Saturday, December 29, 2007

பல்துறை திறமைகளின் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்

பல்துறை திறமைகளிபல்துறை திறமைகளின் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்
ன் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்

சித்தூர்(டிச‌ம்ப‌ர்29)
தமிழ்,தெலுங்கு மொழிகளில் எழுத்து,கவிதை,விளம்பர வடிவமைப்பு,கணிணி போன்ற பல் துறை திற‌மைக‌ளின் உறைவிட‌ம் சித்தூர்.எஸ்.முருகேஷ‌ன் என்று ஆந்திர‌மாநில‌ம்,சித்தூர் ந‌க‌ர‌ ம‌க்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். வ‌ல்ல‌வ‌ர்க‌ள் எல்லாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இல்லாத‌தால் தான் ந‌ம் நாடு ப‌ல்வேறு துறைக‌ளிலும் பின் த‌ங்கி வ‌ருகிற‌து என்ப‌தை நாட‌றியும். பல துறைகளில் வ‌ல்ல‌வ‌ராக‌ இருப்ப‌தோடு ந‌ல்ல‌வ‌ராக‌வும் இருப்ப‌தே முருகேஷ‌னின் புக‌ழுக்கு கார‌ண‌ம் என்று வேலூரை அடுத்துள்ள‌ சித்தூர் ந‌க‌ர‌ ம‌க்க‌ள் சொல்வ‌தை கேட்க‌ முடிகிற‌து. 1967 ல் ஓய்வு பெற்ற மாவட்ட க‌ருவூல‌ அதிகாரியின் 3 ஆவ‌து ம‌க‌னாக‌ பிற‌ந்த‌ முருகேஷ‌ன்
1987 க‌ல்லூரி தேர்த‌ல்க‌ளில் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ர‌ட‌ரியாக‌ போட்டியிட்டு 468 வாக்குக‌ள் பெற்று த‌ம‌து ச‌ரித்திர‌த்தை துவ‌க்கி இந்த‌ 20 ஆண்டுக‌ளில் பிர‌ப‌ல‌ தெலுங்கு நாளித‌ழ் வார்த்தாவில் அரைப் ப‌க்க‌ அள‌வில் த‌ம்மை ப‌ற்றி செய்தி வெளிவ‌ரும‌ள‌வுக்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இவ‌ர‌து சாத‌னைக‌ளில் குறிப்பிட‌த்த‌க்க‌வை வ‌ருமாறு:


1984லேயே க‌ல்லூரி ஆண்டு ம‌ல‌ரில் முத‌ல் க‌விதை பிர‌சுர‌ம்
1987ல் பாக்யாவில் முத‌ல் சிறுக‌தை பிர‌சுர‌ம். 1990 க்குள் வாசுகி,க‌ல்கி,க‌விதாச‌ர‌ண் இத‌ழ்க‌ளில் க‌தைக‌ள் பிர‌சுர‌ம்.

1991 ல் க‌ல‌ப்புத்திரும‌ண‌ம். முத‌ல் குழ‌ந்தை வ‌யிற்றிலிருக்கும்போதே சமூக பொறுப்புடன் கு.க‌. செய்து கொண்ட‌மை

1992 முத‌ல் ஆண்டுக்கு ஒருமுறையாவ‌து ர‌த்த‌தான‌ம் செய்து வ‌ருவ‌து.

இந்தியாவின் எல்லா பிர‌ச்சினைக‌ளுக்கும் தீர்வாக‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌ம் தீட்டி அத‌ன் பிர‌ச்சார‌த்துக்கும்,அம‌லுக்கும் தொட‌ர்ந்து உழைத்து வ‌ருவ‌து

விள‌ம்ப‌ர‌ வ‌டிவ‌மைப்பில் ஈடுபாடு கொண்டு முத‌ல் 6 மாத‌ங்க‌ளிலேயே சென்னை,விவேகான‌ந்தா க‌ல்வி நிலைய‌ம், அபிசாரிக்கா தெலுங்கு மாத‌ இத‌ழ் நிர்வாக‌ங்க‌ளிட‌மிருந்து ரொக்க‌ப் ப‌ரிசு பெற்ற‌து
1986 முதல் தமது காம நினைவுகளிலிருந்து விடுதலை பெற அனுமனின் அருள் வேண்டி ராம நாமம் ஜெபித்து வருகிறார். குண்டலி விழிப்பு நிலைக்கு சென்றால் காலஞானம் ஏற்பட வேண்டும் என்பது யோகசாஸ்திர வாக்கு.

எந்த குருவிடமும் அப்பியாசம் செய்யாது ஜோதிட வியலை பயின்று தேர்ச்சி பெற்றதோடு அனுபவ ஜோதிடம் என்ற பெயரில் தனியொரு கலையை உருவாக்கியிருப்பது சிறப்பு.

நவகிரக தோஷங்களுக்கு சம்பிரதாய பரிகாரங்களோடு, தமது கண்டுபிடிப்பான நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்து பேரும் புகழும் பெற்று வருகிறார்.

தமது ஆன்மீக வாழ்விலும் தொடர்ந்து முன்னேறி 2000 டிசம்பர் 23 முதல் ஹ்ரீம் என்ற மாயா பீஜத்தை ஜெபித்து வருகிறார். இறையருளை பொறிவைத்து பிடிப்பது எப்படி என்று நூல் எழுதுமத்தனை அனுபவங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவேங்கடன் தீந்தமிழ் பாமலர் மாலை என்ற தலைப்பில் எளிய,அழகு,பழகு தமிழில் காவியம் எழுதி திருப்பதி திருமலை தேவஸ்தான ஆய்வுக்குழு தலைவர் டாக்டர் . ராகவாச்சாரியின் பாராட்டைப்பெற்றது

ஒரே நேர‌த்தில் ஆன்மீகம்‌ மாத‌ இத‌ழில் 2 தொட‌ர்க‌ள் எழுதிய‌மை.(ந‌வ‌கிர‌க‌ தோஷ‌ங்க‌ளுக்கு ந‌வீன‌ ப‌ரிகார‌ங்க‌ள்,ஸ்ரீ பிர‌ம்ம‌ங்காரு)
ஜோதிட பூமி மாத இதழில் தமது கண்டுபிடிப்பான ந‌வ‌கிர‌க‌ தோஷ‌ங்க‌ளுக்கு ந‌வீன‌ ப‌ரிகார‌ங்களை எழுதி முடித்து, அனைவருக்கும் தனயோகம் என்ற தொடரை ஜனவரி இதழில் துவக்க உள்ளார்.

தமிழனாய் இருந்து, தெலுங்கை கற்றுத் தேர்ந்து தெலுங்கிலும் இலக்கியங்கள் படைப்பதோடு 2 ஆண்டுகள் ஆந்திர பிரபா தெலுங்கு நாளிதழின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது தினத்தந்தி நாளிதழின் சித்தூர் நிருபராக பணியாற்றிவருகிறார்.