இலக்கியம் என்பதே கேள்வி/பதில்தான்
எல்லா இலக்கியங்களும் ஒன்று கேள்வி எழுப்புகின்றன
அல்லது பதில் தருகின்றன.
இலக்கியம் என்பது வியப்பதாக இருக்கும்.
ஒன்று படைப்பின் நேர்த்தியை அல்லது
படைப்பின் அவலத்தை
பதிவு செய்வதாய் இருக்கும்.
ஒன்று படைப்பின் நேர்த்தியை அல்லது
படைப்பின் அவலத்தை
பதிவு என்றால் உடலுறவுக்கு பின்
அந்த பெண்ணின் முலை மீது முத்தாய் நின்ற
கண்ணீர் துளியையும் சேர்த்தே!
கவிதை சுருங்கினால் அழகு
மனிதர் மனம் விரிந்தால் அழகு
சாமானியனாய் புறப்பட்டு
சரித்திரமாய் நடை போடுவதை
என்னால் உணர முடிகிறது.
என் வாழ்வில் அன்று தொடர்பற்றவையாய்
தோன்றிய சகலத்துக்குமிடையே ஒரு
ஒத்திசைவை உணர முடிகிறது.
இந்த சரித்திரம் ஏற்கெனவே எழுதப்பட்டு
அரங்கேறி வருவதை
அறிந்து கொண்டேன்.
மிச்சமிருப்பது க்ளைமேக்ஸ் யுத்தம்தான்.
அது முதல் பானிப்பட் யுத்தமா?
அசோகனின் கலிங்க போரா என்பது தான் கேள்வி
நான் என் சுயவிருப்பத்தின் பேரில் இந்த பூமி கிரகத்துக்கு
சுற்றுலா வந்தவன்.
முன்னொரு காலத்தில் நான் இந்த கிரகத்தின் குடிமகனாய்
வாழ்ந்திருக்கலாம். அந்த வாழ்வின் மிச்சங்கள்
என் ஆழ்மனதில் எச்சங்களாக இருக்கலாம் .
என்றாலும் என் தன்னுணர்வு உச்சத்திலிருக்கும் இந்த நொடியில் அடித்து சொல்கிறேன் நான் முடிக்க வேண்டிய கணக்கு ஏதுமில்லை..
இங்கெவரோடும் பிணக்கும் ஏதுமில்லை.
நான் விருட்சமாக விஸ்வரூபம் எடுக்கா விட்டாலும் வீணில்லை
நான் விதையாகத்தான் விழுந்திருக்கிறேன் என்று உணர்ந்து கொண்டேன்
இது போதும் இந்த பிறவிக்கு.
அண்டவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்
எனக்குள் சொட்டுவதை உணர்ந்ததே போதும்
மறு நொடி என் தன்னுணர்வு தள்ளாடலாம்/
மீண்டும் அற்ப எண்ணங்கள் என் மனதில் நிழலாடலாம்.
இந்த தினம்,இந்தகணம் நான் என்னை ஒப்புக்கொடுத்தேன்
படைப்பின் பரம ரகசியங்கள் குறித்து
எனக்கு துப்பு கொடுத்த தூய மாயா சக்திகளுக்கு
என் வணக்கம்.
மறுகணம் மறையலாம் இந்த இணக்கம்.
நாளைய என்னை இன்றைய என்னுடன்
ஒப்பிட்டால் கெடலாம் தூக்கம்
இவர்களோடு என்னை ஒப்பு நோக்க நானே இறைவன்.
அவன் அருள் நானே
நான் மறை ஓதும் மறை பொருள் நானே
நான் ஒரு கனவு கண்டேன்
அந்த கனவை நனவாக்க திட்டமிட்டேன்.
உயிர்த்திருக்கவே உணவெடுத்தேன்
களவும் கற்று மறந்தேன்
பலவும் பார்த்து துறந்தேன்
அவன் இருப்பதை கண்டு கொண்டேன்
விண்டவரில்லை என்ற வாக்கை வாக் அவுட் செய்விக்க
கண்டதை சூசகமாய் கவிதையில் கூற முயன்றேன்.
அப்பட்டமாய் போட்டுடைக்க நான் ரெடி
தாங்கிக் கொள்ள இவர்கள் ரெடியா?
இந்த கணம் என் மனம்
பிரபஞ்ச மனத்தோடு சேர்ந்து பாடும் டூயட் இந்த கவிதை
40 வயது முதிர்கன்னியின் முதல் கூடல் இது.
உயிர்களின் பால் என்னில் வளர்ந்த கருணை
எவரையும் உயிர்ப்பிக்காதிருந்திருக்கலாம்.
ஆனால் அது என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
என் தாய் என் தாய் தானே தரணியாகி,
அதனை தரித்த தாரணியாய் காரணியாய்
ஒற்றைக் கொசுவாய் ரீங்கரிக்கும் ஓசை ஓங்காரமாய்
என் செவி சேர என் உடல் சோர்ந்திருப்பினும்
உயிரில் ஊறுது புது சக்தி