ஜோதிடம் குறித்த சுஜாதாவின் கருத்துக்கள் விடலைத்தனமாகவும், பொறுப்பற்றும் இருப்பதை ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மீண்டும் சுஜாதா குங்குமம் வார இதழில் ஜோதிடம் குறித்து வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நாளென்செயும் கோளென்செயும் என்று பழம் பாடலை குறிப்பிட்டுள்ளார். அந்த பழம் பாடலின் இறுதியில் ஒரு வரி வரும்: அதையும் சேர்த்து படிக்கும்போது:
குமரேசரிரு தாளும்,சிலம்பும்,சதங்கையும் நம் கண் முன் வந்து தோன்றிய பிறகு தான் நாள் என் செய்யும் , கோள் என் செய்யும் என்ற நிலை ஏற்படும் என்பது தெரிய வரும். இந்த 40 வயதுக்கே இந்த பாடலின் கடைசி வரியை சரியாக குறிப்பிட முடியவில்லை. குங்குமத்தை அரை,குறை ஆடை அணிந்த பெண்களின் படங்களை பார்க்கவே வாங்கி படிக்கும் டீன் ஏஜர்களுக்கு இந்த பாடலின் வாசனை கூட தெரியாதிருக்கலாம்.
சுஜாதா திட்டமிட்டே ஜோதிடம் குறித்து இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். ராமர் ஜாதகத்தில் குரு,சந்திர சேர்க்கை இருந்ததால் தான் வனவாசம் செய்தார், செவ்வாய் 7 ல் இருந்ததால் தான் சீதையை பிரிந்திருக்க வேண்டிவந்தது என்று கூறும் சனாதனர்களின் வழி வந்த சுஜாதா ஜோதிடத்தை பழிக்க ஒரே ஒரு காரணம் தான்:
பிராமணர்கள் தம் பஞ்சாங்கங்களை விட்டெறிந்தனர் , அநாதையாக்கிவிட்டனர்.தலைமை செயலகத்தில் ஆளப்போய் விட்டனர். சூத்திரர்கள் அவற்றை தத்தெடுத்து நாட்டுடைமை ஆக்கி விட்டனர். இந்த வயிற்றெரிச்சலில், குலாபிமானத்தில் தான் சுஜாதா ஜோதிடத்தை பழித்து வருகிறார்.