Tuesday, December 11, 2007

கடவுள் வந்து தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டாலும் என் கதி தான் போலும்.


இந்த சமூக,அரசியல்,பொருளாதார அமைப்பில் கடவுள் வந்து தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டாலும் என் கதி தான் போலும். இந்த கேடு கெட்ட அமைப்பில் மாட்டிக்கொண்டு யார் யாரோ செய்யும் தவறுகளுக்கு நான் பலியாகிக்கொண்டிருக்கிறேன்.

என் தவறு ஒன்றே இந்த அமைப்பின் ஓட்டைகள் தெரிந்த பிறகு இதை சுரண்டியே லக்ஸரியாக வாழும் அறிவுத்திறனிருந்தும் இதை மாற்றி ராம ராஜ்ஜியத்தை மீண்டும் ஸ்தாபிக்க தவிப்பது தான். அதுவும் நானே ப்ரெட் ஹன்டராக இருந்து கொண்டு இந்த முயற்சியை தொடர்கிறேனே இது தான் என் தலையாய தவறு.

தெய்வங்களுக்கு அச்சம் எங்கே இவன் தமது பிரளய கால அஜெண்டாவை நிறைவேறாது செய்துவிடுவானோ என்று.

எனக்கு யாரும் துணையில்லை, தருமம் காத்தால் அது என்னை காக்கும். தருமம் என்னை காத்தால் நான் நாட்டை காக்கலாமே என்றுதான் தருமத்தை காத்து வருகிறேன்.

தெய்வங்களின் இருப்பை உணர்கிறேன். தருமத்தை காத்திருந்த காரணத்தால்
தெய்வங்கள் எனக்கு எனக்கு எல்லையில்லாத ஞானத்தையும், அதிகாரத்தையும் கொடுத்திருந்தாலும் அதனால் என் லட்சியம் நிறைவேறாது என்பது எனக்கு புரிந்துவிட்ட‌து.

என் லட்சியம் நிறைவேற பணம் தேவை. அதையும் என் சங்கல்ப பலத்தால், தெய்வங்களை நச்சரித்து பெற்று விட்டேன். இருந்தும் பொறுப்பற்ற மனைவி,மகளால் அந்த பணம் வீணாகி எனக்குள் குற்ற மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.

வெறுமனே தெய்வம் என் பக்கம் என்ற பிரமையில், கையில் காலணா இல்லாது ஒரு மாநில முதல்வரையே எதிர்த்து போராடிய நான், இன்று மாதம் ரூ.6,000 சம்பளம் வாங்கியும், ஆஸ்ட்ரோ கன்ஸல்டன்ஸியில் சில ஆயிரம் சம்பாதித்தும் என் லட்சிய போராட்டத்தை தொடரமுடியாது தவிக்கிறேன்.

எனக்கு புரிகிறது. இறைவனுக்கு என்னை கண்டு பொறாமை. இவன் எங்கே மக்களுக்கு கவுரவமான வேலை, உணவு,உடை,இருப்பிடம், உயிர் பாதுகாப்பு தந்து தன் பிராபல்யத்தை குறைத்துவிடுவானோ என்று அச்சம்.

மேலும் என் வாழ்வில் நான் நினைத்த‌தெல்லாம் ந‌ட‌ந்து வ‌ருகிற‌து. அது ந‌ட‌க்கும்போதுதான் அது புதிய‌ ந‌ர‌க‌மாகிவிடுகிற‌து. இந்த‌ ர‌க‌சிய‌ம் என‌க்கே தெரிந்திருக்கும் போது, இறைவ‌னுக்கு தெரியாதா என்ன‌? அத‌னால் தான் என் மேலான‌ க‌ருணையால் தான் இறைவ‌ன் என் ல‌ட்சிய‌ப்போரை முட‌க்கி வைத்திருக்கிறான்.

இருந்தாலும் என்ன‌ முட‌க்குவ‌து அவ‌ன் வேலை. தொட‌ர்ந்து முய‌ல்வ‌து என் வேலை.

Note: The photograph in this post is of my friend or a foe Mr.K.karthikeyan. He is running a lending library in chittoor.

For the many years he is conducting essay, and drawing comoetitions to the students in chittoor town.

In this year last sunday there was a prize distribution programme in a private chowltry in chittoor.

I had extracted his photo from a phorograph shot in the above occassion. He is allergetic of focusing. But for my psycological satisfaction I am to display his photo in this post.