Wednesday, February 27, 2008

தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு சில யோசனைகள்

க‌ன்ச‌ல்ட‌ன்ட்:
1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் என்றவகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.

1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.

2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் த‌வ‌றுப‌வ‌ர்க‌ளுக்கு 3 மாத‌ம் வ‌ரை டைம் கொடுத்து ம‌று தேர்வு நிக‌ழ்த்திப்பார்க்க‌லாம். அதிலும் த‌வ‌றினால் க‌ல்தா கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாக‌த்தில் வேலைக‌ளை பிரித்திருப்ப‌து நிர்வாக‌ வ‌ச‌திக்குத்தானே த‌விர‌ இன்னார் இன்ன‌ வேலைக‌ளைத்தான் செய்ய‌ வேண்டும், வேறு வேலைக‌ளை செய்ய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அல்ல‌. செய்தித்துறை என்ப‌து அத்யாவ‌சிய‌ பிரிவில் வ‌ருவ‌தாகும். இதில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள் யாராயிருந்தாலும் எந்த‌ வேலையானாலும் செய்தாக‌வேண்டும். என‌வே அனைவ‌ருக்கும் அனைத்து வேலைக‌ளிலும் கு.ப‌. அறிமுக‌மாவ‌து இருக்க‌ வேண்டும்.

4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.

5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்தது இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட‌ செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. என‌வே போலீசார் பார்வைக்கு செல்லாத‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ நிருப‌ர்க‌ள் வாச‌க‌ர்க‌ளுக்கு துப்ப‌றிந்து தெரிவிக்க‌ வேண்டும். அப்போதுதான் போட்டியை ச‌மாளிக்க‌ முடியும்.


6.என்னைக்கேட்டால் புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.

7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.

8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவ‌ட்ட செய்திகளை கூட‌ ம‌ண்ட‌ல‌ம் வாரியாக‌ பிரித்து வெளியிடுகிறார்க‌ள். இத‌னால் குட்டித்த‌லைவ‌ர்க‌ளின் செய்திக‌ளுக்கும் இட‌ம் கிடைப்ப‌தோடு ,விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயும் பெருகும‌ல்லவா !


புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.


லே அவுட்:

லெட்டர் பிரஸ் கால‌த்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.


தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்க‌மான‌ எழுத்துப்பிழைக‌ள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.

ஊழியர் தோற்றம்:

அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்

குறிப்பு:
என் யோச‌னைக‌ளை பின்ப‌ற்றும் நாளித‌ழ் அதிப‌ர்க‌ள்,ஆசிரிய‌ர்க‌ள் என‌க்கு 50 பைசா கார்டில் ஒரு ந‌ன்றி தெரிவித்தால் ம‌கிழ்வேன். என‌து விலாச‌ம்


எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்,
7/85, பாணாலா தெரு,
சித்தூர் ஆந்திர‌மாநில‌ம்
517001
posted by chittoor.S.Murugeshan @ 7:09 AM