Saturday, December 1, 2007

ஐதராபாத் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்திலிருந்து என் செல்லுக்கு போன் வந்தது.

இன்று மாலை 6.05 மணிக்கு ஐதராபாத் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்திலிருந்து என் செல்லுக்கு போன் வந்தது. தொடர்பு கொண்டு பேசியவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 குறித்து கேட்டறிந்து கொண்டார்.

1997 நவம்பர் முதல் முதல்வர் சந்திரபாபுவுக்கு தலைமைச் செயலக முகவரிக்கு நான் எழுதிய கடிதங்களை எடைக்கு போட்டால் என் எடைக்கு எடை அரிசி வாங்கலாம்), சந்திரபாபு எதிர்கட்சி தலைவரான பிறகு ஐதராபாதில் உள்ள தெலுகு தேசம் கட்சி அலுவலகத்துக்கு(என்.டி. ஆர் பவன்) போட்ட கடிதங்களை எடைக்கு போட்டால் எடைக்கு எடை கோதுமை வாங்கலாம். இதெல்லாம் போனில் பேசியவருக்கு தெரியாதிருக்கலாம் என்ற எண்ணத்தில் பொறுமையாக திட்டத்தை விளக்கினேன்.


இறுதியில் அவர் எங்கு வந்து நின்றார் தெரியுமா? உங்க அலுவலகத்து குப்பைக் கூடைகளுக்கு பசி அதிகம்னு எப்படி எழுதலாம் என்று கேட்டார். "என் அனுபவத்தை எழுதிட்டேண்ணே.." என்று கூறி போனை கட் செய்தேன்.