கதை கேளுங்க !
ஒவ்வொரு மனிதனும் கதை சொல்ல தயார். ஆனால் நாம் கேட்க தான் தயாரில்லை. 7 ஆம் வகுப்பு காலத்திலிருந்தே தெரிந்தோ தெரியாமலோ ஊர் பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்துவிட்டதால் என்னால் ஓராயிரம் கதை கள் சொல்ல முடியும். நேற்று ஒரு கதை . பெண்ணின் கதை. அவள் பி.படுத்தப்பட்டவள். தலித் இளைஞன் ஒருவனை காதல் கடிமணம். ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது 5 மாதம் கர்பம். இவள் ஒரு பிரபல நர்சிங் ஹோமில் ஃப்ரண்ட் டெஸ்க் எம்ப்ளாய். பணம் போக்கு வரத்து எல்லாம் பார்த்துக்கொள்ளவேண்டிய வேலை. சம்பளம் ரூ.1800 .டைமிங்ஸ் காலை 8 முதல் இரவு 10. இவளோடு சேர்த்து 25 பேர் வேலை பார்க்கிறார்கள்.
தேனை எடுப்பவன் புறங்கையை நக்கித்தீருவான் என்பது போல் கடைசி 4 மாதங்கள் தினசரி ரூ.1000 வரை ஒதுக்கி இருக்கிறாள். தன் கணவன் பேரிலான வங்கி கணக்கில் டெப்பாஸிட் செய்து வந்திருக்கிறாள். கணக்கு வழக்கில் எந்த வித்யாசமும் கிடையாது. கொள்ளையடிப்பவனுக்கு கணக்கு பார்க்க நேரம் ஏது?
ஒரு நாள் தன் சக ஊழியை ஒருவளிடம் பணம் கொடுத்து வங்கியில் போட்டு வரச் சொல்லியிருக்கிறாள். அந்த பெண் டாக்டரிடம் ஊதியிருக்கிறது. பற்றிக்கொண்டுவிட்டது. டாக்டர் பந்தாவாய் அந்த தனியார் வங்கி மேனேஜருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லவும், வங்கி இவள் கணக்கை முடக்கி விட்டது.
மேலும் டாக்டர் ஒன் டவுன் எஸ்.ஐ க்கு ஓரலாக கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட்டார். இந்த நிலையில் என் உதவி கேட்டு வந்தனர். நான் என்ன செய்திருப்பேன்? வேலைக்கு ஆகியதா? இல்லையா? ட்டட்ட டாய்ங் அடுத்த பதிவில் சந்திப்போம்