வங்கிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. வங்கிகள் ஒருங்கிணைப்பு,ஆட்குறைப்பு,ஊழியர் வயிற்றிலடிப்பு இத்யாதி காரணங்களால் வங்கிகள் இயங்கி வருகின்றனவே தவிர எப்பவோ வாய்தா போச்சு. இன்று முதியோர் ஓய்வு தொகை,விதவை பென்ஷன் இத்யாதி கொடுக்க ஸ்மார்ட் கார்டு,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் இன்னபிற வருவாய்களை தேட வேண்டிய நிலை வந்துள்ளது.
எங்க ஊரை (சித்தூர்) அடுத்துள்ள கானிப்பாக்கத்தில் பந்தாவாய் ஸ்டேட் பாங்க் கிளை துவங்கினார்கள். (கூட்டம் கூடும் இடத்தில் நரிக்கொம்பு விற்பதை போல) . இன்று கணக்குகளின் எண்ணிக்கையை கூட்ட கு.ப.இருப்பு இல்லாமலே கணக்கு துவங்கி வருகிறார்கள். இதற்கெல்லாம் பல காரணங்கள் உண்டு.
அதில் முக்கியமானது தனிப்பட்ட லாவா தேவிகள்,கந்து வட்டி தான். வங்கியை அணுக முடியாத நிலையில் இருக்கும் மக்கள் தான் கந்து வட்டி கும்பலின் இலக்கு என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மாதம் 20 ஆயிரம் சம்பாதிக்கும் அரசு தலைமை ஆசிரியர்கள் கூட சாதாரணமாய் 5 வட்டிக்கு கடன் வாங்கிவருகிறார்கள்.
வரவு எட்டணா செலவு பத்தணா நிலைக்கு சமுதாயம் வந்து விட்ட நிலையில் எல்.ஐ.சி,ஹவுசிங் லோன் , பர்ஸனல் லோன்,க்ரெடிட் கார்டு ,ஸ்ரீராம் சிட்ஸ்,தனியார் சிட்ஸ்,எல்லாம் முடிந்து 5 வட்டி, விட்டால் 10 வட்டிக்கு வந்து விடுகின்றனர்.
பார்ப்பனர்கள் அசைவம் உண்ண ஆரம்பித்த பிறகு ஆட்டுக்கறி,மாட்டுக்கறி விலை கூடி விட்டது போலவே அரசு ஊழியர்கள் 5 வட்டிக்கு சித்தமாகிவிட்டதால் 10 வட்டி நியாய வட்டியாகி விட்டது.
இதற்கெல்லாம் சொல்யூஷன் 2 தான்:
வங்கிகள் கந்து வட்டிக் காரர்களை காப்பியடிக்க வேண்டும். சிறு வியாபாரிகளுக்கு டெய்லி லோன் தரவேண்டும். (தினசரி கலெக்ஷன் வாங்க வேண்டியிருப்பதால் சர்வீஸ் சார்ஜை கூட்டி வட்டி போடலாம்) , அதே போல் மார்க்கெட்,பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் காலையில் கடன் கொடுத்து ,மாலையில் வாங்கலாம். டுபாகூர் தொழிலதிபர்களுக்கும், திவாலா பார்ட்டிகளான அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் கடன் கொட்டிக் கொடுத்து கோர்ட்டுக்கு அலைந்ததில் என்ன சாதித்தார்கள். ஒரு தடவை மாற்றி யோசியுங்கப்பா!
இந்த ஐடியாவை பின்பற்ற விரும்பும் வங்கிகள் எனக்கு கன்ஸல்ட் ஃபீஸாக ரூ.1 தரவேண்டியிருக்கும்.