Jaya padma visalakshi, jaya thwam sri pathi priye,
Jaya mathar maha Lakshmi, samasarnavarnava tharini.
Mahalakshmi namasthubhyam, namasthubhyam sureswari,
Hari priye namasthubhyam, namasthubhyam daya nidhe.
1967 ல் பிறந்தேன் இது 2007 . ஆக 40 வருடங்கள் மெட்டாஷ் ! 1973 ல் மஞ்சா ஸ்கூல் ( க்ரிட்லி கேல்) 1978 ல் பி.ஜட் (10 ஆம் வகுப்பு வரை) 1982 ல் 10 ஆம் வகுப்பு. 1984 வரை இண்டர் மீடியட். 1987 வரை பி.வி.கே.என். இந்த 20 வருடங்கள் பற்றி பெரிதாய் குறைப்பட்டுக் கொள்ள ஏதுமில்லை. ரெகுலர் லைஃபில் தான் இருந்ததாக சொல்ல முடியும். அங்கிருந்து 2007 ஏப்ரல் வரை நாயடி தான். இந்த 20 வருடங்களில் தான் அனுபவம் என்று ஏதாவது ஏற்பட்டிருக்க வேண்டும். இன்றைய என் எழுத்துக்களில் ஏதேனும் முதிர்ச்சி தெரிந்தால் அது இந்த 20 வருடங்களில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.
சுஜாதா உன்னைப்பற்றி எழுதாதே என்று கூறுவது வழக்கம். இது அவர் மாதிரி வெள்ளை சாம்பார்களுக்கு பொருந்தும். அவரே சொல்வது மாதிரி சிறுகதைக்கு உயிர் நாடி முரண்பாடு. என் வாழ்க்கையின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் முரண்பாடு என்பது உறுதியாக தென்படும். இன்றைய தினத்தந்தி நிருபர் வேலை உட்பட. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பருவம் என்ற புத்தகத்தை (எட்டணா விலை) படித்திருக்கிறேன். செக்ஸுக்கு முயன்றிருக்கிறேன்.
வகுப்புத்தலைவன்,தமிழ் சங்கத்துணைத்தலைவன். பெட் ஸ்டூடண்ட் ஃபார் டீச்சர்ஸ். அதே நேரம் மாங்காய் அடிப்பது,நீவா நதியில் மீன் பிடிப்பது,சினிமா போடுவது,காத்தாடி நூலுக்கு மாஞ்சா போடுவது, பம்பரத்தில் பாப்பாரு(?), தலாரி, ஜவுரா பில்லை,சீன் பார்ப்பது,சைட் அடிப்பது, மிட்டூர் முக்கி ரெட்டி தோப்பில் நீச்சல் எதையும் விட்டதில்லை. கடைசி பென்ச் பசங்க கூட இடையறாத தொடர்பு தொடர்ந்து இருந்து வந்தது.
6,7, வகுப்பு படிக்கும்போது வாத்தியார்கள் பெண் பிள்ளைகளிடம் செய்யும் சிலுமிஷங்களின் உண்மை உத்தேசம் எனக்கு தெரியும். சகாக்களை மோட்டிவேட் செய்து அணிதிரட்டியது நான். ஆனால் சந்தேக பட்டியலில் இருந்தவர்களை விசாரிக்கும் போது நான் தப்பிவிட்டேன். இது தான் என் கேரக்டர்.(இரண்டாம் முறை பிடிபட்டு பசுத்தோல் போர்த்திய புலி பட்டம் வாங்கியது தனிக்கதை).5 ஆம் வகுப்பு முதலே எனக்கு செக்ஸில் நாட்டமிருந்தாலும் எனக்கே தெரியாது ஒருவித பெரிய மனிதத்தனம் என்னில் இருந்தது. நான் தர்மங்களை பின்பற்றாதிருந்திருக்கலாம். ஆனால் என் தர்மங்களை நான் கை விட்டதே இல்லை.
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மாதிரி என் பால்யத்துக்கு எழுத்து வடிவம் கொடுக்க முடிந்தால் நோபல் உறுதி. ஆனால் அதை முன்னெடுத்துச் செல்ல என்னிடமிருப்பது இந்த வலைப்பதிவு மட்டுமே..
பார்ப்போம் மார்ச் , ஏப்ரலில் நம் காலத்து நாயகன் என்ற தலைப்பில் என்னைப்பற்றிய ஒரு சிறு நூலை வெளியிட உத்தேசம். என் இலக்கிய கடமைகளை விட , நாடு குறித்த கடமை உணர்வே என்னை பெரிதும் வயப்படுத்துகிறது. அதற்கு பயன் படும் வகையில், ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்டு போல் உபயோகிக்க இந்த நூலை பயன் படுத்தப்போகிறேன்.
என் வலை தளத்துக்கான தொடுப்பை தங்கள் வலைதளத்தில் வைப்பதாயிருந்தால் தங்கள் வலை தளத்துக்கான தொடுப்பை என் வலை தளத்தில் வைக்க ஆவல்
சித்தூர்.எஸ்.முருகேஷன்