கலைவாணர் தம் பாடலில் "விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி' என்பார். தமிழ் நாட்டு பெண் மேயர்களிடம் (ப்ரவுஸர்ஸ்) உதை வாங்கும் தெம்பு இல்லாததால் பாட்டை மாற்றிவிட்டேன்.
விஞ்ஞான வளர்ச்சி தெருச்சாக்கடைகளிலெல்லாம் பாலும்,தேனும் ஓடவைக்கும் என்று சொல்ல மாட்டேன். அது அலாவுதீன் பூதம் போன்றது. கணிணி,செல் போன்ற கண்டுபிடிப்புகளையெல்லாம் தம் செக்ஸ் தினவை தீர்த்துக் கொள்ளவே பெரும்பாலோர் உபயோகிப்பதை நான் மறுக்க மாட்டேன். அதே நேரம் இதற்கு நம் மத,அரசியல் தலைவர்களும் காரணம். செக்ஸ் பற்றிய தம் தவறான கருத்தை மாற்றிக்கொண்டு பாலியல் தொழிலாளிகளுக்கு உரிய பயிற்சிக்கு பிறகு அங்கீகாரம் வழங்கி விட்டால் போதும், விஞ்ஞானத்துக்கும்/செக்ஸுக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடும்.
இன்றைக்கு உள்ள விஞ்ஞான வளர்ச்சியில்,முக்கியமாக தகவல் தொழில் நுட்ப புரட்சியில் ராமராஜ்ஜியம் என்ன அந்த ராமனும் வெட்கி தலை குனியத்தக்க நல்லாட்சியை வழங்க முடியும்.
என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை அமுல்படுத்திவிட்டால் ஸ்தூல பிரச்சினைகள் யாவும் ஒழிந்து நிர்வாக சிக்கல்கள் மட்டுமே இருக்கும்.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
ஒவ்வொரு வார்டு மெம்பருக்கும் கணிணியை உபயோகிக்க கற்றுக்கொடுத்துவிட்டால் போதும் பிறகு எம்.பி,எம்.எல்.ஏ, கலெக்டர்,போன்ற இரண்டடுக்கு,மூன்றடுக்கு நிர்வாக இயந்திரமே தேவையில்லை. ஸ்விட்ஜர்லாந்து போல் நேரிடை ஜனநாயகத்தை வார்ட் அளவில் அமல் படுத்தி விடலாம். காந்தி கூறிய கிராம ராஜ்ஜியம்,ராம ராஜ்ஜியம் எல்லாமே சாத்தியமாகிவிடும். மாவட்ட அளவில் உள்ள நிதி,நீதி,நிர்வாக இயந்திரத்தை கிராம,வார்டு அளவிலேயே ஏற்படுத்தி விடலாம். வார்டில் கொலை நடந்த 24 மணி நேரத்தில் தீர்ப்பு கொடுக்கப்பட்டு கொலை செய்தவர் சிறைக்கு அனுப்பப்பட்டு விடுவார்.
தேர்தல் சீர்திருத்தம்:
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு ப்ரொஃபார்மாவை கொடுத்து அதை கிராம,வார்டு இயந்திரம் உதவியுடன் நிரப்பி ஆன்லைனில் அனுப்பச்சொல்லி,அந்த விவரங்களை ஒரு சூப்பர் கணிணி உதவியுடன் சலித்தெடுத்து திட்டம் தீட்டினாலே போதும் ,அதை அமல் படுத்தும் அதிகாரத்தை மட்டும் கிராம,வார்டு நிர்வாகத்துக்கு தரவேண்டும்.
தேர்தல் என்பது ஆன்லைன் மூலம் 15 நாட்கள் நடத்தப்பட வேண்டும். 90 சதவீதம் வாக்குப்பதிவு நடக்கும் வரை முடிவு தெரிவிக்கப்படக்கூடாது. அவரர் கட்டை விரல் ரேகையையே பாஸ் வோர்டாக்கி விடலாம்.
ஹ்ம்.. எத்தனையோ செய்யலாம் ! மனமிருந்தால் மார்கம் உண்டு. மனமில்லையே ஆள்வோருக்கு.