Thursday, December 13, 2007

லிவிங் டு கெதர்

லிவிங் டு கெதர் பற்றி பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்யுமத்தனை சிகரத்துக்கு தமிழர்கள் உயர்ந்துள்ளது மனதை குளிர வைக்கிறது. இருந்தாலும் ஏதோ ஒரு சமயம் ஒரு பெண் எழுத்தாளர் குறிப்பிட்டதை போல நிர்வாணத்தை மறைக்காது முகத்தை மறைத்து என்ன பயன். எனவே தான் இந்த விஷயம் பற்றிய என் கருத்தையும் பகிரங்கப்படுத்துகிறேன்.


உடன் உறைதலில் ஆணுக்கு பொறுப்பு குறைகிறது.பெண்ணுக்கு ரிஸ்க் அதிகரிக்கரிக்கிறது அவ்வளவே..அதே சமயம் அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகிறது.

பெற்றோர் இருந்தே குழந்தைகளின் பாதுகாப்பு கேலிக்கூத்தாக உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாது.



இன்றுள்ள‌ உல‌க‌ம‌ய‌மாக்க‌ம்,த‌னியார் ம‌ய‌மாக்க‌ம்,நுக‌ர்வோர் க‌லாச்சார‌த்தில் பெற்ற‌ குழ‌ந்தையை ப‌ந்த‌ய‌க் குதிரையாக்கி அதிலும் காசு பார்க்கும் த‌ன்மை பெற்றோரில் அதிக‌ரித்து வ‌ருகிற‌து.

என் வ‌ய‌து 40 தான். நான் 10 ஆம் வ‌குப்பு ப‌டித்த‌ கால‌த்தில் என‌க்கு 70 பெர்செண்ட். நான் ஸ்கூல் செக‌ண்ட். என்னைவிட‌ ஒன்றோ இர‌ண்டோ ச‌த‌வீத‌ம் அதிக‌ம் பெற்ற‌ தியாக‌ராஜ‌ன் ஸ்கூல் ஃப‌ர்ஸ்ட். இன்று 100 பெர்சென்ட் பார்ட்டியே ஸ்கூலுக்கு ரெண்டோ,மூன்றோ உள்ள‌ நிலை இருக்கிற‌து.

என் அப்பா ட்ர‌ஷ‌ரீஸ் அண்ட் அக்க‌வுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த‌வ‌ர் என்ப‌தால் அட‌க்க‌டி மாற்ற‌ல் ஆகிய‌வாறே இருப்பார். ஒவ்வொரு வ‌ருட‌ம் சொந்த‌ ஊர் வ‌ரும்போதும் ப‌க்க‌த்து வீட்டு பைய‌னை கேட்ப‌து போல் த‌ம்பி! இப்ப‌ எத்தனாம் க்ளாஸ் ப‌டிக்கிறே என்றுதான் கேட்பார்.

இப்போது ப்ரிகேஜி ப‌டிக்கும் குழ‌ந்தை ச‌ரியாக‌ ப‌டிக்க‌வில்லை என்று தாய்மார்க‌ள் ஜோதிட‌ம் கேட்க‌ வ‌ந்துவிடுகிறார்க‌ள்

இந்த‌ நிலையில் தாலி,திரும‌ண‌ம் இல்லாது உட‌னுறையும் பெற்றோர் பிரிந்துவிட்டால் ,பிரிந்த‌வ‌ர்க‌ள் ம‌றும‌ண‌ம் செய்து கொண்டுவிட்டால் அந்த‌ குழ‌ந்தைக‌ளின் க‌தி அதோ க‌திதான்.

தாலி க‌ட்டி க‌ல்யாண‌த்தில் ம‌ட்டும் என்ன‌ வாழுது என்று நீங்க‌ள் கேட்டு விட‌க்கூடாது என்று இத்த‌னை சொன்னேனே த‌விர‌ வேலி என்ப‌தே "தாவு !" என்று ம‌றைமுக‌மாய் தூண்டுவ‌து தான். தாலி ,உண்மையிலேயே வேலியாக‌ இருப்ப‌தானால் தின‌த்த‌ந்தியில் க‌ள்ள‌க்காத‌ல் எதிரொலிக‌ள் கேட்காத‌ல்ல‌வா?