Friday, February 15, 2008

நீதிபதிகளுக்கு கடிதம் எழுதிய அனுபவம் உண்டா?


எனக்கு நிறையவே உண்டு. நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையே ரிட் மனுவாக ஸ்வீகரித்து விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு என்பதை நினைவில் வைத்து இதை படிக்கவும். எங்கள் முன்னாள் முதல்வர் சந்திர பாபுவுக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை நான் அனுப்பிய கதை உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். தபால் செலவுக்காக அனுப்பிய எம்.ஓவை வாங்கிக் கொண்டது, நான் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடுத்தது யாவும் நீங்கள் அறிந்தவையே என்ற எண்ணத்தில் தவளைப் பாய்ச்சலில் தாண்டிச் செல்கிறேன். அறியாதவர்கள் சிரமம் பார்க்காது இந்த வலைப்பூவில் தேடி ஒரு பாட்டம் படித்து விடுங்கள். இந்திய சிகப்பு நாடாத் தனத்தின் சிகரம் இது.

நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடுத்த செய்தியை பத்திரிக்கைகள் மூலம் அறிந்தவுடனே முதல்வரின் அலுவலகம் 4 கால்களையும் தூக்கி விட்டது. தங்கள் ஆலோசனைகளை உரிய வகையில் உபயோகித்து கொள்கிறோம் என்று கடிதம் எழுதிவிட்டது.

என் நியாய போராட்டம் தொடர்ந்தது. மாவட்ட நுகர்வோர் மன்ற தலைவர் என் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார். அவர் கூறிய காரணம் இது பெயிடட் சர்வீஸ் அல்ல , டிஃபெக்டிவ் சர்வீசும் தென்படவில்லை. அடப்பாவிகளே ! பதில் தர தபால் செலவுக்கு நான் அனுப்பிய எம்.ஓ.வை முதல்வர் அலுவலகம் பெற்றுக்கொண்ட ரசீது டேபிள் மேலிருக்கிறது பெயிடட் சர்வீஸ் அல்ல என்று ஒரு நீதிபதி கூறுகிறார். சரி ஒழியட்டும், ஒரு தீப்பெட்டி வாங்கினால் கூட வரியோடு சேர்த்து தானே கடைக்காரனுக்கு 50 காசு கொடுக்கிறேன், நான் நுகர்வோன் இல்லையா?

அப்புறம் வந்த பாயிண்டு தான் தூள் பாயிண்டு.. அவருக்கு டிஃபெக்டிவ் சர்வீஸ் ஏதும் தெரியவில்லையாம். அட படு பாவிகளே ! 1997 நவம்பர் முதல் அனுப்பிய கடிதங்களுக்கு 2003 ஏப்ரல் வரை பதில் எழுதாதது டிஃபெக்டிவ் சர்வீஸ் அல்லவா?
வ‌ழ‌க்கு த‌ள்ளுப‌டியான‌து. மாநில‌ நுக‌ர்வோர் ம‌ன்ற‌த்துக்கு அப்பீல் செய்தேன். கீழ் கோர்ட்டில் கொடுத்த‌ தீர்ப்பின் ஒரிஜின‌ல் அனுப்ப‌ச்சொல்லி தாக்கீது அனுப்பினார்க‌ள். உட‌னே அனுப்பி வைத்தேன் . அவ்வ‌ள‌வுதான் நாளிதுவ‌ரை அந்த‌ மாநில‌ நுக‌ர்வோர் ம‌ன்றம் இருக்கிற‌தா? அல்ல‌து த‌னியார் ம‌ய‌ யுக‌ம் என்ற‌ கார‌ண‌த்தால் ஏதாவ‌து காப‌ரே மைய‌மாக‌ மாற்றிவிட்ட‌ன‌ரா? கூட‌ புரிய‌வில்லை. நான் "காண்டு"மாதிரி தொட‌ர்ந்து ரிமைண்ட‌ர்க‌ள் அனுப்பிக் கொண்டே இருந்தேன். ச‌ரி தேசீய‌ ‌ நுக‌ர்வோர் ம‌ன்றத்துக்கு அப்பீல் செய்தேன் அதுவும் இதே இழ‌வுதான்.


இதைய‌டுத்து தான் உய‌ர்நீதிம‌ன்ற‌ நீதிப‌திக‌ளுக்கு க‌டித‌ம் எழுதும் ஐடியா வ‌ந்த‌து. அந்த‌ அனுப‌வ‌ங்க‌ளை அடுத்த‌ ப‌திவில் கிழிப்போம்.