ஆந்திர அரசியலும் தமிழக அரசியலும்
ஆந்திர அரசியல் பற்றிய ஆர்வம் எனக்கு ஏற்பட்டதே என்.டி.ஆர் அரசியல் பிரவேசத்திற்கு பிறகுதான். தமிழக பத்திரிக்கைகள் என்.டி.ஆரை ஆந்திர எம்.ஜி.ஆர் என்று குறிப்பிட்டாலும் என்.டி.ஆருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆறு வித்யாசங்கள் ..இல்லையில்லை ஆறு நூறு வித்யாசங்கள் உண்டு. எம்.ஜி.ஆர் பற்றி நீங்கள் முழுக்கவே அறிந்திருப்பீர்கள் என்வே இந்த ஒப்பீட்டில் என்.டி.ஆர் குறித்த விஷயங்களை மட்டும் கூறுகிறேன் . நீங்கள் இவற்றை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
1.எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர்.(என்.டி.ஆர் தெலுங்கு தேசத்தின் மண்ணின் மைந்தர்)
2.எம்.ஜி.ஆர் நாடக நடிகராய் ஆரம்பித்து சினிமாவுக்கு வந்தவர். என்.டி.ஆர் டைரக்ட் சினிமா.
3.எம்.ஜி.ஆர் கைநாட்டு. என்.டி.ஆர் பி.ஏ பட்டதாரி. வருவாய்த்துறையில் ரிஜிஸ்ட்ராராக பணிபுரிந்தவர்.
4.எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் காங்கிரஸ் வாதி.என்.டி.ஆருக்கு அதன் வாசனை கூட கிடையாது. பி.வி. தெலுங்கர் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு எம்.பி தொகுதியை அவருக்கு பிச்சையிட்டார்.
5.எம்.ஜி.ஆர் பெரியார்,அண்ணா,கலைஞர் ஆகியோரின் தலைமையை ஏற்று செயல்பட்டவர்.(பின்பு கலைஞருக்கே ஆப்பு வைத்தது வேறு கதை). என்.டி.ஆர் சுயம்புவாய் தோன்றியவர்.
6.எம்.ஜி.ஆர் காங்கிரசுடன் கூட்டு வைத்து தில்லிக்கு காவடி எடுத்தவர். என்.டி.ஆர் ?ஊஹூம்.
7.எம்.ஜி.ஆர் நடிகராக இருந்த காலத்திலேயே நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். அரசியலுக்கு வந்த பிறகும் இது தொடர்ந்தது. உம்.ஜெயலலிதா,லதா,வெண்ணிற ஆடை நிர்மலா. என்.டி.ஆர் ஊஹூம்.
8.எம்.ஜி.ஆரின் பேச்சுத்திறமை,வாக்குவன்மை யெல்லாம் கடன் வாங்கியதே.ஆனால் , என்.டி.ஆர் சிங்கிள் ஹேண்ட் அட் எனி கார்னர்.
9.எம்.ஜி.ஆரின் இமேஜ் என்பது ஆரம்பம் முதலே கவனமாக,ஹிடன் அஜெண்டாவுடன் வளர்க்கப்பட்டது. ஆனால் என்.டி.ஆர் தம் திரைப்படங்களில் சிகரட்,தண்ணி,கஞ்சா,ஸ்மக்ளிங்,கற்பழிப்பு காட்சிகளில் கூட நடித்திருக்கிறார். அரசியலுக்கு வந்த பிறகும் மொட்டை தலையுடன் பத்திரிக்கை கேமிராக்களுக்கு காட்சியளித்தவர்,
10.எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா உறவு எந்த வகையானதோ அது எம்.ஜி.ஆருக்கே வெளிச்சம். ஆனால் என்.டி.ஆர் தான் விரும்பிய லட்சுமி பார்வதியை துணிவுடன் மணந்தார். மக்களும் அதை அங்கீகரித்து மீண்டும் முதல்வராக்கினார்கள். பெரியாரே மணியம்மையை மணந்து பெரும் அவதிக்குள்ளானது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
13/4/1987