Monday, February 4, 2008
கிரக பலம்:
கிரகங்கள் தாம் உச்சம் பெறும் ராசிக்கு 7 ஆவது ராசியில் நீசம் பெறும் என்பது விதி.
எந்த கிரகம் எந்த ராசியில் உச்சம் பெறும் என்பதை பார்ப்போம்!
சூரியன்:மேஷம்
சந்திரன்: ரிஷபம்
செவ்வாய்:மகரம்
குரு:கடகம்
சனி:துலா
புதன்:கன்னி
சுக்கிரன்:மீனம்
எந்த கிரகம் பலம் பெற்றால் நல்லது:
லக்னத்திலிருந்து 1,5,9 ஆவது அதிபதிகள் உச்ச பட்சபலம் பெறவேண்டும்.
4,7,10 அதிபதிகள் மத்தியதர பலம் பெற்றால் போதுமானது.
6,8,12 அதிபதிகள் முழுமையாக பலவீனப்பட வேண்டும்
எந்த கிரகம்,எந்த கிரகத்தோடு சேர்ந்தால் நல்லது:
1,5,9 அதிபதிகள் பரஸ்பரம் கலந்தால் 100 சதவீதம் நல்லது
இவர்கள் 4,7,10 அதிபதிகளோடு சேர்ந்தால் 75 சதவீதம் நன்மை.
4,7,10 அதிபதிகளே பரஸ்பரம் கலந்திருந்தால் 50 சதவீதம் நலம்.
1,5,9,4,7,10 அதிபதிகள் 2,11அதிபதிகளுடன் சேர்ந்தால் 35 சதவீதம் நல்லது. ஆனால் இவர்களுக்கு 6,8,12 அதிபதிகளுடன் எவ்வித தொடர்பும் இருக்க கூடாது. மேற்கூறிய விதியை தங்கள் ஜாதக சக்கரத்துக்கு மட்டுமே அல்லாது தற்போதுள்ள கிரக நிலைக்கும் அப்ளை செய்து பலனையறியலாம்.
துவாதச(10+2=12)பாவ காரகத்துவம்:
ஜாதக சக்கரம் 12 கட்டங்களாக பிரிக்கப்படும் என்று ஏற்கெனவே கூறினோம். இந்த 12 கட்டங்களும் உங்கள் வாழ்க்கை என்னும் போர்ட்டபிள் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 12 சேனல்களை காட்டுவனவாகும். இந்த பாவங்களுக்கு,பாவாதிபதிகளுக்கு மேற்சொன்ன விதிகளை அப்ளை செய்து பாருங்கள். இவை எந்த அளவுக்கு பலம் பெற்றிருந்தால் அந்த அளவுக்கு இவை காட்டும் விஷயங்களில் நீங்கள் வெற்றியடையலாம்.
முதல் சேனல்:(லக்னம்)
உங்கள் உடல்,மன நலம்,நிறம்,குணம்
2ஆவது சேனல்:
(தன பாவம்)தனம்,வாக்கு,குடும்பம்,கண்கள்
3 ஆவது சேனல்:
சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில் பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்
4ஆவது சேனல்:
தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்
5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு
6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாமன்,வயிறு
7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்
8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத ,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சத்ரு, தீராத ரோகம், தீர்க்கமுடியாத ருணம்(கடன்),சிறைப் படுதல், மஞ்சள் கடிதாசு கொடுத்தல்,அடிமையாதல்,மேஜர் விபத்து, ஆப்பரேஷன்,மர்மஸ்தானம்
9.ஆவது சேனல்:
தந்தை,தந்தைவழி உறவு,தந்தை சொத்து,சேமிப்புக்கள்,தூர பிரயாணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள்.
10ஆவது சேனல்:
வாழும் வழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோகம்,வியாபாரம்
11.ஆவது சேனல்:
மூத்த சகோதிரி/சகோதரன்,லாபம்.
12ஆவது சேனல்:
தூக்கம்,செக்ஸ்,மரணம்,மரணத்துக்கு பின்னான நிலை,செலவு செய்யும் விதம்,பாதங்கள்.