Monday, December 24, 2007

மரம்

மரம் மாதிரி நிக்கறான் பாரு என்பார்கள். மரம் நிற்பதால் ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மனிதனுக்கும்,சகல ஜீவ ராசிகளுக்கும் உணவு கிடைக்கிறது.உரம் கிடைக்கிறது. மனிதன் நிற்பதால் தான் இயற்கை தடுமாறுகிறது. குளோபல் வார்மிங் என் கிறார்கள். பனி உருகி சமுத்திரமட்டம் உயருமாம். சுனாமி வருமாம். ஜலபிரளயம் என்றால் இதுதானாம்.

தெலுங்கில் வம்சாவளியை (ஆவளி என்றால் வரிசை என்று அர்த்தம். தீபாவளி, தீபங்களின் வரிசை) வம்ச விருட்சம் என்பார்கள். என்.டி.ஆர் காங்கிரஸ் காரர்களை, மரத்தின் பெயர் சொல்லி காய்கள் விற்பவர்கள் என்று விமர்சித்தார்.

புத்த‌ருக்கு ஞான‌ம் த‌ந்த‌து ஒரு ம‌ர‌ம் தான். ஜோதிட‌த்தில் கூட‌ ஒவ்வொரு ந‌ட்ச‌த்திர‌த்துக்கும் ஒவ்வொரு ம‌ர‌ம் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. (அடிபாகத்தை கழுவி/நீர் ஊற்றி, ம‌ஞ்ச‌ள் பூசி/பூச்சி அரிக்காதிருக்கும், வ‌ல‌ம் வ‌ந்தால்/ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌ன் கிடைக்கும்,ந‌ல‌ம் விளையும் என்ப‌து ஆன்றோர் க‌ருத்து.

ஒவ்வொரு த‌ல‌த்துக்கும் ஒவ்வொரு ம‌ர‌ம் உண்டு. அந்த‌ த‌ல‌த்தில் அம்ம‌ர‌த்தை எவ‌ரும் வெட்ட‌ துணிய‌ மாட்டார்க‌ள்.

ஒவ்வொரு பொறுப்புள்ள‌ த‌க‌ப்ப‌னும் ம‌ர‌ம் மாதிரி. பிள்ளைக‌ள் த‌லையெடுத்து விழுது போல் தாங்க‌ வேண்டும். அநேக‌ பிள்ளைக‌ள் புல்லுருவியாக‌த் தான் வ‌ள‌ர்கிறார்க‌ள்.


இன்றைய‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் தாம் உட்கார்ந்திருக்கும் கிளையை (ம‌க்க‌ளை) வெட்டுகிறார்க‌ள்.

ஆலும்.வேலும் ப‌ல்லுக்குறுதி என்றார்க‌ள். ச‌மீப‌த்தில் புகையிலை க‌ரை ப‌டிந்த‌ என் ப‌ற்க‌ளை கிரானைட் க‌ல்லுக்கு பாலிஷ் போட்ட‌ தினுசில் ப‌ல் டாக்ட‌ர் சுர‌ண்டிய‌ போது இந்த‌ ப‌ழ‌ மொழி த‌மிழ் பாட்டில் ல‌ல்ல‌ல்லா மாதிரி கேட்டுக்கொண்டே இருந்த‌து.

ரிஷிக‌ள் ம‌ர‌த்தால் ஆன‌ கால‌ணியை அணிவார்க‌ள். கார‌ண‌ம் பூமி ஒரு காந்த‌ம். ம‌னித‌ உட‌லில் இரும்பு ச‌க்தி உண்டு. இதை அது க‌வ‌ராத‌ ப‌டிக்கு காப‌ந்து.

ம‌ர‌த்தாலான‌ உல‌க்கை,கொட்டாங்க‌ச்சியாலான‌ அக‌ப்பை இதையெல்லாம் யார் உப‌யோகிக்கிறார்க‌ள்.

தாவ‌ர‌ங்க‌ளுக்கு உயிர் உண்டு என்ப‌தை ஏற்கென‌வே ஜ‌க‌தீஷ் ச‌ந்திர‌ போஸ் நிரூபித்துவிட்டார். ஒரு ஆட்டை வெட்ட‌ அத‌ன் முன் க‌த்தி தீட்ட‌ப்ப‌டும்போது அத‌ன் ர‌த்த‌த்தில் ஏற்ப‌டும் மாற்ற‌ங்க‌ளை யார் க‌ண்டா ?

இதே நிலை தாவ‌ர‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌டலாம் அல்லவா? அதிலும் காய்,க‌றிக‌ளை உலோக‌ பாத்திர‌ங்க‌ளில் போட்டு,உலோக‌ க‌ர‌ண்டியால் க‌ல‌க்கி விஷ‌மாக்கி தானே உண்கிறோம். உங்க‌ளில் யார் வீட்டிலாவ‌து ம‌ண் பாத்திர‌த்தில் ச‌மைப்ப‌துண்டா?( அடுத்த‌ மாத‌ம் 20 தேதிக்கு பிற‌கு நான் முய‌ற்சிக்க‌ போகிறேன்.