Friday, February 8, 2008

செவ் தோஷ ஜாதகர் சுத்தஜாதகரை மணந்தால் மரணமா?

தோஷங்கள்:
தோஷங்களில் மிக முக்கியமானவை செவ்வாய்,நாக தோஷங்களாகும். செவ்வாய் தோஷத்தை தெலுங்கர் குஜ தோஷம் என்றும், ஆங்கிலத்தில் மங்கலிக் என்றும் குறிப்பிடுகிறார்கள். நாக தோஷத்தை சர்ப்ப தோஷம் என்றும் கூறுவர்.

செவ்வாய் தோஷம்:
ஜனன ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு எண்ணும்போது செவ்வாய்   2, 4, 7, 8, 12 ல் செவ் இருப்பதை தோஷம் என்று சொல்கிறார்கள்.

பரிகாரம்:
தங்கள் உடல் நிலையை பொருத்து ரத்ததானம் செய்யவும்.

ச‌ர்ப்ப‌தோஷ‌ம்:

ஜனன ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு எண்ணும்போது ராகு அல்லது கேது 3,6,10,11,4,12 தவிர வேறெங்கு இருந்தாலும் அது சர்ப்ப‌ தோஷம்.

ப‌ரிகார‌ம்:
வெளிநாட்டு மொழி ஒன்றை க‌ற்க‌வும்

ம‌ர‌ண‌ம்:
தோஷ‌முள்ள‌வ‌ர்க‌ள் தோஷ‌மில்லாத‌வ‌ர்க‌ளை ம‌ண‌ந்தால் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌டும் என்ப‌தெல்லாம் ஓவ‌ர்.ம‌ர‌ண‌த்தை நிர்ண‌யிப்ப‌து அவ‌ர‌வ‌ர் ஜாத‌க‌ங்க‌ளே. ம‌ண‌க்கும் பெண்,அல்ல‌து ஆணின் ஜாத‌க‌த்தில் உள்ள‌ தோஷ‌ங்க‌ள் ம‌ட்டுமே ம‌ர‌ண‌த்தை த‌ந்து விடாது.


திரும‌ண‌ப்பொருத்த‌ங்க‌ள்:
திரும‌ண‌ப்பொருத்த‌ங்க‌ளை 3 முறைக‌ளில் பார்க்கிறார்க‌ள். 1.ஆண்,பெண் ஜாத‌க‌ங்க‌ளை வைத்து பார்ப்ப‌து 2.ஆண் பெண் ஜ‌ன்ம‌ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை வைத்து 3.ஆண்,பெண் பெய‌ர்க‌ளை வைத்து பார்ப்ப‌து.

இதில் முத‌ல் முறை அறிவிய‌ல் பூர்வ‌மான‌து. இதில் ஜாத‌க‌ங்க‌ளை பொருத்திப் பார்க்கும்போது குரு,சுக்கிர‌ ப‌ல‌ம் முக்கிய‌ம். ம‌றுதார‌ம் உள்ள‌தா என்றும் பார்க்க‌ வேண்டும்.தோஷ‌ங்க‌ள் இருந்தால் இருவ‌ருக்கும் இருக்க‌ வேண்டும். அல்ல‌து இருவ‌ருக்கும் இருக்க‌ கூடாது.(இது பெரிய‌வ‌ர்க‌ள் சொன்ன‌து.)

இர‌ண்டாவ‌து முறை 35 ச‌த‌வீத‌ம் அறிவிய‌ல் பூர்வ‌மான‌து.சாதார‌ண‌மாக‌ 10 பொருத்த‌ங்க‌ள் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. இதில் ர‌ஜ்ஜு,நாடி மிக‌ முக்கிய‌ம். ர‌ஜ்ஜு, நாடி உட்ப‌ட‌ பாதிக்கு மேற்ப‌ட்டால் திரும‌ண‌ம் செய்ய‌லாம் என்ப‌து பெரியோர் வாக்கு. என்னை பொருத்த‌வ‌ரை ஜாத‌ங்க‌ள் பொருந்தி,ர‌ஜ்ஜு,நாடி ம‌ட்டும் இருந்தாலும் போதுமான‌து.

மூன்றாவ‌து பெய‌ர்க‌ளை வைத்து பார்ப்ப‌து. அந்த‌ பெய‌ர்க‌ள் அவ‌ர‌வ‌ர் ஜாத‌க‌ப்ப‌டி வைக்க‌ப்ப‌ட்டிருந்தால‌ன்றி இந்த‌ முறை முட்டாள் த‌ன‌மான‌து. ஜாத‌க‌ பெய‌ர்க‌ளுக்கு பொருத்த‌ம் பார்க்கும் போது அது 35 ச‌த‌வீத‌ம் வ‌ரை ச‌ரியான‌தாகும். அவ்வாற‌ன்றி செல்ல‌ பெய‌ர்க‌ள்,அப்போதைக்க‌ப்போது வைத்து பார்க்கும் பெய‌ர்க‌ள் எல்லாம் 10 ந‌யா பைசாவுக்கு கூட‌ உத‌வாது.