அண்ணே வணக்கம் ! அக்கா வணக்கம் ! இன்னைக்கு "உனக்கு 22 எனக்கு 32" தொடர்கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தையும் போட்டிருக்கேன். அதை இங்கே க்ளிக் பண்ணி படிச்சுருங்க.. உங்க எதிரிவினைகளுக்காக திறந்த மனதுடன் காத்திருக்கிறேன்.
நடிக வேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மலேசிய பேச்சின் ஆடியோ கேசட்டை இளமையிலேயே கேட்டிருக்கிறேன். அதில் ஒவ்வொரு வார்த்தையும் ஞா இல்லாவிட்டாலும் என் நினைவு தனக்கென்று ஒரு ஸ்பீச்சை தயாரித்து சேகரித்து வைத்துள்ளதோடு அவ்வப்போது ரீவைண்ட் செய்து கேட்டும் களிக்கிறது. வலையுலகத்தில் கூட அதற்கான சுட்டியை பார்த்ததாய் ஞா. என்னடா மிஸ்டர். முருகேசன் எதிர்வினைனு தலைப்ப வச்சுட்டு சொதப்புறாருனு பல்ல கடிக்கிறது கேட்குது. வயசாகுதுல்லியா பாயிண்டுக்கு வர பத்து லைனாவது பிடிக்குது.
மேற்படி பேச்சுல ஒரு வரி. ஒரு நாய் எங்கயோ குலைக்குமாம். அதை கேட்டுட்டு இன்னொரு நாய் குலைக்குமாம்னு வரும். இதுக்கு சோடாபுட்டிகண்ணாடிகள் உலகத்துல எதிர்வினைனு பேரு.
வினைங்கற வார்த்தைக்கு செயல்னு நேரடி அர்த்தம் கொள்ளலாம். இலக்கணத்துல கூட இதே அர்த்தத்துல தான் புழங்குது.
வினைன்னா வில்லங்கமான அர்த்தம் கூட இருக்கு. தன் வினை தன்னை சுடும் வீட்டப்பம் ஓட்டைச்சுடும்னு ஒரு பிரயோகம் கூட இருக்கு. அதனாலதான் விளையாட்டு வினையாச்சும்பாங்க. அவனா ..அவன் உடம்பெல்லாம் வினைப்பா.ம்பாங்க.
வினைன்னா செயல். எதிர்வினைன்னா ? ஊஞ்சல்ல உட்கார்ந்து ஆடியிருக்கிங்களா? நீங்க முன் நோக்கி உந்தி தள்ளினிங்கன்னா அது தானா பின்னோக்கி வரும்.இதை ஊஞ்சலின் எதிர்வினைன்னு சொல்லலாமா? அல்லது அதை முன் நோக்கி உந்தி தள்ளின உங்க செயலின் எதிர் வினைன்னு சொல்லலாமா?
(உந்தின்னா தொப்புள்னு கூட ஒரு அர்த்தம் இருக்கு. பெண்களுக்கு கருப்பை வாய்ல கான்சர் அட்டாக் ஆவுற மாதிரி இருந்தா தொப்புள்ள இருந்து திரவம் கசியுமாம். தொப்புள்னா என்ன? நாம தாயோட கருப்பைல இருந்தப்ப நமக்கு உணவு கொடுத்த சப்ளை சேனல் தட்ஸால். அதை எப்படி செக்ஸ் சிம்பலாக்கினாங்கனு புரியல. இல்லே நம்ம ஊருக்கு முந்தின ஸ்டாப் வந்ததுமே ஒரு பரபரப்பு வருமே அந்த மாதிரியா என்ன புரிய்லை.)
எதிர்வினை பத்தி பேசிட்டிருந்தோம். ஓஷோ வினையாற்று. எதிர்வினையாற்றினா வினையாற்றினவனோட அடிமையாயிர்ரங்கறார். இந்த ஸ்ட்ராட்டஜியை எல்லார் விஷயத்துலயும் எப்பவும்(சதா, கான்ஸ்டன்டா) ஃபாலோ பண்ணலன்னாலும் அப்பப்போ ட்ரயல் பார்த்திருக்கேன்.
எதிராளி நாயேங்கறது வினை. நீங்க பேயேங்கறது எதிர்வினை. நாயேங்கறவனை கேஷுவலா "சொல்லுங்க சார்..அப்புறம்.."னா அது வினை.
இத்தீனி பில்டப் கொடுத்தது சமீபத்துல நான் படிச்ச சில பதிவுகளுக்கு எதிர் வினை யாற்றலாமானு யோசிக்கதான். (வினைங்கறது அவ்ளோ சூடா இருக்குமா அதை என்ன ஆத்தறது?)
இந்த எதிர்வினைங்கற வார்த்தைக்கு தெலுங்குல "ஸ்பந்தனா"ன்னு ஒரு அழகான வார்த்தை இருக்கு. உங்க காதலி உங்க காதுல ஏதோ சொல்லவர்ராங்கனு வைங்களேன் அப்போ உங்க உடம்பு எதிர் வினையாற்றும். ஒரு மாதிரி சிலிர்க்கும். அதை உடம்போட எதிர்வினைங்கலாம்.
தமிழ்ல எதிர் வினையாற்றினார்ங்கறத தெலுங்குல ஸ்பந்திஞ்சாருனு சொல்லலாம்.இதை இங்கிலீஷ்ல ரெஸ்பாண்டட், ரெஸ்பான்ஸ்னு சொல்வாய்ங்க. ரெஸ்பான்ஸ்பிலிட்டி (பொறுப்பு) ரெஸ்பாண்டட், ரெஸ்பான்ஸ் இந்த 3 வார்த்தைக்கும் உள்ள தொடர்பை பாருங்க.
அதாவது (சமூக) பொறுப்பிருக்கிறவன் ரெஸ்பான்ஸ் கொடுப்பான் . ரெஸ்பாண்ட் ஆவான். உணர்ச்சியிருக்கிற உடம்பு ரெஸ்பாண்ட் ஆகும். உணர்வுகள் உள்ள மனம் ரெஸ்பாண்ட் ஆகும். பொறுப்புள்ளவன் எதிர்வினையாற்றுவான்.
இந்த மொக்கை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா? எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணனோட ரைட்டிங் ஸ்டைல் இதான்னு நினைக்கிறேன்.
ஆர். சதீஷ் குமார் என்னை அடிக்கடி வியந்து பாராட்டற பார்ட்டி.அவரு ஜாதக யோகங்களை பத்தி ஒரு பதிவு போட்டிருந்தார். பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டு பொறுப்பா வெண்பா எல்லாம் கலெக்ட் பண்ணி போட்டிருந்தார். வெண்பா எழுதின பார்ட்டிக்கே பொறுப்பு கிடையாது. இதுக்கு சதீஷ் குமாரை எப்படி பொறுப்பாக்க முடியும்.
ஜோதிஷமும் அல்ஜீப்ராவும் ஒன்னு. ரெண்டுக்கும் நிறைய ஒத்துமை உண்டு. அதை ஒரு உதாரணம் மூலம் விளக்க ட்ரை பண்றேன்.
அல்ஜீப்ரால ப்ளஸ்ஸும் ப்ளஸ்ஸும் சேர்ந்தா மைனஸாயிரும்.
ஜாதகத்துல உச்சமான கிரகத்தை உச்சமான கிரகம் பார்த்தா ரெண்டு கிரகமும் ஃபணால்.
அல்ஜீப்ரால மைனஸும் மைனஸும் சேர்ந்தா ப்ளஸ்ஸாயிரும்.
ஜாதகத்துல நீசமான கிரகத்தை நீசமான கிரகம் பார்த்த நீசம் பங்கமாயிரும்.
(ஒரு கிரகம் நீசத்தில் நின்று - கால் வலிக்காதோ? - அது நின்ற இடத்ததிபதி உச்சம் பெற்றாலும் யோகம்தானு சொல்றாங்க. அதாவது ஸ்டேட்ல நம்ம பார்ட்டி ஃபணாலாயிட்டாலும் சென்டர் கொய்லிஷன்ல நாம இருக்கறாப்ல)
பஞ்ச மஹா புருஷ யோகம்னு ஒரு கான்செப்ட் இருக்கு. கிரகங்கள் ஆட்சி,உச்சம் பெறுவதால் வரும் யோகங்களை விவரிக்கிறாங்க.
உம்: குரு ஆட்சி ,உச்சம் பெற்றால் ஹம்ச யோகம், செவ்வாய் ஆ..உ பெற்றால் ருசக யோகம், புதன் ஆ.உன்னா பத்ர யோகம், சனி ஆ.உன்னா சச யோகம்,சுக்கிரன் ஆ.உ பெற்றால் மாளவ்ய யோகம்.
இது ஒரு கவர்ன்மென்ட் ஆர்டர்ல கொடுக்கப்படற முதல் பாரா மாதிரிதான். அடுத்த பாராவையும் முழுக்க படிச்சா தான் மேற்படி ஜி.ஓனால நமக்கு பெனிஃபிட் உண்டா இல்லையானு டிசைட் பண்ண முடியும்.
நம்ம ஆளுங்க அவசர குடுக்கைங்களா? நுனிப்புல் கேஸுங்களா? இல்லை என் வொக்காபலரிப்படி சுக்லாம்பரதரம் கேசுங்களானு தெரியலை. பெரிய பெரிய ஜூரிங்க உட்பட ஜி.ஓல முதல் பாராவ அப்ளை பண்ணிட்டு ஆகா ஓகோன்னிர்ராங்க.
ஆட்சியோ உச்சமோ பெற்ற கிரகம் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு லக்னாத் சுபனா? நைசர்கிக சுபனா? கூட யார் இருக்கிறது? இதையெல்லாம் பார்த்துட்டுதான் யோகத்தை டிசைட் பண்ணனும்.
உ.ம் குரு. இவர் ஆட்சில இருந்துட்டா போதாது. இவர் சுபரா இருக்கனும்( நைசர்கிக சுபத்வ,பாபத்வத்தைவிட லக்னாத் சுபத்வ,பாபத்வமே முக்கியம்னு நம்ம அனுபவம் சொல்லுது. மேலும் அவர் சூரியனோட சேர்ந்து அஸ்தமிக்கிறது, சனி,ராகு,கேதுவோட சேர்ந்திருக்கிறது, அல்லது அவர் ஆ..உ பெற்ற இடம் 6,8,12 ஆ இல்லாம இருக்கிறதுனு ஆயிரத்தெட்டு நிபந்தனை இருக்கு.
இதையெல்லாம் கூட்டி கழிச்சு டிசைட் பண்ற யோகம் தான் ஒர்க் அவுட் ஆகும்.
யோகம்னா சேர்க்கைனு ஒரு அர்த்தம் இருக்கு. உடலுறவுக்கு சம்யோகம்னு ஒரு ஆல்ட்டர் நேட்டிவ் வார்த்தை கூட இருக்கு. சம் ங்கறது திரு,திருமதி மாதிரி அடைமொழி. முருகேசன், திரு முருகேசன் மாதிரி.
ப்ராப்திஞ்சுனு - சம்ப்ராப்திஞ்சுனு
பந்தம் - சம்பந்தம்
கீதம் - சங்கீதம் (சம் +கீதம் )
ஆக சேர்க்கை நடந்துட்டா போதாது அது அம்சமாவும் இருக்கனும் அப்பதான் அது உண்மையான யோகம். ஓகேவா மிஸ்டர் சதீஷ்குமார். தொடர்ந்து எழுதுங்க. நாம எழுதறது சில நூறுபேருக்காகத்தான்னாலும் இன்னம் கொஞ்சம் டீப்பா ,ஷார்ப்பா எழுதுவமே.
இன்னொரு பார்ட்டி திருமண பொருத்தங்களை நக்கலடிச்சும், இன்னொரு பார்ட்டி எண் கணிதத்தை நக்கலடிச்சும் எழுதியிருக்காங்க. நானேதும் ஜோதிஷத்துக்கு அஃபிஷியல் ஸ்போக்ஸ் மேன் கிடையாதுதான். இருந்தாலும் நமக்கு தெரிஞ்சத சனங்க முன்னாடி கொட்டி வைப்போம்னு ஒரு சொறி.
திருமண பொருத்தம்:
நம்மாளுங்க (முன்னோர்கள்) எந்த அளவுக்கு ப்ராக்டிக்கல் பர்சன்ஸ்னா ஜாதகங்களை பொருத்தவும், நட்சத்திர பொருத்தங்கள் பார்க்கவும் ரூல்ஸ் எல்லாம் கொடுத்துட்டு இந்த பொருத்தங்களை விட வது,வரர்களின் மனப்பொருத்தமே முக்கியம்னு சொல்லியிருக்காங்க. இது எத்தனை பேருக்கு தெரியும்?
மனப்பொருத்தமில்லாம கல்யாணம் பண்ணி தொலைச்சா அது எப்படி நிலைக்கும். அதுக்கும் பழி ஜோசியம் மேலதானா?
பத்து பொருத்தம்லாம் ஜுஜுபி. முதல்ல ஜாதகங்கள்ள இருக்கிற தோஷங்களை உன்னிப்பா கவனிக்கனும்.
தோஷமுள்ள ஜாதகத்துக்கு தோஷமுள்ள ஜாதகத்தை கட்டி வச்சுட்டா தோஷத்தை காக்கா கொண்டு போயிராதுங்கண்ணா.
சுத்த ஜாதகர்கள் பாதிக்கப்படாம, சமூக சிக்கல்கள் வந்துராம இருக்க சின்ன ஏற்பாடு.
உ.ம்
ஒரு பெண் ஜாதகத்துல 7ல் செவ்வாய். புருசன் திடீர் மரணத்துக்கு இலக்காகனும்னு இருக்கு.
அந்த பெண்ணை ஜாதகத்துல 7ல் செவ்வாய் உள்ளவனுக்கே கட்டி வச்சுட்டா ரெண்டு பேரும் முன்னே பின்னே போயிருவாங்க. விதவையா வாழறதோ, மனைவிய இழந்து வாழறதோ நடக்காது. இதனால செக்ஸ் குற்றங்கள்,கள்ள உறவுகள் கண்ட்ரோல் ஆகும்.
தோஷம்னா செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்தான் பிரபலமாயிருக்கு. இதுல எத்தனையோ வகையிருக்கு. மணமக்கள்ள ரெண்டு பேருக்கும் ஒரே தோஷமிருந்துட்டா போதாது ஒரே வகை,ஒரே அளவு தோஷமிருக்கனும். இல்லன்னா பொருத்தம் பார்த்ததே வீணாயிரும்.
செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம் பார்க்கிறதுக்கு முன்னாடி ரெண்டும் உருப்படற ஜாதகமா இல்லியானும் பார்க்கனும்.
உருப்படாத ஜாதகங்கள்:
லக்னாதிபதி 6,8,12ல மாட்டறது. ராகு,கேதுவோட சேர்ந்துர்ரது, சூரியன்ல அஸ்தமிக்கிறது. நீசமாறது இப்படி எத்தனையோ அம்சங்கள் இருக்கு.
இதர தோஷங்கள்:
களத்திர தோஷம்,சுக்கிர தோஷம் இப்படி எத்தனையோ பார்க்க வேண்டியிருக்கு.
எதிர்கால வாழ்க்கை துணையின் லட்சணங்கள்:
அதே போல ஆண்,பெண்ணின் ஜாதகங்களை தனிதனியே பார்த்து அவிகளூக்கு எப்படிப்பட்ட வா.துணை அமையனும்னு பார்க்கனும். அந்த அம்சங்கள் இப்ப ப்ரபோஸ் பண்ணி இருக்கிற பையன்/பொண்ணுக்கு இருக்கா பார்க்கனும்.
ஆரூடம்: ஒவ்வொருத்தர் ஜாதகத்துலயும் ஏழாவது ராசிய லக்னமா வச்சு எதிராளியுடைய ஜாதகமா பாவிச்சு அதிலான கிரக நிலையையும்,அவருடைய வாழ்க்கை நிலையையும் பொருத்தி பார்க்கனும்.
இப்டி மஸ்தா வேலை பார்க்க வேண்டியிருக்குங்கண்ணா. அதுக்கப்புறம்தான் பத்து பொருத்தம் கான்செப்ட் வருது. இதுல கூட ரஜ்ஜு நாடி தான் மெயின். நான் மேலே சொன்ன அம்சங்கள் ஓகேன்னா , இந்த பத்துல ரஜ்ஜு நாடி ரெண்டு பொருத்தம் மட்டும் இருந்தா கூட டும் டும் பீ பீ. இல்லேன்னா நாஸ்திதான்.
எண் கணிதம் பத்தி இன்னொரு நாளைக்கு பார்ப்போம்ணா. உடு ஜூட்
Showing posts with label Essays in Tamil. Show all posts

Saturday, March 20, 2010
Sunday, February 14, 2010
அண்ணா ஒரு அரசியல் வேசி
முதலில் எனக்கு பிடித்த தெலுங்கு கவிதை வரியை கோட்செய்து விட்டு முத்து குமார் ஒரு மன நோயாளி:
என்ற எனது கடந்த பதிவு குறித்த தமிழ் பெருங்குடி மக்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறேன்.
( தற்போது மறுமொழிகளை மட்டறுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் போடப்பட்ட மறுமொழிகளின் எண்ணிக்கை , தரம் ஆகியவற்றை தாங்கள் அறிய இயலவில்லை )
கவிதைவரி:
"எந்துகு ராஸ்தார்ரா கவித்வம் ..?
நிஷேதிஞ்சடானிகி அர்ஹத லேனி கவித்வம்"
பொருள்:
"ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை?
தடை செய்ய தகுதியற்ற கவிதை"
ஆம் இன்றைய ஹிப்பாக்ரட் (தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளுதல்) உலகம் தடை செய்யாவிட்டால் அது ஒரு நல்ல படைப்பென்றே சொல்லமுடியாது.
உலகமே ஹிப்பாக்ரட் என்றால் , இந்தியர்கள் , தமிழர்களை மட்டும் சொல்லி என்ன பயன்?
மகாராஷ்டிரம் மஹா ராஷ்டிரர்களுக்கே என்று கோஷமிடும் தீரர்கள் கூட இந்தியா இந்தியாவுக்கே என்று சொல்ல அஞ்சுகிறார்கள்.
ஒரு இத்தாலி பெண்ணின் பாதங்களில் பணிந்து தெலுங்கானா வாதிகளும், ஒன்றுபட்ட ஆந்திர வாதிகளும் பாத பூஜை செய்து வருகின்றனர். இதை ஹிப்பாக்ரசி என்று சொல்லாது வேறு எந்த வார்த்தையால் குறிப்பிடுவது.
சோனியா இத்தாலிப்பெண் என்பது பெரும் தகுதிக்குறைவு அல்ல. ஆனால் ராஜீவ் மரணத்துக்கு பின் அவர் அரண்டு போய் அரசியலிலிருந்தே கழண்டு கொண்டு 4 வருட காலம் அஞ்ஞாத வாசம் செய்தார்.
காங்கிரஸ் கோஷ்டி அரசியலில் நரசிம்மராவை பிடிக்காதவர்கள் கொம்பு சீவிய பிறகே சோனியா ஜி அரசியல் பக்கம் தம் பார்வையை திருப்பினார் என்பதையே நான் தகுதிக்குறைவாக பார்க்கிறேன்.
இந்த விசயத்தில் ஜெயலலிதாவுக்கு இருந்த கமிட்மென்ட் கூட சோனியாஜிக்கு கிடையாது.
நிற்க , நாடு தழுவிய ஹிப்பாக்ரசி குறித்து பார்ப்போம்.
ஏற்கெனவே ஒரு பதிவில் குறிப்பிட்டதை போல செக்ஸையும்,( ஆணா பெண்ணா என்பதை) குண நலனையும் நிர்ணயிப்பது ஒரே ஜீனாம்.
இதை வைத்து ஆணுக்கு ஒரு குணம் பெண்ணுக்கு ஒரு குணம் இருக்கும் என்று கூறுவதோடு ஆணில் ஆண்மை,அவனது செக்ஸ் திறன், செக்ஸுவல் அவுட்லெட்டை பொருத்து அவன் குண நலன் மாறும் அ அவனது குண நலனை பொருத்து செக்ஸுவல் அவுட்லெட் மாறும் என்றும் ஊகிக்க முடியும்.
இதுவே பெண் விசயத்திலும் ஒர்க் அவுட் ஆகும் . அவள் பெண்மை,மாதவிலக்கு சக்கரம், செக்ஸுவல் டிசைர்ஸ், செக்ஸுவல் அவுட்லெட் ஆகியவற்றை பொருத்து அவள் குண நலன் அமையலாம். அல்லது அவள் குண நலனை பொருத்து அவள் பெண்மை,மாதவிலக்கு சக்கரம், செக்ஸுவல் டிசைர்ஸ், செக்ஸுவல் அவுட்லெட் ஆகியன மாறலாம்.
செக்ஸ் குறித்த விசயங்களில் ஹிப்பாக்ரட்டாக இருக்கும் மனிதன்/இனம் குண நலன்களை பொருத்த அளவிலும் ஹிப்பாக்ரட்டாகவே இருப்பான், இருக்கும்.
தமிழினத்தின் விடுதலைக்காக, தமிழினத்தின் சுயமரியாதைக்காக, பகுத்தறிவு பகலவனாய் ஜொலித்த ஈ.வெ.ரா பெரியாரின் திருமணத்தையே ஏற்றுக்கொள்ளாத இனம் தமிழினம்.
காலப்போக்கில் "பானுமதி படி தாண்டா பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல " என்ற அண்ணாவின் வாதத்தை ஏற்கும் நிலைக்கு தமிழகம்.
உயர்ந்தது என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
பெரியாரின் சமரசமற்ற போர்குணத்துடன் ஒப்பிட்டால் அண்ணா துரை ஒரு அரசியல் வேசி. அரசியல் வெற்றிக்காக கை கொண்ட கொள்கைக்கே காயடித்தவர்.
பிராமணர்களை எதிர்க்கவில்லை, பிராமணீயத்தை மட்டுமே எதிர்க்கிறோம்/ஒன்றே குலம் ஒருவனே தேவன் / திராவிட நாடு கோரிக்கையை கை விட்டது எட்ஸெட்ரா
ஆனால் தமிழினம் பெரியாரை மறுத்து அண்ணாவை ஏற்றது.
அண்ணாவை அரசியல் வேசி என்று குறிப்பிட்டாலும் அது பெரியாருடன் ஒப்பிடும்போதுதான் என்பதை அழுத்தி சொல்கிறேன். அவருக்கு முன்,பின்னான அரசியல் தலைவர்களை அண்ணாவுடன் ஒப்பிட்டால் அண்ணா ஒரு அரசியல் துறவி.
எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டால் கலைஞர் சிறந்த நிர்வாகி . ஆனால் ஹிப்பாக்ரட்டுகளான தமிழர்கள் எம்.ஜி.ஆரை ஏற்று கலைஞரை 13 வருட காலம் வனவாசம் செய்வித்தனர். இதுவானாலும் பரவாயில்லை நடனமணி ஜெயாவை ஏற்று கலைஞரை தோற்கடித்தது தமிழினம்.
காலப்போக்கில் திருமணம், செக்ஸ் இத்யாதி விசயங்களில் தமிழினத்தின் பார்வை அகலப்பட்டு வந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எம்.ஜி.ஆரின் மூன்று திருமணங்கள், கலைஞரின் இரண்டு திருமணங்கள். தமிழினம் எந்தளவுக்கு முதிர்ந்திருக்கிறது என்றால் ஜெயா சசிகலாவின் வரையறுக்கப்பட இயலாத உறவையும் ஏற்று இருக்கிறது.
இதையெல்லாம் நான் சொல்ல காரணம் என் பதிவுக்கான மறுமொழிகளில் பழம்பெருமை, அக நானூறு,புற நானூறு, சங்ககாலம் இருக்கிறதே தவிர நேற்று முந்தா நேற்று கிழித்தது என்ன என்பது இல்லை.( அல்லது ஜன்ய பாகங்கள் பிரமுகமாக பிரஸ்தாபிக்கப்படும் நாலாந்தர மறுமொழிகள்)
உலகில் புனிதமென்று கொண்டாடப்படும் எதைக்காட்டிலும் புனிதமானது (குறைந்த பட்சம் மனித )உயிரும் ,மனிதமுமே. ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புள்ள நளினி ஒரு ஆயுட்காலம் சிறையில் இருந்தாலும் பெரிய மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மந்தர்களின் கல் நெஞ்சம் கரையவில்லை.இத்தனைக்கும் ராஜீவ் கொலை குறித்து அந்த சம்பவம் நடந்து முடியும் வரை நளினிக்கு தெரியவே தெரியாது.
இனமானம், தமிழ் வீரம், தியாகம் என்று ஜல்லியடித்து இளைஞர்களின் மூளைகளை தற்கொலைக்கு தூண்டிய இயக்கங்கள் எத்தனை எத்தனை ? சமீப காலத்தில் ஒரு தலைவனாவது கொண்ட கொள்கைக்காகவோ ...இனமானம் காக்கவோ இதுவரை உயிர் தியாகம் செய்திருக்கிறானா? இல்லையே. எந்த தொழிலதிபனாவது இனம் காக்க பிணமானதுண்டா? இல்லையே.
தெலுங்கானா கேட்டு சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கிய கே சி ஆர் கூட டோட்டல் பேரண்டல் ந்யூட்ரிஷன் எனப்படும் திரவ உணவை ஊசி வழியே ஏற்றியபடிதான் உ.வி (?) செய்தார். ஆனால் தெலுங்கானாவுக்காக எத்தனை எத்தனை பேர் செத்தார்கள்
நாளை தெலுங்கானாவே அமைந்தாலும் போன உயிர்கள் திரும்புமா?
என் வாயை சாத்த பல்லாயிரம் ஹிப்பாக்ரட்டுகள் முயன்றாலும் என் வாய் மூடாது. ஆயிரம் தான் கொள்கை, கோன் ஐஸ்க்ரீம் என்று ஜல்லியடித்தாலும் ஒரு உயிரின் முதல் கடமை உயிர் வாழ்தல். அதை மாய்த்துக்கொள்வதை என்னால் ஏற்கவே முடியாது.
வாழ்க மனிதம் ! ஒழிக தற்கொலைகளை தியாகங்களாக்கும் போலி அரசியல் !

Thursday, December 31, 2009
குரு பெயர்ச்சி பலன் (மெய்யாலுமே)
"சாமி ! ஏதோ குரு மாறிட்டாருனு பேசிக்கிறாங்க ! மேஷ ராசிக்கு எப்டி கீது சாமி !"
"பரவாயில்லே தம்பி ! பாஸ்ட்ல பத்துல இருந்த குரு 11 க்கு வந்திருக்காரு. கோல்ட்,ஃபைனான்ஸ்,பெரிய மன்ஸங்க ஆதரவு எல்லாம் கிடைக்கும். கண்ணாலம் ஆகாதவங்களுக்கு ஆகும். சில பேருக்கு லவ் சக்சஸ் ஆகும். ஏற்கெனவே கண்ணாலம் ஆனவுகளுக்கு மனைவி கூட நாலு இடத்துக்கு பந்தாவா போய் வர மாதிரி ஒர்க் அவுட் ஆகும். சிலருக்கு புத்திர பாக்கியமும் ஏற்படும். வேலை வெட்டி கிடைக்கும். இவரு உங்களுக்கு 9,12 க்கு அதிபதிங்கறதால சிலரு சொத்து வாங்கலாம். சிலர் சொத்தை வித்து புதுசா தொழில் ஆரம்பிக்கலாம். ஆனா ஒன்னுப்பா இப்போ சனி 6 ல இருக்காரு. நானே ராஜா நானே மந்திரினு ஆடச்சொல்லும் . அடக்கி வாசிச்சா எதிர்காலத்துக்கு நல்லது "
"சாமீ ! எங்க சம்சாரம் ரிஷபராசி சாமி.. அவளுக்கு எப்படி இருக்கு?"
9ல இருந்து குரு 10க்கு வந்திருக்காரு. பாஸ்ட்ல அப்பா சைட்ல ஒரு டெத் கூட நடந்திருக்கலாம். இப்போ பத்து ஒன்னும் நல்ல இடம் கிடையாது. ஆனாலும் தொழில்முயற்சி கைகூட வாய்ப்பு இருக்கு. வேலை செய்ற இடத்துல ஒரு டெத் நடக்கலாம்"
"இன்னா சாமி ..டெத் டெத்துனு பேதிக்கு குடுக்கறே"
" நான் என்ன செய்யட்டும்பா ? குரு ரிஷபராசிக்கு அஷ்டமாதிபதியாச்சே.. என்ன ஒரு நல்ல விசயம்னா ஒரே நேரத்துல ரெண்டு தொழில் கூட செய்ய சந்தர்ப்பம் அமையலாம். ஆனா சனி 5 ல இருக்கிறதால பெரியவங்களை கன்சல்ட் பண்ணி முடிவெடுக்கிறது நல்லது. அதே சமயம் இவரு 9,10 க்கு அதிபதிங்கறதால அதிர்ஷ்ட வசமா தொழில் அமையலாம், வேலை கிடைக்கலாம்"
"இதின்னா சாமி நல்லது கெட்டது கலந்து சொல்றே"
"அதான் நைனா லைஃபு . இப்போ என்ன கேட்க போறே ? உன் அண்ணனுது மிதுன ராசி அதுக்கெப்படி இருக்குனுதானே கேட்க போறே "
"அட ஆமா சாமி !"
"கேட்டுக்க. மிதுன ராசிக்கு குரு 9க்கு வரார். இது நல்லதுதான். பொதுவா குரு அனுகூலமா வந்தா கிடைக்கிற நல்ல பலனெல்லாம் கிடைக்கும்.கோல்ட்,
ஃபைனான்ஸ்,பெரிய மன்ஸங்க ஆதரவு, புருசன் பொஞ்சாதி மத்தில ஒத்துமை ஜாஸ்தியாவும், புத்திர பாக்யம் கிடைக்கும்.கொடுக்கல் வாங்கல் சரளமா இருக்கும்.
இவரு 7,10க்கு அதிபதிங்கறதால அன் மேரீட் ஃபெலோஸுக்கு அப்பா வகையறால மனைவி அமையலாம். திருமணமானவுக பொஞ்சாதியோட கோவில் குளம்னு போய்வர வாய்ப்பு ஏற்படும் . பொது வேலைகள், கோவில் திருப்பணி மாதிரி வேலைகள்ள பங்கெடுக்க வேண்டி வரலாம். ஆனால் இவிங்களுக்கு சனி சுகஸ்தானத்துல இருக்கிறதால தாய் வீடு வாகனம் கல்வி வகையறால சிக்கல் ஏற்படும். வெகு சிலர் வீடு வாங்கவோ கட்டவோ கூடும்."
"சாமி உன்னை ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்கமாட்டியே."
" நீ என்ன கேட்க போறேனு தெரியும். உன் தம்பிக்கு கடகராசி அதுக்கெப்படி இருக்குனு கேட்க போறே அவ்ளதான அதையும் சொல்லிர்ரேன். கடகராசிக்கு குரு பாஸ்ட்ல 7 ல இருந்தாரு. ஜனம் ஆகா ஓகோன்னிருப்பாங்க ஒரு ..ம் நடந்திருக்காது. இப்போ எட்டுல குரு கெட்டது குடின்னிருவாங்க டோண்ட் ஒர்ரி. கடன் தீரும்,விவகாரம் ஜெயமாகும், நோய் குணமாகும் என்ன ஒரு வில்லங்கம்னா அப்பா அ அப்பா வழி உறவுக்கு ஒரு கண்டமிருக்கு. அல்லது 3 நாளாவது பார்க்காம/பேசாம இருக்க வேண்டி வரும். அதை நீங்களாவே கூட ப்ளான் பண்ணிக்கலாம். அதான் பரிகாரம். சனி மூண்ல இருக்காரு. தைரியம்,சாகசம் லக்ஷ்மிம்பாங்க . துணிஞ்சு நில்லுங்க துக்கமில்லே

Sunday, November 29, 2009
உதிரிப்பூக்கள்: 1
உதிரிப்பூக்கள் : ஒரு விளக்கம்
உதிரிப்பூக்கள் என்ற ஒரு வார்த்தையை ஸ்கான் பண்ணி பார்த்தா எத்தனை எத்தனை அர்த்தம். எதிராளி எதையா பெரிதாக எதிர்பார்க்கும்போது நாம கிள்ளி தெறிச்சா "ப்பூ..இவ்ளதானா " என்பார் அவர். கீழ்காணும் வாக்கியங்களை ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கள். பூ என்பது மனித வாழ்வை என்னமாய் ஆக்கிரமித்திருக்கிறதோ
" அந்த பொண்ணு பாவம் பூ மாதிரி இருப்பா "
" பம்பரம் பூவாய் சுற்றியது"
(அதெப்படி பம்பரம் பூவாயிருதுன்னா .. தன் மையத்துல கான்சன்ட்ரேட் பண்ணி சுத்தறதால. நாமகூட நம்ம மையத்தை மறக்காம இருந்தா வாழ்க்கை பூவா மணக்கும். )
"பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். "
"அவன் மனசு பூ மாதிரிப்பா"
" பூவுக்கு பூவு தாவுற வண்டு மாதிரி"
இப்படி ஆயிரம் சொல்லலாம். (மறுமொழில நீங்க கூட சொல்லலாம்)
"ஓராயிரம் பார்வையிலும் "
என்று துவங்கும் தமிழ் திரைப்பாடலின் இசைக்கு தெலுங்குல நான் எழுதின பாட்டிது . (அர்த்தம் கூட தந்திருக்கேன் . டோன்ட் ஒர்ரி)
தெலுங்கு பாட்டு:
"சத புவ்வுலு பூச்செனுலே
கத தபஸ்ஸுனு மரிச்செனுலே
இஹ சுகமுன முனிகெனுலே
பரமார்த்தமு மரிச்செனுலே
ஈ நந்தனவனியந்தே அவி எருவுக மாரெனுலே
குசுமாலனு கசருகுனி ஹரி குச குசலாடெனுலே
பாத்ரனு மருவகனே தெர படுனனி பலிக்கெனுலே"
அர்த்தம்:
(பல) நூறு பூக்கள் மலர்ந்தன
கடந்தகால தவத்தை மறந்தன
இக சுகங்களில் மூழ்கின
பரமார்த்திகத்தை (ஆன்மீக வாழ்வை) மறந்தன
இதே தோட்டத்தில் அவை எருவாக மாறின
அரும்புகளை மென்மையாக அதட்டி ஹரி(இறைவன்) சொன்னான் /
ஏற்ற பாத்திரத்தை மறந்தால் திரை விழுந்துவிடும் என்று கிசுகிசுத்தான்
நம்மில் பலரும் அந்த மலர் போன்றவர்களே
.உயிர்வாழ்தலிடம் பலவற்றையும் வேண்டி தவிக்கிறோம் அது அதை தரும்போது அதை கண்டபடி மிஸ்யூஸ் செய்கிறோம். இது ரஜினிக்கே அல்ல நம்மில் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். தினசரி நம் உடலின் பல லட்சம் செல்கள் செத்துப்போகின்றன. நாள் தோறும் தேய்ந்துதான் வருகிறோம். பேலன்ஸ் ஷீட்டில் சொத்துக்களுக்கு ஆண்டுக்கொருமுறைதான் டெப்ரிசியேஷன். நமக்கு ? தினசரி.
எனவேதான் .. நானும் இந்த வலைத்தோட்டத்தில் எருவாக மாறிவிடக்கூடாதென்றுதான் புயலாக சீறிய நான் பூவாக மாறிவிட்டேன். இது வெறுமனே பூவாசம் அல்ல. தமிழ் வலைப்பூ வாசம். தமிழ் வாசம். இதன் பின்னிருப்பது உலகத்தின் பால் , இயற்கையின் பால் எனக்குள்ள நேசம், விசுவாசம் .
என்னடா இது படிவு போற போக்கே சரியில்லனு பயந்துராதிங்க. இப்போ இதை படிங்க ..

இந்த தொடர்ல வெளிவர போறது கதைதானில்லே,கவிதைதானில்லே.
இன்ன ஜாதினு இல்லாம சகல ஜாதிகளும் இங்கு சங்கமம். ரொம்பவே யோசனை பண்ணிதான் இந்த முடிவை எடுத்திருக்கேன்.

ஆமாங்க "புதிய பார்வை"லக்ரெடிட் கார்டு, செல்ஃபோன் என்று அரத பழசான சமாச்சாரங்களை வைத்து கவர் ஸ்டோரி எழுதுற மாதிரி ஆயிருச்சு நம்ம நிலைமை. தலை போற சமாச்சாரம் எத்தனையோ இருக்கு. எல்லாத்தயும் எழுதிகிழிக்கனும்னா நம்மால முடியாத். அதனால அட்லீஸ்ட் தொட்டாவது காட்டலாம்னுதான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.
தாளி மனுசன் சாகிறான். எப்படியெல்லாமோ சாகிறான். இலங்கைல மட்டுமில்ல தமிழகத்துல மட்டுமில்லே இங்கயும்தான். இன்னைக்கு தெலிங்கானா வேணம்னு கே.சி.ஆர் சாகும்வரை உ.விரதம் அறிவிச்சார். போலீஸ் குண்டு கட்டா தூக்கிருச்சு. அதுக்கு மாணவர்கள் போராடறாங்க. ஒரு பையனை போட்டு 6 போலீஸ் பன்னிங்க பின்னு பின்னுனு பின்னுது.
இத்தனைக்கும் தெலிங்கானா வேணம்னு ஏன் கேட்கிறான். முன்னேற்றம் பரவலாக்கப்படலை. தங்கள் பகுதி பின் தங்கிட்டதா ஒரு ஃபீலிங். ஒய்.எஸ்.ஆர் போத்தி பாடுனு ஒரு ப்ராஜக்ட் ஆரம்பிச்சாரு. அத மட்டும் முடிக்க விட்டிருந்தா இன்னைக்கு இந்த உ.விரதமில்லே. பசங்க உதைவாங்கி சாக வேண்டியதில்லை.
ஒய்.எஸ் பத்தி நான் ஏதாவது சொன்னா உடனே வரிஞ்சுகட்டிக்கிட்டு விமர்சிக்க ஆளிருக்கு இங்கே. நானும் என்னால முடிஞ்ச வரை சொல்லியாச்சு. அவர் செய்த ஒரே தப்பு கவர்ன்மென்ட் மெஷினரிய ஓவராயிலிங் பண்ணலை. பாபு காலத்துல ஒரு மயிரு ப்ராஜக்டும் கிடையாது. ஆனால் ஐ.ஏ.எஸ் ஆஃபீசருங்களை வெள்ளையடிக்க வச்சாரு பாபு
ஒய்.எஸ்.ஆர் ஏறி வெண்ணையெடுத்திருந்தா கூட கேட்டிருக்கமாட்டாங்க. ஏனோ அவரு அரசு இயந்திரம்ங்கற வெள்ளையானைய பட்டினி போடவும் முன் வரலை , போட்ட தீனிக்கேத்த மாதிரி வேலையும் வாங்கலை. இதெல்லாம் சேர்த்துதான் போத்தி பாடு மாதிரி பிராஜக்டு முக்குது.
Subscribe to:
Posts (Atom)