வேலூரை அடுத்துள்ள சித்தூர் தான் எங்கள் ஊர். நான் பிறந்தது 1967 ல் ,ஸ்கூலில் சேர்ந்தது 1974ல். 1982 வரை 10 ஆம் வகுப்பு முடித்து இண்டர் வரும் வரை தமிழ் "பசங்களோடு" தான் டீலிங். இதற்கு காரணம் அப்போதைய 2 ஆசிரியன் கள். விடுங்க கழுதை கிடக்கட்டும். இண்டர் வந்து தெலுங்கு "பசங்களோட" பழக ஆரம்பிச்ச பிறகுதான் என் பார்வையே வைடன் ஆச்சு. 1987 வரை டிகிரி. டிகிரி 2 ஆம் வருடத்தில் செக்ரட்ரியாக நாமினேஷன் போட முயன்றபோது தான் சித்தூரின் சினேரியாவே புரிந்தது. அப்போது தலித் இனத்தவரின் டாமினேஷன் அதிகம். நாயுடு பங்களா காரர்கள் காங்கிரசுக்கு குட் பை சொல்லி என்.டி.ஆரின் தெலுங்கு தேசத்தை ஹைஜாக் செய்து விட்டிருந்தனர். செக்ரட்ரி ஆசையை விட்டாக வேண்டிய நிலை. காரணம் அத்தனை பிரஷர். அப்போதுதான் சித்தூர் மாஃபியா வரலாற்றின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இப்போது கேளுங்கள் பக்காவாய் சொல்கிறேன்.
பழைய கதைகள் இப்போது எதற்கு? புதுசு, புதுசா நிறைய பதிவு பண்றேன். படிக்கலாம். தெலுங்கு டைரக்டர்ஸ் படிச்சா விடவே மாட்டாங்க சுட்ருவாங்க! அதனாலதான் இதை தமிழ்ல வைக்கிறேன். என்ன நான் ரெடி. நீங்க ரெடியா?
முதல்ல தேர்தல் அரசியலை பார்ப்போம். முக்கிய கட்சி 2. தெலுங்கு தேசம்,காங்கிரஸ். என்.டி.ஆர் அரசியலுக்கு வந்த புதுசுல ஜான்சி லட்சுமி (நாயுடு பங்களா) எம்.எல்.ஏ வா ஜெயிச்சதோட சரி. சித்தூர் எம்.எல்.ஏ தொகுதி காங்கிரஸுக்கு தான் என்று ஆகிவிட்டது. கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் சி.கே. பாபு குறைந்த வாக்கு வித்யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்க காரணங்கள் பல. விவரங்களுக்கு பார்க்கவும். (www.chittoortigerckbabu.blogspot.com)
தெ.தேசம் சார்பில் சீட் கேட்க இருந்தவர்களில் ஒருவர் சிரஞ்சீவி (ஆரம்பிக்கவே ஆரம்பிக்காத) கட்சிக்கு தாவி விட்டார். மிச்சமிருப்பது சிட்டிங் எம்.எல்.ஏ .ஏ.எஸ் மனோகர். இவருக்கு சீட் தரப்பட்டால் ஆச்சர்யப்படும் முதல் ஆள் இவரே. காரணம் சித்தூர் மாவட்ட தெ.தே.கட்சியின் காட் ஃபாதர் டி.கே.ஆதிகேசவுலுவின் சகோதரர் பத்ரி நாராயண நேரடி அரசியலில் குதித்து விட்டிருப்பதே. பத்ரிக்கு தேவை இல்லையென்றால் தான் அடுத்த சாய்சை பார்ப்பார்கள். அடுத்து களத்தில் இருப்பவர் ராவூரி ஈசுவரராவ். இவர் பற்றி தனியே ஒரு பதிவே இடவேண்டும். இவருக்கான வாய்ப்பு சூனியம்.
காங்கிரஸ் சார்பில் சி.கே பாபுவுக்கு தான் டிக்கட். பாதுகாப்பு காரணங்கள் கருதி அவரே தனது அடிப்பொடிகள் யாரையாவது பரிந்துரைக்கும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை. எது எப்படியானாலும் சித்தூர் மட்டும் அதிர்ஷ்டகட்டையாகவே இருக்கிறது. 1980 களில் தவிர வேறெப்போதும் மாநிலத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.வாக இருந்ததே இல்லை.
தற்போது வெற்றிவாய்ப்பை இழந்தாலும் முதல்வருடன் சி.கே பாபுவுக்கு இருக்கும் நெருக்கத்தால் சித்தூருக்கு யோகம் அடித்திருக்கலாம். அதற்கும் அடுத்தடுத்து சி.கே மீது நிகழ்ந்த தாக்குதல்கள் தடையாகிவிட்டன. பார்ப்போம்.
சித்தூருக்கு பல்கலைகழகம் வரவேண்டும். தொழிற்சாலைகள் வரவேண்டும். இந்த பத்து வட்டி கலாச்சாரம் ஒழிய வேண்டும் அதற்கு ஆண்டவன் தான் மனசு வைக்க வேண்டும்.