போலீஸ் அடக்குமுறை என்பது ஏழை,எளியவர்,தாழ்த்தப்பட்டோர் (இப்ப த.நா.என்னன்னு சொல்லனும்?)பெண்கள்,குழந்தைகள் மீதுதான் பாயும் என்று நீங்கள் நினைப்பவரானால்.. ஐம். சாரி !
போலீஸ் அடக்குமுறைக்கு முறைக்கு இந்த பேதமெல்லாம் இல்லை. ஒரு ராணுவ அதிகாரி.ஓய்வுக்கு பிறகு செக்யூரிட்டி ஏஜென்ஸி நடத்திவருகிறார். பயங்கர சவுண்ட் பார்ட்டி. வருடத்தில் 3 மாதங்கள் தாம் புதிதாய் வாங்கும் சொத்துக்களை ரெஜிஸ்டர் செய்வதற்காகவே ஒதுக்கி வைத்திருப்பவர். இவர் சித்தூர் வந்தார். நள்ளிரவு. சித்தூர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள நைட் டீ கடையில் டீ சாப்பிட்டார். அந்த நேரம் பார்த்து ஸ்டேஷனில் வேலை பார்க்கும் ஹோம் கார்டு(த.நா.ல் ஊர் காவலர்?)
கூட அதே டீக்கடையில் டீ சாப்பிட வந்தார். அவர் ஷூ ராணுவ வீரர் காலை மிதித்துக் கொண்டே இருந்தது. ரா.வீரர், "வலிக்குதுங்க காலை எடுங்க " என்றார். அவ்ளதான். சீன் சித்தார் ஆயிருச்சு. தினத்தந்தி பாஷையில் சொன்னால் "முன்னாள் ரா.வீரருக்கு அடி,உதை"
அந்த ரா.வீரருக்கு சித்தூரில் ஒரு அக்குபஞ்சர் டாக்டர் ஃப்ரண்டு. அவருக்கு குமார் ஃப்ரண்டு. குமார் நம்ம ஃப்ரண்டு. உடனே சீன்ல இறங்கிட்டன். அப்போ ஆந்திரபிரபால ரிப்போர்ட்டர் நான். டாக்டர் பதி சாலையில் ரிக்ஷாக்காரர்கள் கஞ்சா வாங்கும் அதே சந்தில் தான் மாடியில் பிரஸ் க்ளப். களப்புக்கு பக்கத்து கடைதான் ஆந்திரபிரபா ஆஃபீஸ். நேரே ஸ்டேஷனுக்கு சென்றேன். ரா.வீ யுடன்.
"வணக்கம் சார். நான் ஆந்திரபிரபா"
"நல்லதுப்பா"
"சார் ..இவர் மு.ரா.வீ. ஏதோ பிரஸ் மீட் வைக்கனும்னு க்ளப்புக்கு வந்திருந்தார்"
"நல்ல விஷயம் தானே..வைக்கட்டும்"
"எங்களுக்கு ரொம்பவே நல்ல விஷயம்தான் சார். உங்களுக்கு நல்லதில்லைன்னு நினைச்சு பார்ட்டிய இங்கே தள்ளிட்டு வந்துட்டேன்"
"என்னப்பா சொல்றே"
/விஷயத்தை சொன்னேன்/
பிறகு பார்க்கனுமே சி.ஐ. நடிப்பை. மனித உரிமை ஆர்வலர்கள் கூட அந்த அளவுக்கு பதறமாட்டார்கள். காலை மிதித்த ஹோம் கார்டை வரவைத்ததென்ன? அவனுக்கு தான் சொல்லியிருந்த வேலைகள் எதுவரை நடந்திருக்கின்றன என்று விசாரித்ததென்ன? அவனை பிடித்து ஏறு ஏறு என்று ஏறியதென்ன?
ஒரு வேளை ரா.வீக்கு டாக்டர்,டாக்டருக்கு குமார்,குமாருக்கு நான் ஃப்ரண்டாயில்லாதிருந்திருந்து ரா.வீ தனியே புகார் கொடுக்க போயிருந்தால் என்ன கதி..