Sunday, December 23, 2007

கெட்ட நேரங்களை பற்றி சில வரிகள்:

ஐயா.. நான் பிராமணனல்ல. மூடநம்பிக்கையாளனுமல்ல. என்னை நம்பி வருபவர்களுக்கு ஜோதிடம் குறித்த என் ஆராய்ச்சியிலான இடைக்கால முடிவுகளை மட்டுமே தெரிவித்து வருகிறேன்.

கெட்ட நேரங்களை பற்றி சில வரிகள்:

ஜோதிடவியலில் ஒவ்வொரு விதிக்கும் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை அறிந்தால் ஜோதிடம் என்பது ஏய்த்து பிழைப்பவர்களுக்கானதே தவிர ,உழைத்து பிழைப்பவர்களுக்கல்ல என்பதை உணரலாம். என்னைப் பொருத்தவரை ஜோதிட விதிகளை வகுத்தளித்த நம் ரிஷிகள்,மகரிஷிகள் தாம் ஆதி கம்யூனிஸ்டுகள்.


ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்:


சுக்கிர அஸ்தமனத்தின் போது வீடு மாறுவது கூடாது என்பது விதி. இதற்கான விதிவிலக்கில் யுத்த பயம்,தொற்று நோய்கள் பரவும் காலம், பஞ்சம் பிழைக்க வீடு மாறும்போது சுக்கிர அஸ்தமனம் பற்றி கவலைக்கொள்ள வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தன்னலமற்ற லட்சியத்துடன் உழைப்பவர்கள் விஷயத்தில் கிரகங்கள் வேலை செய்யாது என்றும் ஒரு விதி உள்ளது. இதற்கு பார்வதி தேவி சாபம் காரணமாக கூறப்பட்டுள்ளது.

பத்து வட்டி வாங்குபவன் ராகு,எம, காலம் பார்த்தால் எத்தனையோ ஏழைகள் காப்பாற்றப்படுவார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவர் இதெல்லாம் பார்த்ததால் தான் இன்று சில கட்டிடங்களேனும் மிச்சம் உள்ளன. இல்லாவிட்டால் தமிழ்நாடே கபளீகரம் ஆகியிருக்கும்.

இருப்பவன் பஞ்சாங்கம் பார்த்தே வாழட்டும். அது தான் நாட்டுக்கு நல்லது. இல்லாதவன் ஆண்டுக்கு ஒரு முறை சேவை மனப்பான்மை உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்து பலனறிந்து அதற்கேற்ப செயல்பட்டாலே போதும். ஏழைக்கு ராகு,எம,காலங்கள் வேலை செய்யாது. இதை நிரூபிக்க நான் தயார்.


ச‌னி பிடித்த‌ போது பிற‌ரிட‌ம் வேலை செய்தும், ச‌னி விடுத‌லையான‌ போது சொந்த‌ வியாபார‌ம்,தொழில் செய்தும் வ‌ந்தாலே போதும் ஏழைக‌ள் ப‌ண‌க்கார‌ர்க‌ளாவ‌து உறுதி