Friday, February 22, 2008

வாழ்க்கையில் மாற்றவே முடியாத ஒரு குரூர விதி

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
தோல்வியுற்ற மனிதரெல்லாம் முட்டாள்களில்லை

என்பது சந்திரபாபு திரைப்பட பாடல் வரி. ஆனால் யதார்த்தத்தில் ஆராய்ந்து பார்க்கும்போது வெற்றி பெற்ற மனிதரெல்லாம் முட்டாள்களில்லை என்பது தெரியவரும்.

வாழ்க்கையில் மாற்றவே முடியாத ஒரு குரூர விதியிருக்கிறது.

எதையாவது பெற வேண்டுமானால் எதையாவது (அதற்கு சமமானதை) இழந்து தான் ஆக வேண்டும்.

எல்லாவற்றையும் இழக்க துணிந்து விட்டால் எல்லாவற்றையும் பெறலாம்.

எதையும் இழக்க மாட்டேன் என்று எழுதி ரெட் இங்கில் அண்டர்லைன் செய்து வைத்து கொண்டு வாழ்ந்தால் ஒரு ....ம் பெற முடியாது.

வெற்றி பெற்றவன் சில சமயம் முட்டாளாக கூட இருக்கலாம். ஆனால் அறிவாளி இழக்க துணியாததை அவன் இழக்க துணிந்து விட்டான் என்பதால் தான் அவன் வென்றான்.

தோல்வியுற்றவன் சிலசமயம் அறிவாளியாக கூட இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு தடையாக பல அம்சங்கள் அவனில் இருக்கும்.


வெற்றி தோல்விக்கெல்லாம் அர்த்தம் வேறு.

பெரியார் சீடர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிள்ளை பெற்றால் அது தோல்வி.

ஆத்திக நண்பர் ஒருவர் விஞ்ஞான முறைப்படி சோதனைக்குழாய் குழந்தை பெற்றுக் கொண்டால் அது அவருக்கு உறுத்தலை தான் தரும்.

வெற்றி தோல்விகள் என்பது இடம்,பொருள்,ஏவலை பொறுத்து தலை கீழாய் மாறிவிடும். நான் எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பற்றி பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரசங்கம் செய்யாது வேறு வேலையே கூடாது என்று வாழ்ந்தேன். இது என் பார்வையில் வெற்றி.

இன்று என் சபதத்தை கை விட்டு தினத்தந்தியில் வேலை செய்கிறேன். இது மக்கள் பார்வையில் வெற்றி. என் பார்வையில்?