Monday, February 4, 2008

முதல்வர் அலுவலகம் ஆப்பரேஷன் இந்தியாவை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்வதாய் எனக்கு எழுதிய கடிதம் தான் இது.


அகில உலகமே தலையில் வைத்து கொண்டாடிய அன்றைய ஆந்திர முதல்வர் (ச)தந்திர பாபு நாயுடுவுக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை 1997 முதல் தொடர்ந்து அனுப்பி வந்தேன். 2002 ஏப்ரல் வரை பதிலே இல்லை. கடுப்பாகி மக்கள் எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத ஸ்டாம்புக்கு கூட பதில் இல்லாத திவாலா அரசு உங்கள் அரசு என்று தெரியும். எனவே இந்த 10 ரூ எம்.ஓ வை வாங்கிக்கொண்டாவது பதில் தாருங்கள் என்று எம்.ஓ அனுப்பினேன். அதை வாங்கிகொண்டும் முதல்வர் அலுவலகம் மவுனத்தையே பதிலாக்கியது.

இந்த விஷயத்தை அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்தவரும் ,இன்று முதல்வராக இருப்பவருமான ஒய்.எஸ் .ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். ஜனாதிபதிக்கும் புகார் செய்து அதன் பிரதியை முதல்வர் அலுவலகத்துக்கு ஃபாக்ஸ் மூலம் அனுப்பினேன். அதன் மீது முதல்வரின் செயலாளர் எழுதிய ஃபுட்நோட் இது. செயலாளர் கோரியபடியே மீண்டும் என் திட்டத்தை ஆந்திர முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பினேன். மீண்டும் மவுனம் தொடர்ந்தது. இதனால் மேலும் கடுப்பாகி பதில் தர போஸ்டல் ஸ்டாம்புக்காக அனுப்பிய எம்.ஓ வை வாங்கிக்கொண்டதால் இது பெய்டட் சர்வீஸ் ஆகிவிட்ட காரணத்தால் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் முதல்வர் அலுவலகம் மீது புகார் செய்தேன். இந்த செய்தி எல்லா செய்தித்தாள்களிலும் பிரசுரமாகிவிட்டது.

பத்திரிக்கைகள் மூலம் விஷயமறிந்த முதல்வர் அலுவலகம் ஆப்பரேஷன் இந்தியாவை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்வதாய் எனக்கு எழுதிய கடிதம் தான் இது.