Saturday, December 8, 2007

நானே இறைவன்

நானே இறைவன் என்ற எண்ணம் அவ்வப்போது என்னில் தோன்றுவதுண்டு. எல்லோருக்கும் இப்படியேவா என்பது தெரியாது. "யத்பாவம் தத் பவதி" என்றால்.நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது இதன் பொருள். நான் 1986 ஜனவரி முதல் அனுமனையே நினைத்து,அவருக்கு பிடிக்கும் என்பதால் ராம நாமம் ஜெபித்து வருகிறேன். 1997 ல் என் கான்ஷியஸ் பரிசுத்தமாக இருந்ததாலோ என்னமோ பல அற்புதங்கள் என் வாழ்வில் நடந்தன. 2003 ல் தான் ஜஸ்ட் இர்ரிடேஷன் காரணமாய் அஹிம்சையை கைவிட்டு ஹிம்ஸைக்கு தாவினேன். கெட்டது செய்தவனுக்கும் நல்லதே செய்வது என்ற நிலையை ஒரே ஒரு தடவை என்று விட்டொழித்தது என் கான்ஷியஸை மலினப்படுத்தி விட்டது உண்மைதான். என்றாலும் என் வாழ்வில் அற்புதங்களுக்கு பஞ்சமில்லை.

முந்தா நாள் கூட இலவச தங்குமிடம் கொடுத்து, பஜ்ஜி கடை போட, ஷ்யூரிட்டி ஏற்பாடு செய்து லோன் வாங்கித் தந்த முத்து சற்றே என்னை,என் ஈகோவை உரசிப்பார்த்த பாவத்துக்கு கை வெந்து போனது.

நேற்று ஒரு ஆசாமி சாமியெல்லாம் பணம் படைத்தவர்களுக்குத்தான் அது இது என்று ப்ளேடு போட நான் என் அனுபவத்தை, தெய்வீக சக்தி செயல்படும் விதத்தை, மனிதனுக்கும்,தெய்வத்துக்கும் உள்ள தொடர்பை எடுத்து விட்டேன். அவர் நக்கலாகவே ரெஸ்பாண்ட் ஆகிக் கொண்டிருந்தார். மறு நாளே சைக்கிளை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டே வரும்போது சர்ச் தெருவில் எதிர்பட்டார்.

இதையெல்லாம் சொல்வது நான் இறைவன் என்றோ,இறைவனுக்கு ஏஜெண்ட் என்றோ நிரூபிக்க அல்ல. இறைவனை நான் புரிந்து கொண்டதை அறிவிக்கும் நாள் இன்னும் வரவில்லை. தற்போதும் ஒரு குண்ட்ஸாக தான் புரிகிறது. திடீர் என்று என் கண்டுபிடிப்புகள் யாவுமே வாயை பிளந்துவிடுவதையும் காண முடிகிறது. எது எப்படியிருந்தாலும் தெய்வீக சக்தியின் இருப்பை என்னால் அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. அது தூய ஆன்மாக்களின் சக்தியா அல்லது கடைசிவரை முட்டாள் தனமான் முருக பக்தராகவே வாழ்ந்து செத்த என் அப்பாவின் ஆன்ம சக்தியா புரியவில்லை. இருந்தாலும் ஒரு சக்தி யிருக்கிறது. அது என்னை காக்கவே விரும்புகிறது. நான் மக்களிடமிருப்பதாய் பட்டியலிடும் அருட்தடைகள் என்னிலும் இருப்பதால் முழுக்க காக்க முடியாது தவிக்கிறது. அதே நேரத்தில் இறைவ‌னின் அருளை நான் பூர‌ண‌மாக‌ பெறுவ‌தை சில‌ ச‌க்திக‌ள் த‌டுப்ப‌தையும் உண‌ர‌முடிகிற‌து.


என் ச‌க்தி உத‌வாக்க‌ரை விஷ‌ய‌ங்க‌ளில் செல‌வாவ‌தையும் உண‌ர‌ முடிகிற‌து. இனியேனும் ஒரு விதி செய்ய‌வேண்டும் அருட்த‌டை ச‌க்திக‌ளை முறிய‌டித்து இறைவ‌ன் திருவ‌ருளை முழுமையாக‌ பெற‌வேண்டும். நான் இறைவ‌னோ என்ற‌ ம‌ய‌க்க‌ம் ஏற்ப‌டும‌த்த‌னை உற‌வு என‌க்கும்/இறைவ‌னுக்கும் இடையில் ஏற்ப‌ட்டு விட்ட‌ பிற‌கு கூட‌ அருட்த‌டைக‌ளை தொட‌ர‌ விடுவ‌து வ‌டிக‌ட்டிய‌ முட்டாள் த‌ன‌ம்.