Saturday, December 1, 2007

அரசியலில் கொலைமுயற்சிகள் பழிவாங்கல்களுக்கு ஒரு உதாரணம்

அரசியலில் கொலைமுயற்சிகள் பழிவாங்கல்களுக்கு ஒரு உதாரணம்
சித்தூர் 26 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத் தேர்தல்


ஆந்திரமாநிலம்,சித்தூர் வேலூரை அடுத்துள்ளதால் தமிழ் வாசகர்களும் தெரிந்து கொண்டு உஷாராக வந்து போகட்டுமே என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவை வைக்கிறேன். படித்து மகிழுங்கள்.

சித்தூர் ஒரு காலத்தில் "மலைமேடு" ராமசந்திரன் என்ற ஒரே தாதாவின் பிடியில் இருந்தது. அவர் தமிழர்,வன்னியர் வகுப்பை சேர்ந்தவர். ஒரு நிலையில் அவர்,அவரது சிஷ்ய கோடிகளின் லொள்ளு தாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அவர் வெடி குண்டு வீசப்பட்டு, வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அவர் உயிருடன் இருந்த போதே கல்லூரி தேர்தல்கள் இத்யாதியில் அவரது ஏக சக்ராதிபத்யத்தை இன்றைய முன்னாள் எம்.எல்.ஏ. சி.கே.பாபு கேள்விக்குள்ளாக்கி வந்தார். இது காரணமாய் சி.கே. மீது கொலை முயற்சியும் நடந்ததுண்டு. இதனால் ராமசந்திராவின் மறைவுக்கு பிறகு தன்னாலேயே சி.கே வின் பெயர் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் முதலில் சுயேச்சையாகவும்,பின்பு காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு தொடர்ந்து எம்.எல்.ஏ வாக வென்று வந்தார்.

இந்நிலையில் மூன்றரை வருடங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் சி.கே சொற்பமான வாக்கு வித்யாசத்தில் தோற்கடிக்கப் பட்டார்.(இதற்கு பல காரணங்கள் உண்டு .முழு விவரங்களுக்கு/www.chittoortigerckbabu.blogspot.com./என்ற‌ வலைப்பதிவை படியுங்கள். அதையடுத்து நகராட்சி தேர்தல்கள் வந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைம தேர்தலில் வெற்றிக்கான முழு பொறுப்பையும்
சி.கே.பாபுவிற்கு தந்தது. சி.கே.களமிறங்கினார்.((இந்த தேர்தல்களில் தெலுங்கு தேசம் ஒற்றைப்படையிலான வார்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது வேறு விஷயம்)

சித்தூர் காஜி ஸ்கூல் வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தது. சி.கே.வின் ஒன்றுவிட்ட சகோதரர் புருஷோத்தம் ரெட்டி காங்கிரஸ் சார்பிலும், பார்த்தசாரதி என்பவர் தெலுகு தேசம் சார்பிலும் களத்திலிருந்தனர்.

ம‌திய‌ம் ரிக்கிங் ந‌ட‌ப்ப‌தாய் பார்த்த‌சார‌தி தெ.தே.எம்.பி ஆதிகேச‌வுலுக்கு போன் போட்டார். காங்கிர‌ஸ் தொண்ட‌ர்க‌ள் சி.கே.வுக்கு த‌க‌வ‌ல் கொடுத்த‌ன‌ர். ஆதிகேச‌வுலு பூத்துக்குள் நுழைந்தார். அப்போது ஏற்ப‌ட்ட‌ த‌ள்ளுமுள்ளுவில் ஓட்டிங் மிஷின் ஒன்று கீழே விழுந்து உடைந்த‌து. அடுத்த‌ நிமிட‌ம் சி.கே.ச‌ம்ப‌வ‌ இட‌த்துக்கு வ‌ந்து விட்டார். ஸ்கூல் கேட்டுக்கு உட்புற‌ம் ஆதிகேச‌வுலு/கேட்டுக்கு வெளியே சி.கே. அப்போது இருவ‌ருக்கும் க‌டுமையான‌ வாக்கு வாத‌ம் ஏற்ப‌ட்ட‌து.

அந்த‌ ச‌ம‌ய‌ம் இதில் சி.கே.வின் ஒன்றுவிட்ட சகோதரர் புருஷோத்தம் ரெட்டி ஓரிரு வார்த்தைக‌ளை விட்ட‌தாக‌வும், அதில் ஆதிகேச‌வுலுவின் ம‌ன‌ம் புண்ப‌ட்டுவிட்ட‌தாக‌வும் த‌க‌வ‌ல். தேர்த‌ல் முடிந்த‌ சில‌ நாட்க‌ளிலேயே சி.கே.வின் ஒன்றுவிட்ட சகோதரர் புருஷோத்தம் ரெட்டிமீது பெட்ரோல் குண்டு வீச‌ப்ப‌ட்ட‌து. இது ந‌ட‌ந்த அதே நாள் மாலை த‌லைப்பில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ 26 ஆவ‌து வார்டு க‌வுன்ஸில‌ர் க‌ட்டாரி மோக‌ன் மீது கொலை முய‌ற்சி ந‌ட‌ந்த‌து.

சி.கே.வின் ஒன்றுவிட்ட சகோதரர் புருஷோத்தம் ரெட்டி மீது பெட்ரோல் குண்டு வீச‌ப்ப‌ட்ட‌த‌ன் பிண்ண‌னியில் க‌ட்டாரி மோக‌ன் இருந்த‌தாய் புருஷோத்த‌ம் ரெட்டி த‌ர‌ப்பு எண்ணியிருக்க‌லாம். கொலை முய‌ற்சிக்குள்ளான‌ க‌ட்டாரி மோக‌ன் ஆஸ்ப‌த்திரியிலிருந்து அப்ப‌டியே த‌லைம‌றைவாகிவிட்டார்.

சில‌மாத‌ங்க‌ள் க‌ழித்து சி.கே.மீது துப்பாக்கி ஏந்திய‌ வாட‌கை கொலையாளிக‌ள் துப்பாக்கி
சூடு ந‌ட‌த்தின‌ர். இதில் 3 உயிர்க‌ள் ப‌லியான‌து. சி.கே அதிச‌ய‌மாக‌ உயிர் த‌ப்பினார். க‌ட்டாரி மோக‌ன் இந்த‌ கொலை முய‌ற்சி வ‌ழ‌க்கில் முத‌ல் குற்ற‌வாளியாக‌ சேர்க்க‌ப்ப‌ட்டுள்ளார். சுருக்க‌மாக‌ கூறினால்:
புருஷோத்த‌ம் ரெட்டி ஆதிகேச‌வுலுவை பேச்சால் புண்ப‌டுத்தினார். க‌ட்டாரி மோக‌ன் ஜாதி அபிமானத்தாலும்,கட்சி அபிமானத்தாலும் ஆதிகேச‌வுலு சார்பில் புருஷோத்த‌ம் ரெட்டி மீது பெட்ரோல் குண்டு வீச ஏற்பாடு செய்தார். இத‌ற்கு ப‌ழிவாங்க‌ மோக‌ன் மீது கொலை முய‌ற்சி ந‌ட‌ந்த‌து. அத‌ற்கு ப‌ழி வாங்க‌ சி.கே வை கொல்ல‌ முய‌ற்சி ந‌ட‌ந்த‌து. தொட‌ர்ந்து 3 கூட்ட‌ங்க‌ளுக்கு வ‌ராத‌தால் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் மோக‌னின் ப‌த‌வியை ப‌றித்த‌து. நாளை அங்கு தேர்த‌ல் ந‌ட‌க்க‌ விருக்கிற‌து.


நாளை ந‌ட‌ப்ப‌தை ஆரே அறிவார் ப‌ராப‌ர‌மே !