திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.
வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.
ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.
ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் (இன்னாள் முதல்வர்)ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.
அவுசாரி என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.
"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன்..சி.கே.வோட அரசியல் எதிரிகள் எல்லாம் என் நண்பர்கள்.. இது சரியா வருமா?"
" அடட... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"
உள்ளூற உதறல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன ஒரு சங்கடம் என்றால் எதிர்கட்சி, சமீபத்தில் தான் கொலை வழக்கு,கடப்பா சிறை வாசம் எல்லாம் நடந்திருந்தது.. இந்த மாதிரி சமயத்தில் ஊர் விவகாரத்தில் யாராவது உதவுவார்களா என்றும் சந்தேகம்.
இருந்தாலும் உடனே எங்கள் ஆந்திரபிரபா மேனேஜர் மோகனுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். எங்கள் எம்.டி.யும் காங்கிரஸ் காரர்தான். தற்சமயம் காங்கிரஸ் எம்.எல்.ஏ வாகவும் இருக்கிறார். எனவே அவர் திருப்பதியிலிருந்து சரியாக ஒன்னரை மணி நேரத்தில் கட்டமஞ்சியில் வந்து இறங்கினார் எங்கள் மேனேஜர். நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம்.
(மீதி அடுத்த பதிவில்)