Friday, February 1, 2008
ஆப்பரேஷன் இந்தியா 2000 ம்னா என்னண்ணே?
இது ஒரு திட்டம் இந்தியாவை பணக்கார நாடாக்குறதுக்காக நான் போட்ட திட்டம். இதுல அஞ்சு பார்ட் இருக்கு.
ஒன்னொன்னா சொல்லுண்ணே கேக்கலாம்
சொல்றம்பா.. இப்போ நம்ம நாட்டு தலையெழுத்தை நிர்ணயிக்கிறது யாரு?
பிரதம மந்திரி.
இப்போ இருக்கிற பிரதம மந்திரிய மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்தாங்களா ? இல்லே . மக்கள் சோனியா பிரதமராகனும்னு ஓட்டு போட்டாங்க . சோனியா மேல் நாட்டு மருமகள்னு எதிரி கட்சிகள் கூப்பாடு போட்டதால அந்தம்மா நம்ம மன்மோகனை கை காட்டிட்டாங்க ..இதுக்கு காரணம் நம்ம நாட்டுல மறைமுக ஜனநாயகம் அமல்ல இருக்கு. அதாவது மக்கள் எம்.பி க்களை தேர்ந்தெடுக்குறாங்க, எம்.பி க்கள் பிரதமரை தேர்ந்தெடுக்குறாங்க. மக்களே பிரதமரை நேரடியா தேர்ந்தெடுக்கனும்கிறது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முதல் பார்ட்டு
இதனால என்னண்ணே லாபம்?
நிறைய இருக்கு தம்பி. எம்.பி க்களால் தேர்வாகும் பிரதமருக்கு எம்.பி க்களோட தயவு இருந்தாதான் அவர் பிரதமரா தொடர முடியும். எம்பி க்கள் நினைச்சா ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து கல்தா கொடுக்க முடியும். இதனால் பிரதமருக்கு மக்களை விட எம்.பி.க்களோட தயவு அதிகமா தேவை படுது.அதனால
அரசாங்கத்தோட ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுது. பிரதமர் தன் நேரத்தை அதிகமா எம்.பி.க்களை திருப்தி படுத்தறதுல செலவழிக்க வேண்டி வருது.. இன்னும் ஒரு லாபம் இருக்கு காதை கிட்டே கொண்டா சொல்றேன். இன்னைக்கு நாட்ல பி.சி,எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டிகள் 53 சதவீதம் இருக்காங்க. நேரிடை ஜனநாயகம் அமுலாகி மும்முனை போட்டி ஏற்பட்டால் இந்த 53ல பாதி பேர் சப்போர்ட் பண்ணா போதும் மேற்படி மக்களுக்கு நன்மை செய்ற அரசு ஏற்பட வாய்ப்புண்டு.
அரசியல் ஆர்வம் இல்லாதவங்க, ஆனால் மேதைகள் இருப்பாங்க இவங்களோட ஆலோசனை அரசாங்கத்துக்கு தேவைப்படும். ஆனால் இவங்க தேர்தல்ல நிக்க பிரியப்படமாட்டாங்க . இப்படிப் பட்ட பார்ட்டிகளை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரத்தான் அந்த காலத்துல ராஜ்ய சபா ஏற்படுத்தினாங்க. ஆனால் காலத்தின் கொடுமையால மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை திருப்பி கொண்டுவர்ர கொல்லைப்புற வழியாக இன்றைய ராஜ்ய சபா மாறியிருக்கு.
நேரிடை ஜனநாயகம் அமலாகி,மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தான் விரும்பிய மேதைகளை ராஜ்யசபாவுக்கு நாமினேட் பண்ணிக்கிற வாய்ப்பு ஏற்படும்.
இன்னைக்கு ஒரு எம்.எல்.ஏ ,எம்.எல்.ஏ வா ஜெயிக்கனும்னா 1 கோடி ரூபா செலவழிக்க வேண்டியிருக்கு. 4 எம்.எல்.ஏ தொகுதி சேர்ந்தது ஒரு எம்.பி., தொகுதி. ஆக ஒரு ஆசாமி எம்.பி யா தேர்ந்தெடுக்கப்படனும்னா அவர் கு.ப.4 கோடி ரூ. செலவழிக்கனும். ஜெயிச்சு வந்த பிறகு அவர் விட்டதை பிடிக்க பார்ப்பாரா மக்களுக்கு சேவை செய்ய பார்ப்பாரா?
நேரிடை தேர்தல் வரும்போது எம்.பி பதவிக்கான முக்கியத்துவம் குறைஞ்சு போயிரும். போட்டி குறையும். செலவும் குறையும். அரசாங்கம் செய்யும் தேர்தல் செலவும் குறையும். எங்கயோ தில்லில இருக்கிற அத்வானியோ,சோனியாவோ ஜெயக்கனுங்கறதுக்காக இங்க இருக்கிற ரெட்டி,நாயுடு லட்சங்களை வாரியிறைக்க வாய்ப்பு இல்லை. முக்கியமா வன்முறையும் குறையும். கட்சிகள் வெற்றிக்குதிரைகளை கண்டு பிடித்து களம் இறக்கியாகனும். இதனால் உட் கட்சி ஜனநாயகம் கூட பிக் அப் ஆகலாம்.
(தொடரும்)