Saturday, December 29, 2007

பெனாசிர் புட்டோ மரணம் : பாவத்தின் சம்பளம்

பாவத்தின் சம்பளம் மரணம் என்பது விவிலிய வாக்கு. பெனாசிர் புட்டோவின் மரணத்தை பாவத்தின் சம்பளமாகத்தான் கூற வேண்டும். அவர் தம் மதத்துக்கோ,நாட்டுக்கோ ,பெண்மைக்கோ ஒரு நாளும் உண்மையாக இருந்ததில்லை.

இந்தியா பாக்கிஸ்தான் இரண்டும் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள். இவற்றினிடையில் வேறுபாடுகளை வளர்த்த,வளர்க்கும் எவரையும் சரித்திரம் மன்னிக்காது. இன்று நிலவும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அகண்ட பாரதம் அல்ல வெல்ஸ் கனவு கண்ட உலக அரசு கூட சாத்தியமே. தொலைநோக்குடன் யோசிக்காது,உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் எந்த தலைவருக்கும் இதே கதி தான்.

இன்றைய உலகத்தின் பொது எதிரி தீவிரவாதம். தீவிர வாதத்துக்கு எதிராக உலகமக்கள்(அமெரிக்காவின் தலைமையில் அல்ல) திரண்டெழ வேண்டிய காலகட்டம் இதுதான். தீவிரவாதத்தின் ஆணி வேர் வறுமை. வறுமை உலகிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டால் தீவிரவாதம் தானே மறைந்து விடும்.

அதை விடுத்து குறுகிய நோக்கங்களுடன் மக்களை பிரித்தாண்டு , ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் தலைவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

உலக நாடுகள் ஒன்று கூடி தம் ராணுவத்தை உருப்படியான வேலைகளில் ஈடுபடுத்தினால் வறுமை தலை தெறிக்க ஓடும்.

உல‌க‌ ம‌க்க‌ள் காலை 6 ம‌ணிக்கு விழித்து,மாலை 6 ம‌ணிக்கு ப‌டுக்க‌ச்சென்றாலே போதும் மின்சார‌ம்,எரிபொருள், விநியோக‌ம் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு விடும். இத‌னால் க்ளோப‌ல் வார்மிங் குறைந்து ஜ‌ல‌ப்பிர‌ள‌ய‌ம் த‌டுக்க‌ப்ப‌டும். அணு ஆயுத‌ங்க‌ள்,அணு மின் ச‌க்திக்கு விடை கொடுக்க‌ வேண்டும். ந‌திக‌ள் இணைக்க‌ப்ப‌ட்டு விவ‌சாயம்,கால் நடை வளர்ப்பு, ஆக்ரோ தொழிற்சாலைகள்,பால் பொருள் உற்பத்தி மட்டுமே தொழிலாக‌ கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும். இர‌சாய‌ண‌ உர‌ங்க‌ள் ,பிளாஸ்டிக் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.