"டேய் சோமு ! பக்கத்து விட்டு பரிமளா கிட்டே போய் 2 தக்காளி வாங்கிகிட்டு வாடா " என்றாள் அம்மா. "சே ! பத்தாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு சொல்ல வேண்டிய வேலையா இது" என்று திட்டிக்கொண்டே புறப்பட்டேன்.
பரிமளாவுக்கு வயது 30க்கு மேல் கல்யாணம் ஆகவில்லை. தெருக்கதவு திறந்திருக்க உள்ளே நுழைந்தேன். பரிமளா குளித்து விட்டு பாவாடையை மார்பு வரை கட்டிக்கொண்டு டர்க்கி டவலால் தலை துவட்டிக் கொண்டிருந்தாள். "செமை கட்டை" என்ற வார்த்தை மூளையில் ஸ்பர்க்கியது. கஷ்டப்பட்டு அதை ஃபேட் செய்து தரையைப் பார்த்துக் கொண்டே "அம்மா 2 தக்காளி வாங்கிகிட்டு வரச்சொன்னாங்க என்றேன்.
பரிமளா காய்கறி கூடையில் தக்காளியை தேடிக் கொண்டிருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.காதோரம் சூடு பரவியது. வாய் உலர்ந்து விட்டது. எப்போதோ பார்த்த பாடாவதி படம் எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது.
அந்த நேரம் பார்த்து பாழாய் போன பரிமளாவின் அம்மா வந்து விட்டாள். என்னையும் பரிமளாவையும் ஒரு பார்வை பார்த்தவள் " சீ..சீ..! என்னடி இது வயசு பையன் முன்னாடி இந்த கோலத்தில " என்று சீறினாள்.
பரிமளா, " அட போம்மா எனக்கே காலாகாலத்துல கல்யாணம் நடந்திருந்தா சோமு வயசுல புள்ளை யிருந்திருப்பான்" என்றாள்.
யாரோ என்னை கன்னத்தில் பளார் என்று அறைந்த மாதிரி இருந்தது