Saturday, December 15, 2007

த‌ம்மையே க‌டித்து தின்னும் நிலைக்கு வ‌ந்து விட்ட‌ பின் என் செய்வேன்?

அம்மா அச்சம் பிறக்கிறதடி நெஞ்சில்
மனதில் மிச்சமிருக்கும் மனிதமும்
ஆவியாகிவிடுமோ என்ற அச்சம் பிறக்கிறதடி நெஞ்சில்
எய்த‌வ‌னிருக்க‌ அம்பை நோவ‌து போல்
இவ‌ர் வ‌றுமைக்கு கார‌ண‌ம் எங்கோ இருக்க‌

ஒருவ‌ரையொருவ‌ர் தின்னும் இவ‌ர்க‌ளை க‌ண்டால்
அச்ச‌ம் பிற‌க்கிற‌த‌டி நெஞ்சில்

நான் க‌விஞ‌ன் ..என்னிட‌மிருப்ப‌தெல்லாம்
செத்த‌வ‌ரை உயிர்ப்பிக்கும் அமுத‌ வ‌ரிக‌ள்
நான் க‌விஞ‌ன் என்னிட‌மிருக்குது
ம‌னித‌ மிருக‌ங்க‌ளை க‌வி பாடியே அழிக்கும்
க‌ல‌ம்ப‌க‌ம்

என் செய்வேன்? இவ‌ர்க‌ள் ஆட்டைக் க‌டித்து,மாட்டை க‌டித்து ,ம‌னித‌ரை க‌டித்து த‌ற்போது த‌ம்மையே க‌டித்து தின்னும் நிலைக்கு வ‌ந்து விட்ட‌ பின் என் செய்வேன்?

நான் செய்த‌ பாவ‌மெல்லாம் இர‌ண்டே !

பாரத தேசத்திலிருந்து ப‌சியை விர‌ட்ட‌ முனைந்தேன்
சுர‌ண்டலுக்கு சுறுக்கிட‌ முய‌ன்றேன்..அவ்வள‌வே!

பெரிய‌ சூதாட்ட‌மே ஆடிவிட்டேன்.
இதில் பசி என்னை உண்ணட்டும் என்று
என் உண‌வை ம‌ட்டும‌ல்ல
மண் உண்ணட்டும் என்று என்னையே ப‌ண‌ய‌ம் வைத்தேன்.

வெற்றி தான் கிட்ட‌வில்லை.
வ‌ட‌க்கில் வெள்ளம், தெற்கில் வ‌ற‌ட்சி
ந‌திக‌ளை இணைப்போம் என்றால்,
அந்த திட்டத்தை சிக‌ப்பு நாடா சுருக்கிட்டே கொன்று போடுவார்க‌ள்.

10 கோடி வேலைய‌ற்ற‌ இளைஞ‌ர்க‌ளை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் அமைத்திட‌ க‌ன‌வு க‌ண்டேன்.

என் க‌ன‌வுக்கு 20 வ‌ருட‌ உழைப்பை உண‌வாக‌ த‌ந்தேன். அத‌ன் ப‌காசுர‌ ப‌சி தீர்வ‌தாயில்லை.

ஆட்சி முறை மாறினால் வ‌ழி பிற‌க்கும் என்று அதிப‌ர் முறை தேர்த‌லுக்கு குர‌ல் கொடுத்தேன்.

என் தொண்டை வ‌ற‌ண்ட‌து.
அதை ந‌னைக்க‌ த‌ண்ணீர் கிடைக்க‌வில்லை. ஒரு ரூபாய் செல‌வ‌ழித்து மின‌ர‌ல் வாட்ட‌ர் வாங்குவ‌தை விட‌ யாரேனும் இர‌ண்டு த‌லைவ‌ர்க‌ளுக்கு 9999 ஆவ‌து முறையாக‌ இர‌ண்டு த‌பால் கார்டாவ‌து எழுத‌லாமே என்று தாக‌த்தை த‌ள்ளிப்போட்டேன்.

வீட்டு உரிமையாள‌ர்க‌ளின் உரிமையில்(?) த‌லையிடும் துணிச்ச‌ல் இல்லாத‌தால்
ந‌ள்ளிர‌வுக‌ளில் நாட்டுத்த‌லைவ‌ர்க‌ளுக்கு தாக்கீதுக‌ள் த‌யாரிக்க‌ என்னைப்போன்றே தானுருகி, ஒளிபெருக்கும் மெழுகுவ‌ர்த்திக‌ளை உப‌யோகித்தேன்.

இந்த‌ உழைப்பு த‌ந்த‌ நிறைவில் என் பிழைப்பையும் ம‌றந்தேன்.

நாட்டின் த‌லையெழுத்தை மாற்றும் உத்வேக‌த்தில் என் த‌லையெழுத்தின் த‌ர‌த்தை த‌ர‌ம் கெட்ட‌வ‌ரும் த‌ட்டித் த‌ர‌ம் பார்க்கும் நிலைக்கு வ‌ந்துவிட்டேன்.

என் ல‌ட்சிய‌த்தை அல‌ட்சிய‌ம் செய்த‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றி என்றுமே நான் அல‌ட்டிக்கொள்ள‌வில்லை

கேவ‌ல‌ம் சுய‌ ந‌ல‌த்துட‌ன் முழு முட்டாள்க‌ள் தொட‌ர்ந்து வென்றாலும்
மாசு ம‌ருவ‌ற்ற‌ என் பொது ந‌ல‌த்துட‌ன் முப்போதும் நான் தோற்றாலும்
க‌வ‌லையுற வில்லை.

உழுத‌வ‌னுக்கு உழ‌க்கும் மிஞ்சாத‌ நிலை மாற்ற‌ கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌த்துக்கு வாதாடினேன்.
க‌ருப்புப்ப‌ண‌த்தை க‌ருவ‌றுக்க‌ புதிய‌ க‌ர‌ன்சி அறிமுக‌ம் என்றேன்.

வ‌ழுக்கை த‌லைய‌ர்க‌ள், த‌ம் சோடா புட்டி க‌ண்ணாடிக‌ள் வ‌ழியாக‌ என் திட்ட‌த்தை பார்த்து ஓட்டைக‌ளை தேடுவார்க‌ள் என்று தெரியும். அத‌ற்காக‌வே பொருளாதார‌ த‌த்துவ‌ங்க‌ளை புர‌ட்டினேன்.

என‌க்கு க‌லைம‌க‌ள் அருள் இருந்த‌தே த‌விர‌, அலைம‌க‌ள் அன்றும், இன்றும் ம‌ருள் த‌விர‌ வேறேதும் த‌ந்த‌தில்லை, பார‌திக்கு ச‌க்தியை த‌ந்த‌ அதே ச‌க்தி கொடுத்த‌ ச‌க்தியில் பார‌த‌ பாராளும‌ன்ற‌த்தின் க‌த‌வுக‌ளை ப‌ல‌மாக‌வே த‌ட்டினேன்.

ஆந்திர‌ முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ குப்பை கூடைக‌ளுக்கு தெரியும், என் திட்ட‌ம் ப‌ற்றி நான் எழுதிய‌ நினைவூட்டு க‌டித‌ங்க‌ளின் எண்ணிக்கை.

மேற்ப‌டி நினைவூட்டு க‌டித‌ங்க‌ள் எழுதிய‌ நேர‌த்தில் ஸ்ரீராம‌ஜெய‌ம் எழுதியிருந்தால் ராம‌ன் என்னிட‌ம் கொத்த‌டிமையாக‌ இருந்திருப்பான்.

ச‌ரி பார‌த‌த்தின் வ‌றுமை நிலை க‌ண்டு என் நெஞ்சு வேத‌னையில் வேக‌ வேண்டும், வெந்து சாக‌ வேண்டும் என்ப‌து விதியானால் டோன்ட் கேர் ..