Sunday, February 3, 2008

ரஜினி பெட்டர். காரணம் ரஜினி தம் மகளை நடிகையாக்கவில்லை.


அந்த நாள் முதல் இந்த நாள் வரை நான் ஒரே விதமாகத்தான் யோசிக்கிறேன், முடிவெடுக்கிறேன்,செயல் படுத்துகிறேன். அன்று அவை யாவும் படு தோல்வியுற்றன. இன்றோ வெற்றி என் வீட்டுக் கதவை தட்டியபடியே இருக்கிறது. ஒரு நாளில்லை ஒரு நாள் நானும் லைம் லைட்டுக்கு வருவேன்.இன்றைய பெரிய மனிதர்களை சந்திக்கு இழுப்பேன்.

அது ரஜினியாகட்டும்,சிரஞ்சீவியாகட்டும். சுஜாதாவாகட்டும்,பாலகுமாரனாகட்டும். வி.ஐ.பி.க்களை விமர்சிப்பது ஒரு மனவியாதி,பிரபலமாக ஒரு குறுக்கு வழி என்றெல்லாம் ஆர்குட்டில் கூட பலர் என்னை விமர்சித்தார்கள்.

என்னை பொருத்தவரை என் கையில் இன்றிருப்பது கப்பறையாகவேகூட இருக்கலாம். அவர்கள் தலைகளில் இருப்பது கிரீடங்களாகவே கூட இருக்கலாம். இந்த கப்பறைக்கான காரணம் என் கடந்த காலத்தில் இருக்கிறது. இவர்களின் கிரீடங்களுக்கான காரணமும் கடந்தகாலத்தில் தான் இருக்கிறது. என் இருண்ட காலத்தில் என்னை நானே வெளுத்து சுத்திகரித்துக்கொண்டுவிட்டேன். இவர்களோ லைம் லைட்டின் வெளிச்சத்தில் அழுக்காகிவிட்டார்கள்.

என் அளவு கோல் ரொம்ப சிம்பிள். வெற்றிக்கும் திறமைக்கும் தொடர்பு கிடையாது. இந்த நவீனயுகத்தில் வெற்றி என்பது ஒரு விபத்து மாதிரி. நம்மை விட தகுதி படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் ஒரு துண்டு பீடிக்கு கூட கதியில்லாமல் இருப்பார்கள். இதை மறந்து என் வெற்றிக்கு காரணம் என் தகுதி,உழைப்பு என்று ஜல்லியடிப்பது மதியீனம்.

ரஜினியை மக்கள் அங்கீகரித்துவிட்டார்கள். இதற்கு நன்றி தெரிவிக்க ரஜினி செய்ய வேண்டியது என்ன? எந்த கட்சிக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொல்வதா ? நிச்சயமாக இல்லை. ரஜினியை ரஜினியாக்கி உய்ரத்தியது சினிமா. ஆனால் அந்த சினிமாத்துறைக்கு ரஜினியால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர் நினைத்தால்

சினிமாவுக்கு ஏதோ செய்யவேண்டும் என்ற தவிப்பில் இருப்பவர்களுக்கு உதவலாம். இதுஒன்றுதான் ரஜினி செய்யக் கூடியது. ஆனால் அவரோ மீண்டும் மீண்டும் மற்றொரு சிவாஜிக்கு முயற்சி செய்தபடி சர்வைவல் பிரச்சினைகளிலேயே மூழ்கியிருக்கிறார்.

சிரஞ்சீவி பிழைப்பும் இதுதான். அவருக்கு வாழ்வு தந்த சினிமாவுக்கு அவரால் ஒரு இழவும் செய்ய முடியாது. அவர் தகுதி அப்படிப்பட்டது. வென்றவன் அதிர்ஷ்டத்தால் வெல்கிறான். திறமையால் வெல்ல முடியாதவர்களுக்கு அவன் வழி காட்ட வேண்டும் அதுதான் அவன் அவனை வாழவைத்த‌ துறைக்கு காட்டும் நன்றி.

இதை என் வாழ்வில் சிறுவயதிலிருந்தே கடைபிடித்து வருகிறேண். கடை பிடிப்பேன். இதனால் என் கையில் உள்ள கப்பறை கிரீடமாக மாறும். இவர்கள் அதை கடை பிடிப்பதில்லை. எனவே இவர்களின் கிரீடங்கள் கப்பறையாக மாறுவது உறுதி. ரஜினியுடன் சிரஞ்சீவியை ஒப்பிட்டால் ரஜினி பெட்டர். காரணம் ரஜினி தம் மகளை நடிகையாக்கவில்லை. அவரது காதலை அங்கீகரித்து சைடு கொடுத்து பெரியமனிதராகிவிட்டார். ஆனால் சிரஞ்சீவி தன் மகனை திணித்துவிட்டார். அதுவும் தன் ஜிராக்ஸ் பிரதியாக. மகள் விஷயத்தில் தலைப்பு செய்தியாகிவிட்டார்.