சா எப்படி?

முருகேசன்: நீங்க சிவாஜி ராவ் சார்.. சிவாஜி மாதிரி பேசறிங்க

ரஜினி: நெலமை அப்டி.. என்னதான் நீ என்னை கச்சா முச்சான்னு திட்டி எழுதினாலும் உன் எழுத்துல என் மேல உனக்கெந்த அளவுக்கு அக்கறை இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன்.

முருகேசன்:  கெட்டும் பட்டணம் சேர்ங்கற மாதிரி சனம் என் கிட்டே வராய்ங்க. தேறினதும் காணாம போயிர்ராய்ங்க. எனக்கு உங்க மேல பெருசா அக்கறையில்லை. உங்களை ஃபாலோ பண்ற யூத் மேலதான் அக்கறை .

ரஜினி: உனக்கு யார் மேல அக்கறையோ எனக்கு அக்கறையில்லை .இப்ப தலைக்கு மேல போயிருச்சு ஏதோ ஒன்னு பண்ணனும். இல்லைன்னா என்னை நானே கூட சகிச்சுக்க முடியாது..

முருகேசன்: ஓகே ஓகே.. உங்களுக்கென்ன சி.எம் ஆகனும்னு இருக்கா? இல்லை ஜஸ்ட்  சர்வைவல் ப்ராப்ளமா?

ரஜினி: என்னப்பா சூப்பர் மார்க்கெட்ல என்னவேணும்னு கேட்கிறமாதிரி கேட்கறே..

முருகேசன்: இலக்கு எதுன்னு தெரிஞ்சாதானே ரூட் மேப் போட முடியும்?

ரஜினி: ரெண்டுத்துக்குமே ரூட் மேப் போடுப்பா

முருகேசன்: சர்வைவல் போதும்னா எங்கஊரு பழைய லோக் சத்தா மாதிரி ஒரு அமைப்பை ஆரம்பிச்சுருங்க. சொந்த பத்திரிக்கை ஒன்னை ஆரம்பிச்சு கட்சி முக்கியமில்லை வேட்பாளர்தான் முக்கியம்னு ஸ்டாண்ட் எடுத்துக்கங்க. வேட்பாளர்களோட உண்மையான விவரங்களை சேகரிச்சி சொந்த பத்திரிக்கைல வெளியிடுங்க. உங்க சர்வேல நல்ல கிரேடிங்ல உள்ள வேட்பாளர்களோட பொசிஷன் வீக்கா இருந்தா   நேர்ல வந்து பிரச்சாரம் பண்ணுவேனு பயமுறுத்துங்க.

ரஜினி: எல்லா கட்சிலயும் கெட்டவங்க இருப்பாங்களே..

முருகேசன்: எல்லா கட்சிலயும் நல்லவங்களும் இருப்பாங்களே. மேலும் நீங்க தேர்தலுக்கு முன்னாடியே நெட் ஒர்க்கை ஆரம்பிச்சுட்டா எல்லா கட்சியும் உங்களுக்கும்,உங்க அமைப்புக்கும் பயந்து சுமாரான வேட்பாளர்களா பார்த்து டிக்கெட் கொடுப்பாய்ங்க

ரஜினி: பரவால்லை. டேமேஜ் குறைவாதான் இருக்கும். இது  ஓகே. ஒரு வேளை முதல்வராகிறதுதான் இலக்குன்னா?

முருகேசன்: டேமேஜ் அதிகமா இருக்கும். பரவால்லை.

ரஜினி: இதை கேட்கிறதுல எதுவும் டேமேஜ் வந்துராதில்லையா சொல்லுப்பா.

முருகேசன்: மொதல்ல உங்க சொத்தை குடும்ப உறுப்பினர்கள் எல்லாத்துக்கும் பிரிச்சு கொடுத்துருங்க. அதை பப்ளிக்கா அனவுன்ஸ் பண்ணுங்க. உங்க சொத்துல சம் பர்சண்டேஜ்ல   நல்ல சினிமாவை ப்ரமோட் பண்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துங்க அதுக்கு தலைவரா கமல் ஹாசனை போடுங்க

ரஜினி: வெரி குட். அப்புறம்?

முருகேசன்: பாதிரியார் கிட்டே பாவமன்னிப்பு கேட்கிறமாதிரி  நீங்க நாளிதுவரை என்னெல்லாம் தப்பு பண்ணிங்களோ அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி  அதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு அதுக்கு பரிகாரமா அந்த தப்புகளை திருத்தத்தான் கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு ஒரு ஏழெட்டு பாஷைல புஸ்தவமா போடுங்க. ட்ரான்ஸ்லேஷனுக்கு வேணம்னா அய்யரு பசங்களை சேர்த்துக்கிருங்க. அதெல்லாம் கரீட்டா பண்ணுவாய்ங்க. ரேட் தான் காஸ்ட்லியா இருக்கும். அதை ஆல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ல லெஸ்ஸர் ப்ரைஸ்ல ரிலீஸ்பண்ணுங்க (உ.ம் புஸ்தவம் மலிவுப்பதிப்பு ரூ. 20 டிவிடி: 20 ) கட்சி ஆரம்பிக்கப்போறதேதிய டிக்ளேர் பண்ணீருங்க
உங்களோட அஜெண்டாவா ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அறிவிச்சுருங்க..

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

ரஜினி: ....................

முருகேசன்: ஹலோ ஹலோ ஹலோ...

ரஜினி: ................

(முருகேசன் உடனே ராகவேந்திரா கல்யாணமண்டபத்துக்கு  ஃபோன் செய்து ரஜினி சாருக்கு என்னாச்சு பாருங்கங்கறார். அங்கிருந்து வந்த பதில் "ஒன்னும்மில்லிங்க மயக்கம் போட்டுட்டாரு )

எச்சரிக்கை: மேற்படி உரையாடல் யாவும் என் கற்பனையே.