Tuesday, December 4, 2007

அமெரிக்கா அமெரிக்கையாய் தன் வேலையை மட்டும் பார்த்துகொண்டு கிடக்கா விட்டால் 3 ஆவது உலக யுத்தம் நிச்சயம் என்றே தோன்றுகிறது.

2008 ஏப்ரலுக்குள் 3 ஆவது உலக யுத்தம்?
ரஷ்யா,அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் இரண்டு பட்டிருந்த நிலையில் தான் 2 ஆவது உலக யுத்தம் நடந்தது. தற்போது ரஷ்ய தேர்தல்கள் குறித்து புஷ் கொளுத்திப்போட்டுள்ள விமர்ஸன வெடிகள் இரு நாடுகளின் உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ரஷ்ய தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்து விளாதிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலக ம‌னித‌ உரிமைக‌ளின் காவ‌ல‌ன் என்ற‌ வேட‌ம் க‌ட்டி கூத்தாடும் அமெரிக்காவின் சுய‌ரூப‌ம் ப‌ல‌ நாட்டு அதிப‌ர்க‌ளுக்கு தெரிந்தே உள்ள‌து. ஆனால் பூனைக்கு ம‌ணிக‌ட்டுவ‌து யார் என்ப‌து தான் கேள்வி. அன்று விய‌ட்னாம் ஆச்சு. முந்தா நாள் அணு ஆயுதம், ரசாயன ஆயுதம் சாக்கில் ஈராக் ஆச்சு, தாலிபன்,பின்லாடன் சாக்கில் ஆப்கானிஸ்தான் ஆச்சு. இப்போது இஸ்ரேலை காத்தே தீருவோம் என்று அமெரிக்கா சூளுரைத்திருக்கிற‌து. அத‌ற்கான‌ அமைதி பேச்சுக்கு ஈரானுக்கு அழைப்பில்லையாம்.

அமெரிக்கா என்பது செல்லரித்துப்போன மர யானை பொம்மை. டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதே இதற்கு சாட்சி. மேலும் தன் வினை தன்னை சுடும், வீட்டப்பம் ஓட்டைச் சுடும் என்பது உலக நியதி. நாளும் கோளும் என் செய்யும் என்று நிம்மதியாயிருக்க , அமெரிக்கா குமரேசரிரு தாளும் கடம்பும் துணை என்று இருந்த தில்லையே !

கலியுகம் 5000 ஆம் ஆண்டு முதல் 108 வருடங்களுக்கான எதிர்கால டயரி காலஞானம் ஆகட்டும், வியாசரின் பவிஷ்ய புராணமாகட்டும், நேஸ்ட்ரோ டாமஸின் தி செஞ்சுரீஸ் ஆகட்டும் , தற்போதைய கிரக நிலை ஆகட்டும் எதை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் அமெரிக்கா அமெரிக்கையாய் தன் வேலையை மட்டும் பார்த்துகொண்டு கிடக்கா விட்டால் 3 ஆவது உலக யுத்தம் நிச்சயம் என்றே தோன்றுகிறது. அதுவும் கலியுகம் 108 ஆம் வருடம் நடைபெறும் இந்த காலகட்டத்தில் வரும் ஏப்ரலுக்குள் உலகின் 7ன் கீழ் 6 பாகம் அழிந்தே ஆகவேண்டும். அந்த அழிவு அமெரிக்காவால் தான் ஏற்பட வேண்டும் என்றிருந்தால் யார்தான் அதை தடுத்து நிறுத்த முடியும்.