இப்படி டைட்டிலில் பெயர் வரவேண்டுமென்று கனவு கண்டதுண்டு. அந்த கனவு மெய்ப்படும் நாள் வெகு அருகில் உள்ளதாய் ஒரு உணர்வு. இடையில் 1991 முதல் நாளிது வரை அதை நனவாக்கிக் கொள்ளும் பொருளாதார வசதி இல்லை. தற்போது கார்ப்போரேட் நிறுவனங்கள் திரையுலகில் கால் பதித்திருக்கும் நிலையில் எனது திரைக்கதை சுருக்கங்களை இந்த வலை தளத்தில் வைக்க நினைத்து 2 முறை ஷெட் ஆகிவிட்டது.(முழுக்க தட்டச்சிய பிறகு)
எனவே மேலும் சுருக்(கமாக):
1.ஆண்பிள்ளை சிங்கம்:
இருவேடங்களில் ரஜினி. பெரியவர்(அப்பா) ஜொள்ளு பார்ட்டி. எஸ்டேட் அதிபர். வில்லி வலையில் சிக்கி உயிர் விடுகிறார். வில்லி மகன் ரஜினியை வளர்க்கிறார், வில்லனாக.
குறிப்பு: ராம்கியின் தொட்டில் சபதம் வெளிவருவதற்கு முன்பே எழுதப்பட்ட திரைக்கதை இது.
2.நண்பர்கள்:
நான் கு நண்பர்கள். ஒரே அறையில் வாசம். மாதத்தின் 29 நாள் வெள்ளை சாம்பார்களாக இருக்கும் இவர்கள் ஒரு நாள் மட்டும் ஹீரோக்களாகிவிடுவது வழக்கம். அந்த ஒரு நாளில் சென்னைக்கு வரும் கிராமத்தி நாயகியை காப்பாற்றி அறையில் வைத்துக் கொண்டு அவஸ்தை படுகிறார்கள். நால்வரில் ஒருவனால் திரஸ்கரிக்கப்பட்ட பெண் தான் ஹீரோயின். அதாவது அப்பா பார்த்து ஓகே செய்திருப்பார். ஹீரோ போட்டேவைப் பார்த்து ரிஜெக்ட் செய்திருப்பார். இதனால் ஹீரோயின் அப்பாவுக்கு மாரடைப்பு . பழி வாங்க கி.ஹீரோயின் பட்டணம் வந்து லொள்ளு பண்ணுகிறார்.
குறிப்பு: இது புதுவசந்தம் வருவதற்கு முன்பே எழுதப்பட்ட திரைக்கதை