Saturday, December 8, 2007

பொறுத்திருக்கச் சொல்லும் சிரஞ்சீவி /அரசியல் குதிப்பு விவகாரம்


இன்று சிரஞ்சீவி பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சிரஞ்சீவி தம்மிடமிருந்து அடுத்த அறிக்கை வெளியாகும் வரை, ரசிகர்களை பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். இது அமாவாசைக்காக காத்திருந்து கொடுக்கப்பட்ட அறிக்கை. பிரதமை கழித்து நல்ல நாள் பார்த்து அடுத்த அறிக்கை வெளிவரும் போலுள்ளது. என்னங்கடா இது..

வர்ர பார்ட்டியெல்லாம் நாட்டையும்,மாநிலத்தையும் ஆள நினைப்பதில் தவறில்லை. இதில் பார்ப்பனர்,ஜோதிடர்கள் சொற்படி நடந்து கொள்வதுதான் கவலை அளிக்கிறது.

நான் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்ற வகையில் கூறுவது என்னவென்றால் அமாவாசையில் சிரஞ்சீவி அறிக்கை வெளிவந்தால் ஒர்க் அவுட் ஆகும். எஸ்.வி.சேகர் அறிக்கை எந்த நாளில் வெளி வந்தாலும் அதன் கதி அதோ கதிதான். வாஸ்து,வாஸ்து என்று அரற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு இன்று ஏன் இந்த கதியில் இருக்கிறது?

அமாவாசை என்றால் என்னவோ ஏதோ என்னும் பிரமைகள் உள்ளன. எனவே அமாவாசை குறித்து சில வரிகள்:
இன்று அமாவாசை. அதாவது சூரிய ,சந்திரர்கள் ஒரே ராசியில்,ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்கள். சூரியன் ஆத்ம காரகன்,சந்திரன் மனோகாரகன். சூரியன் அறிவை தருபவன், சந்திரன் உணர்ச்சியை ஊட்டுபவன். சாதாரணமாக மனம் ஒரு பாதை, ஆத்மா ஒரு பாதையில் போகும். அறிவு சொல்வதை உணர்ச்சி ஏற்காது. உணர்ச்சி செல்லும் பாதையை அறிவு ஒப்பாது. மொத்தத்தில் அமாவாசை என்றால் நல்ல கான்ஸன்ட்ரேஷன் ஏற்படும் அவ்வளவே.

இதில் அவரவர் ராசிக்கு சூரிய ,சந்திரர்கள் எந்த பாவத்துக்கு ஆதிபத்யம் வகிக்கிறார்கள், எங்கே சேர்கிறார்கள் என்பதை பொருத்து பலன் வேறுபடும். உதாரணமாக, சிம்மத்துக்கு சூரியன் ராசியாதிபதி,சந்திரன் விரயாதிபதி. இதனால் அமாவாசை என்பது சிம்மத்துக்கு விரயத்தை தரவே வாய்ப்பு அதிகம்.


இன்றைய அமாவாசை சூரிய சந்திரர்கள் விருச்சிகத்தில் சேர்கின்றனர். விருச்சிகம் இவர்களுக்கு 4,9 க்கு அதிபதியான செவ்வாயின் வீடு. செவ்வாய் இப்போது 11 ல் உள்ளார். இது ப்ளஸ் பாயிண்ட். 2,11 க்கு அதிபதியான புதனும் இங்கு சூரிய,சந்திரரோடு சேர்கிறார். இதுவும் ப்ளஸ் பாயிண்ட் தான். ஆனால் விரயாதிபத்யம் உள்ள சந்திரன் சேர்வதால் தன நஷ்டம்,வாக்கு தவறுதல்,வீண்செலவு,வீடு,தாய் விஷயத்தில் மனக்கஷ்டம் இத்யாதியும் ஏற்படலாம்.