ஜெயலலிதா குமுதத்தில் எழுதிய ஒரு தொடர்கதை பாதியில் நிறுத்தப்பட்ட கதை தெரியுமா? இன்று எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு யார் என்ற விவாதம் (நாட்டுக்கு ரொம்ப தேவை!) நடந்து வரும் நிலையில் எம்.ஜி.ஆர் எப்பேர்பட்ட வில்லன் என்பதை விவரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. முகமற்ற நான் அதை விளக்குவதை விட புரட்சி தலைவி ஜெயலலிதா எழுதி பேரம் குதிர்ந்ததாலோ,பயமுறுத்தலாலோ பாதியில் நிறுத்தப்பட்ட தொடர்கதையின் சுருக்கத்தை வெளியிடுகிறேன். இதை தொடர்கதை எழுதிய ஜெயலலிதாவோ, வெளியிட்ட குமுதம் வார இதழோ மறுக்கட்டும் பார்க்கலாம்.
தொடர்கதை சுருக்கம்:
ஒரு நடிகை,ஒரு நடிகர் இருவருக்கும் உறவு ஏற்படுகிறது. நடிகைக்கு ஒரு மகள் பிறந்து அவளும் நடிகையாகிறாள். நடிகர் தான் அவளுக்கு தந்தை என்ற விஷயத்தை கூட மறந்து, மிருகத்தனமாக அவளை அடைய முயல்கிறார்.
எம்.ஜி.ஆர் தமிழர்,தமிழக வரலாற்றில் ஒரு கறை போன்றவர். அதை ஜெயலலிதா மிக நன்றாக அறிவார். அதனால் தான் எம்.ஜி.ஆரின் பெயர்,மற்றும் உருவ படத்தை அமுக்கி வைத்தார். எங்கோ இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்து கேரளத்தில் வளர்ந்து ,சமுதாயம் கைவிட்ட வர்கத்துக்காகவே தான் பிறந்ததாக அவர்களை நம்பச்செய்து தமிழகத்தை ஆண்ட எம்.ஜி.ஆரின் மறுபக்கம் என்ன என்பது அவருடன் பழகிய அனைவரும் அறிவர்.ஆனால் காலத்தின் கட்டாயம் காரணமாய் அவற்றை மறைத்து வள்ளல் அது இது என்று மாய்மாலம் செய்து வருகின்றனர்.
முரசொலியில் எம்.ஜி.ஆரின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கலைஞர் கூட தற்போது அடக்கி வாசிப்பது இறந்து விட்ட ஒரு மனிதரை அசிங்கப்படுத்திவிடக்கூடாது என்ற மனிதாபிமானத்தால் தான்.
இதில் நான் வைரமுத்துவின் கட்சி, ஆம் அவர் கவிதை இதோ..
உங்கள் அச்சகம்
எது வேண்டுமானாலும் அச்சிடுங்கள்.
ஆனால் காலத்தின் விமர்சனம் உங்கள்
பிணங்களை கூட தோண்டி எடுத்து தூக்கில் போடும்