அன்புடையீர் !
தினத்தந்தியில் வெளிவந்த எனது வரி விளம்பரத்தைக் கண்டு என்னை தொடர்பு கொண்ட தங்களுக்கு என் நன்றி. ஜோதிட பலன் களை கூறும்போது திரும்ப திரும்ப அதே விஷயங்களை கூறவேண்டி வருகிறது. இதற்கு காரணம், தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பது தங்கள் ஜாதகத்தில் நின்றுள்ள 9 கிரகங்களின் பலமும், 12 பாவங்களின் பலமும் தான். இவை சுபபலமாக இருந்தால் இவை காரகத்வம் வகிக்கும் எல்லா விஷயங்களிலுமில்லாவிட்டாலும், ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட விஷயங்களில் வெற்றி உங்களை தேடிவரும். இவற்றில் எந்தெந்த பாவம்,கிரகம் கெட்டுள்ளதோ அது காரகத்வம் வகிக்கும் விஷயங்களில் தொல்லைகள் வந்து கதவை தட்டும். எனவே ஒளிவு மறைவில்லாது 9 கிரகங்களின் காரகத்துவத்தையும், 12 பாவங்களின் காரகத்துவத்தையும் http:www.anubavajothidam.blogspot.com என்ற என் வலைதளத்தில் வைத்துள்ளேன்.படித்து பயன் பெறுங்கள்.
ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் :
ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.
உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.
ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன்.
உதாரணமாக:
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன்.
செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன். மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.
நான் இக்கடிதத்துடன் இணைத்துள்ள தங்கள் ஜாதக பலன் களில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் கடிதம்/மெயில்/செல் மூலம் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
சித்தூர்.எஸ்.முருகேஷன்