Saturday, December 29, 2007

போதும் போதும் இப்பிறவி

அம்மா!
இதுவும் உந்தன் விதியென்றே விழுங்கி வைத்தேன் வருந்தாதே
காளி யாகி என் உதிரம் நாளும் பொழுதும் அருந்தாதே

மனிதன் என்றே பிறந்திட்டேன்
விதிக்கு புறம்பாய் சுய நலமே புவிமிசை நானே துறந்திட்டேன்

கலைகள் யாவிலும் சிறந்திட்டேன்
விதியின் ரகசியம் அறிந்திட்டேன்

செவிடர் காதில் சங்கெனவே ஆனது எந்தன் தமிழ் பேச்சே
பிணப்புகை யானது என் மூச்சே

தொண்டை வறள பேசிவிட்டேன்
பேனா முனையும் தேய எழுதிட்டேன்

மாற்றம் தானே வரவில்லை
ஏமாற்றம் இன்னும் மாறவில்லை

யாதே செய்வேன் புவனேசி
இனியேனும் நீயே எனை யோசி


பாவியர் பலரும் புவிமிசையே பவிசாய் தானே வாழ்ந்தாச்சு
என் நிலை தானே தாழ்ந்தாச்சு

உயிர்கள் செய்வது இரு வேலை
கொல்வது அன்றேல் சாவது தான்
கொன்றால் கருமம் தொடர்ந்து வரும்
மீண்டும் மீன்டும் பிறவி தரும்

மனித பிறவி அற்பம் என்று அறிந்தேன் புரிந்தேன்
அறிந்ததனால் விட்டேன் கொல்வதை அம்மாவே
மக்கள் என்னை கொல்லட்டும்
என் கருமம் யாவும் தொலையட்டும்
நித்தம் தேசம் முன்னேற எழுதி வந்த என கரத்தை
அரிவாள் கொண்டே வெட்டட்டும்
அனுதினம் அகில மாந்தரெலாம் உயர்ந்திட உழைத்த என் உடலை
நெருப்பிலிட்டு மகிழட்டும்
வருந்தேன் திருந்தேன் அம்மாவே
போதும் போதும் இப்பிறவி
வற்றாதெந்தன் தமிழருவி