அன்னையவள் பின்னிருக்க என்னிலென்ன தயக்கம்.
கண்ணென அவளென்னை காத்திருக்க இனியென்ன மயக்கம்
அகோ வாரும் பிள்ளாய் ! இனி சகலமும் முடிப்பேன் தூளாய்
எழுவேன் இனி சேரன் கை வாளாய்
சுய நலம் என்பது எனிலில்லை
பொதுநலம் ஒன்றே என் எல்லை
எல்லை தாண்டி செல்வதில்லை
சுயநலம் என்றும் வெல்வதில்லை
அவளை வியப்பேன்,அவளில் லயிப்பேன் அவளே இங்கு என் காவல்
நானோ என்றும் அவள் ஏவல்.
கோள்கள் யாவும் கோல விழி அசைவிற்கேற்ப பலன் தருமே
அவள் விழி மொழி அறிந்த வித்தகன் நான்
வருவதை உரைப்பேன் கேளீரோ?(நான்)