கடுப்பேற்றுவது என்றால்?
நான் தினத்தந்தி நிருபன் என்பது தங்களுக்கு தெரிந்தே இருக்கும். ப்ரசிடென்ட் ஆஃப் இண்டியா என்று சொல்லும் ரேன்ஜில் பலமுறை பல பதிவுகளில் சொல்லியிருப்பேன். 27 ஆம் தேதி தர்ணா நடத்துவதாய் ஒரு சாதியினர் 24 ஆம் தேதி அறிவித்தனர்.(பிரஸ் மீட் வைத்து). அந்த சாதியில் ஒரு இளைஞர் தினத்தந்தியில் விளம்பரதாரர். என் க்ளாஸ் மேட், என் அண்ணனுக்கு ஃப்ரண்டு எல்லாம் ஓகே. பிரஸ் மீட் நடந்த அன்று அவர் எனக்கு போன் செய்து "பார்த்துக்க முருகா" என்றார், ரொம்ப ஜோவியலாய்.
நானும் சென்றேன். செய்தி எழுதினேன் . தந்தியில் வரவில்லை. மறுநாள் வரும் என்று சமாளித்தேன். மறுநாளும் வரவில்லை. ( அய்யா ஆதித்தனார் எழுதிய இதழாளர் கையேட்டில் ஒரு விதி இருக்கிறது. பேச்சு செய்தியாகாது. தர்ணா நடக்கட்டும் போடலாம் என்று கூட முடிவு செய்திருக்கலாம்.) நானும் 4 முறை ரிமைண்ட் செய்தேன். எடிட்டர் டெஸ்க்ல பலானவர் இருப்பார்,நான் சொன்னேன்னு சொல்லுங்க என்றார், சொன்னேன். எல்லாம் ஆச்சு.
இதெல்லாம் லொள்ளு சமாச்சாரம் என்று முதலிலேயே தெரியும். அதனால் செய்தியை ஃபேக்ஸ் செய்துவிட்டு ரசீது,மேட்டரை அந்த இளைஞரின் டேபிளுக்கே அனுப்பிவிட்டேன்.
இந்த நிலையில் அதே சாதியை சேர்ந்த ஒரு பிரமுகர், எனக்கு டயல் செய்துவிட்டு பக்கத்திலிருக்கும் நபரிடம் பேசுகிறார்." இந்த பத்திரிக்கைகார பயலுவளுக்கு ஒரு ஃபுல்,ஒரு பிரியாணி பொட்டலம் ஏற்பாடு பண்ணிரனும்பா , ....கிட்ட சொல்லிருங்க" (நான் சொன்ன விளம்பர தாரர்)
கடுப்பேற்றுவது என்றால் இதுதான் போலும்.
ஃபுல்லும்,பிரியாணியும் எத்தனை பேருக்கு,எத்தனை முறை போட்டார்,போட்டு எழுதவைத்து இவர் என்னத்தை கிழித்தார். இவர் கதை நீண்ட கதை.
ஒரு சமயம் காசாவது இருந்தது. இப்போ அந்த ...ம் கிடையாது." நா காக்க" என்று வள்ளுவர் சொன்னது இது மாதிரி பார்ட்டிகளுக்காகத்தான் போலும்.
அப்புறம் பாருங்க ..மறுபடி டயல் பண்ணி ராஜா ..கண்ணுனு பேசுது பார்ட்டி.
இந்த பார்ட்டியோட கதையை நிச்சயம் அடுத்த பதிவுல எழுதியே தீர்ரன். இது மாதிரி கேரக்டர் எல்லா ஊர்லயும் ஒன்னு இருக்கு.