நான் ஏன் பத்திரிக்கை ஆரம்பித்தேன்..!
பத்திரிக்கை என்று நான் ஆரம்பித்தது 1987 ல். அதன் பெயர் புதுசு. அதன் ஒரே போஷகர் என் தந்தை. இன்றைய பிரபல தெலுங்கு திரைக்கதாசிரியர் ஜனார்தன் மஹர்ஷி தெலுங்கிலும் ஆரம்பிக்கும்படி குழப்பி விட்டு விட் நவதா பிறந்தது. கோயில் நோட்டீஸ் தனமாய் ஆரம்பித்து கல்கண்டு சைஸுக்கு வளர்ந்து பரிதாபமாய் உயிர் விட்டது.
பின்பு எத்தனையோ குறை பிரசவங்கள்,தொடர்புகள் (மலையாள சினிமாத்தனமானதல்ல).அடுத்து ஆந்திரபிரபா நிருபனாக 2 வருடம் வேலை செய்ததில் பத்திரிக்கையுலகின் சகதிகள் அறிமுகமாகி, ஒரு வித அவுட்லெட்டு தேடி தான் பத்திரிக்கை ஆரம்பித்தேன்.
நான் இந்தியன் பொலிடிக்கல் க்ளோசப் என்ற பெயரில் ஒரு மாதமிருமுறை பத்திரிக்கையை ஆரம்பித்து 2 வருடங்களாக நடத்தி வருகிறேன்.(மகள் உதவியுடன்). கடந்த 2 வருடங்களாக என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம்,ஜோதிடம்,வாஸ்து,ஆன்மீகம் இத்யாதி மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த இந்த பத்திரிக்கையில் சித்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.சி.கே.பாபுவின் ரசிகர்கள் கடந்த இதழில் 4 பக்கங்களுக்கும் ஒரேயடியாய் விளம்பரம் கொடுத்து அசத்தினர். இதையடுத்து இந்தியன் பொலிடிகல் க்ளோசப் தன் பெயருக்கு ஏற்ற விதத்தில் மாற்றம் பெற்று விட்டது. இது சர்வ நிச்சயமாக தெய்வச்செயல் தான். இந்த ப்ராசஸ் அடுத்த ஒன்னரை வருடங்களுக்கு தொடர்ந்தால் தூள் தான். பொருளாதார பிரச்சினைகள் இல்லாது மக்களுக்கு உண்மையிலேயே உபயோகமான விஷயங்களை தரலாம்.