கருந்துளை (Black Hole)நோக்கி விரைந்து செல்லும் இந்திய பொருளாதாரம்
பிரதமுரும்,சிதம்பரமும் இந்திய பொருளாதாரம் விரைந்து முன்னேறுவதாக கூறுகின்றனர். இதற்கு வாங்கும் சக்தி அதிகரிப்பு,ஷேர் மார்க்கெட் சென்செக்ஸ் உயர்வு, ஸ்தூல உறபத்தி அதிகரிப்பு,அந்நிய முதலீடு அதிகரிப்பு என்றெல்லாம் ஆதாரம் காட்டுகின்றனர்.இவற்றை சற்றே விசாரித்துவிட்டு பின் யதார்த்த நிலையையும் பார்ப்போம்.
வாங்கும் சக்தி அதிகரிப்பு:இதை விலை வாசி உயர்வு என்று ஏன் சொல்ல கூடாது. அரசு கொசுவை ஒழிக்காது. நான் என்னை காப்பாற்றிக் கொள்ள கொசுவர்த்தி வாங்கித் தானாக வேண்டும். அரசு சுகாதாரமான குடி நீரை வழங்காது. நான் என்னை காப்பாற்றிக் கொள்ள குடி நீரை விலைக்கு வாங்கித் தானாக வேண்டும். அது எந்த விலைக்கு விற்கப்பட்டாலும் வாங்கித் தானாக வேண்டும். இதே போல் அரசின் கையாலாகாத்தனத்தால், உலக அளவிலான சதியால் கல்வி,மருத்துவம்,எல்லாவற்றையும் வாங்கித்தானாக வேண்டியிருக்கிறது. இதை வாங்க நான் எதை குறைத்து கொண்டேன் என்று மாண்பு மிகு.பிரதமர்,நிதியமைச்சர்களுக்கு தெரியாதிருக்கலாம். சிலர் பட்ஜெட் குறைப்புக்காக வேலைக்காரியை நிறுத்தி வாஷிங் மிஷின் வாங்கலாம். சிலர் ட்ரைவரை நிறுத்தி விட்டு தாமே சாரத்யம் செய்யலாம். அல்லது வயதான அப்பா,அம்மாவை ரோட்டுக்கு அனுப்பலாம். இனி அந்த வேலைக்காரி நிலை? விபச்சாரம் . அந்த ட்ரைவரின் கதி கொள்ளைக்காரன். இனி அந்த பெற்றோரின் நிலை? பிச்சை. வாங்கும் சக்தி அதிகரித்தது இப்படித்தானே தவிர உண்மையான வருவாய் பெருகியதால் அல்ல.
ஆனால் நான் பார்க்கு சமுதாயத்திலோ மைனாரிட்டி,மெஜாரிட்டி, உயர் ஜாதி, கீழ் ஜாதி, ஆண், பெண், ஏழை ,பணக்காரன் வித்யாசமில்லாமல் எல்லோருமே கடனில் இருக்கிறார்கள். வட்டி கட்டி வருகிறார்கள். அல்லது கடன் கொடுத்து விட்டு அசலோ,வட்டியோ திரும்பாது அவதி படுகின்றனர். இது தொடர்பாக தற்கொலை முயற்சி,கொலை முயற்சி,தலை மறைவாதல் , குடும்ப பெண்களை விபச்சாரத்துக்கு தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்கள் மதுவில் மிதக்கிறார்கள். பள்ளி பிள்ளைகள் ஃபீஸ் கட்ட முடியாது முட்டி போடுகிறார்கள். உடல் நலிவுற்ற முதியவர்கள் ரோட்டில் விடப்படுகிறார்கள். மேஸ்திரி,சித்தாள் கூலி உயர்ந்திருக்கிறது, ஆட்கள் கிடைப்பதில்லை. என்னங்கடா இது?
அரசு காண்ட்ராக்டு வேலை செய்தவர்களுக்கு பணம் வரமாட்டேன் என் கிறது. அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்கி, லஞ்சம் வாங்கி,பத்து வட்டிக்கு கடன் வாங்கி, அதுவும் போதாது மனைவிகளை வரதட்சிணை கேட்டு கொளுத்தி, அரசு பணத்தை கையாடி தந்தியில் செய்தியாகிறார்கள். என்னதான் நடக்கிறது புரியவில்லை.
வழக்கறிஞர்கள்,டாக்டர்கள்,சாஃப்ட்வேர் இஞ்சினீர்கள்,மருத்துவ கல்லூரி காரர்கள்,மந்திரிகள்,அரசியல்வாதிகள் தான் சம்பாதிக்கிறார்கள். மக்கள் பணத்தை சுரண்டி கொழிக்கிறார்கள் என்றால் அதுவும் ஓரளவுதான் உண்மை. சுரண்டிய பணத்தை மீண்டும் முதலீடு செய்து தானே ஆகவேண்டும். பாலைவனமாய் வறண்டிருக்கும் மார்க்கெட்டில் கோடிகள் முதலீடாகும் போது மார்க்கெட் நிச்சயமாக பாதியை உறிஞ்சி விடுகிறது. உடலில் ரத்தம் போல், மார்க்கெட்டில் தொடர்ந்து பாய வேண்டிய பணம் ஆங்காங்கே க்ளாட் ஆகிறது,ஆவியாகிறது,உறிஞ்சப்பட்டு விடுகிறது.
ஒருவனின் நஷ்டமே, அடுத்தவனின் லாபமாக மாறுகிறது. உற்பத்தி என்பது மாயா. கன்வெர்ஷன் ஆஃப் ரிசோர்ஸஸ்தான் உற்பத்தி. கன்வெர்ஷன் தேவையில்லாத உற்பத்தி பொருட்கள் கூட போக்குவரத்து,ஹேண்ட்லிங் காஸ்ட்,இருப்பு வைத்தல் காரணமாய் மதிப்பு கூட்டப்படுகின்றன. மனிதனின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. தேவைகள் கூடிவிட்டன. பிரசவம் என்பது இயற்கை சம்பவம். ஆனால் தவறான உணவுப்பழக்கம்,உரிய புரிதலின்மை,சுரண்டல் போக்கு காரணமாய் கு.ப.ரூ.10,000/
செலவு பிடிப்பதாய் ஆகிவிட்டது. இனி குழந்தைக்கான நேப்கின் முதல் கல்வி,ஆடை,மருத்துவம் எல்லாமே உலகமயம்,தனியார் மயம்,நிறுவனமயம் காரணமாய் லட்சங்களுக்கு போய் நிற்கிறது.இப்படி வளர்க்கப்பட்ட பெண்ணோ ,ஆணோ ஒரு இனிய காலை ஹாஸ்டலில் தூக்கு போட்டு செத்தால் மொத்தம் ஆவியாகிவிடுகிறது. அந்த மகன் அல்லது மகளின் கல்வி நிமித்தம் வாங்கிய கடன்,விற்ற சொத்து எல்லாம் கோவிந்தா!
ஐந்து,பத்துக்கு கொலை,விபச்சாரம் நடக்குது நாட்டில். இந்நிலையில் பொருளாதாரம் வளருதென்று சொல்லும் பிரதமர்,நிதிமந்திரியை என்ன செய்ய?
மாறிடுங்கப்பா ! இல்லன்னா நாறிடும்