பத்திரிக்கை தர்மம் என்றால் என்ன?
நம்ம பத்திரிக்கைய வாங்கறவங்களுக்கு அப்பப்போ டீ பொடி, மூக்கு பொடி தர்மம் பண்றது தான். இது சும்ம ஒரு ஜோக் என்று நினைத்து விடாதீர்கள். பத்திரிக்கை தர்மம் பற்றிய என் கருத்துக்களை முன் வைக்க இது தொகையறா மட்டுமே..
தற்போது குமுதத்தில் "பத்திக்கிச்சி" படிக்கிறீர்களா? எங்க காலத்தில் (1967 முதல்) இது போன்ற செய்திகளை வாசிக்க பஸ் ஸ்டாண்டுக்கு போய் ,யாரும் பார்க்காத சமயம் கடைக் காரரிடம் பேசி சரோஜா தேவி கதைகள் வாங்கியாகனும். இப்போதெல்லாம் குமுதத்திலேயே வருகிறது. நல்ல வளர்ச்சி தான்.
குமுதம் நிர்வாகம், இன்டர்நெட்டில் மூழ்கி கிடக்கும் இளைய தலைமுறைக்கு அங்கு கிடைப்பவற்றை(?) தானும் வழங்க நினைப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனந்த விகடன் கூட தன் பக்கங்களை அரை ஆடை அணங்குகளின் படங்களால் நிரப்புகிறது. எங்கத்தான்யா போறிங்க? இன்னும் என்ன தான் பண்ணறதா உத்தேசம்?
படிக்கிற பழக்கம் குறைஞ்சி கிட்டே இருக்கு. இவங்க என்னமோ தங்கள் விற்பனையே முழு முதல் நோக்கமாய் செயல்படுகிறார்கள். இளைய தலைமுறை இப்படி(அச்சு ஊடகம்) வருவதற்கு பதில், கடந்த தலைமுறை அப்படி (இன்டர்நெட்) போய்கொண்டிருப்பது உமக்கு உறைக்க வில்லையா?
எங்கள் ஊரில் கூட இப்படித்தான் சில தியேட்டர்காரர்கள் "பிட்" போட்டு ஓட்டி, நாலு காசு பார்த்தார்கள். இப்போ..அந்த பக்கம் தலை வச்சு படுக்க ஆள் கிடையாது. அதே கதிதான் இந்த பிரகிருதிகளுக்கும் ஏற்படப்போகிறதென்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது