மக்கள் ஆதரவு எனக்கு கிட்டிய தருணங்கள் மிக்ச்சிலதான். முதல் முதலில் போட்டியிட்ட கல்லூரி தேர்தல்களில் 468 வாக்குகள் பெற்றது நினைவிருக்கிறது. வாக்குப் பதிவு ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்கும் போது கல்லூரி ப்ரேயர் கிரவுண்டில் மைக்கில் பேச 5 நிமிடம் அவகாசம் தரப்பட்டது. அதுவரை வெற்றி இத்யாதியெல்லாம் என் மைண்டில் அறவே கிடையாது. ச்சும்மா அப்படி லொள்ளு பண்ணுவதற்காகவே நாமினேஷன் போட்டிருந்தேன்.அப்போதைய எம்.பி. வீட்டில் நீலப்படம் காட்டப்பட்டது, ஆடு ,கோழி,மது எல்லாம் பரிமாறப்பட்டது. ஆள் கடத்தல் சி.கே.பாபு வரை பஞ்சாயத்து எல்லாம் நடந்திருந்தது. நான் என்னவோ கல்லூரி கார்டனில் அனந்த சயனத்தில் படுத்த படி வாக்காளர்களை அழைத்து , மதித்து வந்தவர்களுக்கு மட்டுமே பாம்லெட் கொடுத்துக் கொண்டிருந்தேன். "எனக்கே போடுங்க" என்று கூட கேட்டதில்லை.
மைக்கை பிடித்தது தான் தாமதம். போடியம் உயரத்துக்கு நான் பார்வையாளர்களுக்கு தென்படுவது துர்லபம் என்று புரிந்து விட்டது. எனவே லொள்ளு செய்து மைக்கை தனியே நகர்த்த செய்து பிடித்து கொண்டு பேசினேன்.
அப்படி என்னதான் பேசினேன் என்றால் நினைவுக்கு வரும் பயிண்டுகளை பட்டியலிடுகிறேன்:
1. என்னடா வெய்ய காலத்துல 4 நாள்,குளிர் காலத்துல 4 நாள் தான் காலேஜுக்கு வந்திருப்பான் .இவெனெல்லாம் எலக்ஷன்ல நிக்கறதான்னு நினச்சுராதிங்க ,க்ளாஸுக்கு வரலன்னா என்ன கார்டன்வரைக்குமாவது வந்திருக்கேன்ல்
2.எனக்கு ஓட்டு போட்டா உங்களுக்கு அதை செய்வேன் இதை செய்வேன்னு டுமீல் விடமாட்டேன். பார்ப்போம் ஜெயிக்க வைங்க ..என்ன செய்ய முடியுது பார்த்து நிச்சயமா செய்யறேன். ஒரு ..ம் செய்ய முடியாதுனு தெரிஞ்சிட்டா கழண்டுக்கறேன்
ஆனால் பாருங்க 468 வோட்டு. வருடம் 1987. முதல் மாலை இன்றைய புகழ்பெற்ற ஆடிட்டர் ஆர்.ரமேஷ் பாபு. முடிவு?
3 வோட்டுல ..சத்தியமா 3 வோட்டுல தோத்துட்டன்.