Monday, December 10, 2007

மோடி பிரதமராக வேண்டும் /இது ஆ.வி. ஆசை

மோடி பிரதமராக வேண்டும் /இது ஆ.வி. ஆசை
ஆம். ஆனந்த விகடனில் குஜராத் தேர்தல்கள் பற்றிய கட்டுரையில் ஆ.வி. பார்ப்பணீயத்துக்கே உரிய நாசூக்குடன், சொல்லாமலே சொல்லும் வகையில் தன் தணியாத ஆசையை தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடியோ அவர் கட்சியினரோ கூட தயாரிக்க முடியாத அளவில், ஏறக்குறைய துண்டு பிரசுர ரேஞ்சுக்கு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மோடி இந்த முறை ஜெயித்து விட்டால் பாஜக அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட அறிவிக்கப்பட்டுவிடுவார் என்று அச்சம்( ஆசை) தெரிவித்துள்ளது.மோடியின் ஆட்சியில் நடந்த வளர்ச்சிப் பணிகளை கர்ம சிரத்தையுடன் பட்டியலிட்டிருக்கிறது. வளர்ச்சி பணிகள்தாம் முக்கியம் என்று முடிவெடுத்து விட்டால்...

கேவலம் பார்ப்பணர்களை மட்டும் வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்து தேவாலயங்களில் தூசு படிந்து கொண்டிருக்கும் தங்கத்தை அமெரிக்கா காலடியில் கொட்டி விற்றாலும் வளர்ச்சி பணிகள் நடக்கும் தான்.
விற்றுவிட‌லாமா த‌ங்க‌த்தை?


இந்திய‌ நாட்டு ச‌கோதிரிக‌ளின் அழகுக்கு அகில‌மே அடிப‌ணியும் தான். அவ‌ர்க‌ளை விற்றால் கூட‌ வ‌ள‌ர்ச்சி ப‌ணிக‌ள் ந‌ட‌க்கும் தான்..
விற்றுவிட‌லாமா ச‌கோதிரிக‌ளை?

என்ன‌டா இது த‌ங்க‌த்த‌மிழ்நாட்டில் த‌மிழுக்கு வ‌ந்த‌ சோத‌னை?

ஒரு மாநிலத்தின் வ‌ள‌ர்ச்சி,முன்னேற்ற‌ம் எல்லாம் விக‌ட‌ன் க்ரூப் ப‌த்திரிக்கைக‌ளின் ச‌ர்க்குலேஷ‌னா ? பாரத தேசத்து,த‌மிழ‌க‌த்து,ச‌கோதிரிக‌ளை நிர்வாண‌மாக‌வோ, அரை குறையாக‌வோ அச்சிட்டாலும் போதுமான‌து. ச‌ர்க்குலேஷ‌ன் எகிறும்.

ஒவ்வொரு முஸ்லீமும் இந்த‌ நாட்டின் பிர‌ஜை, முஸ்லீம் சகோதரனின் ர‌த்தத்தில் தோய்ந்த அபிவிருத்தியை அனுபவிப்பதை விட க‌ட்டை வ‌ண்டியில் ப‌ய‌ணிப்ப‌து மேல். அபிவிருத்திக்காக‌ என் ச‌கோத‌ர‌னை, ச‌கோதிரியை விட்டுக் கொடுப்ப‌து க‌டைந்தெடுத்த‌ க‌ய‌வாளித்த‌ன‌ம்